மகனுக்காக அஜய் கிருஷ்ணா செய்த செயல்.. கடமை உணர்ச்சி உள்ள தந்தை என மனைவி பாராட்டு
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா தன்னுடைய மகனை தாலாட்டி தூங்க வைக்கும் வீடியோவை அவருடைய மனைவி ஜெசி பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த அஜய் கிருஷ்ணாவுக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.
குட்டி குழந்தைக்கு தன்னுடைய பாடல் திறமையால் தாலாட்டு பாடி அஜய் கிருஷ்ணா தூங்க வைத்ததை அவருடைய மனைவி அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் அஜய் கிருஷ்ணாவின் வீடியோவை வெளியிட்டு அவருடைய மனைவி பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

ரம்யமான பாடல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போலவே மிமிக்ரி செய்து பாடியதன் மூலமாகவே பலருடைய மனங்களில் நீங்காத இடத்தை இப்ப வரைக்கும் பிடித்துக் கொண்டிருக்கிறார். உதித் நாராயணன் பாட்டை கேட்கும் போதெல்லாம் அஜய் கிருஷ்ணா நினைவிற்கு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களை தத்துரூபமாக பாடி ரசிகர்களின் மனதை வருடி இருக்கிறார்.

இரண்டு முறைப்படி திருமணம்
இந்த நிலையில் தன் அஜய் கிருஷ்ணா சமீபத்தில் தான் காதலித்து வந்த ஜெசி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி கோவிலிலும், கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சிலும் வைத்து நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்கள். ரசிகர்களும் வாழ்த்து கூறினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாள் அன்று அவருடைய மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இதற்கு அதிகமானோர் ஆசீர்வாதங்களை கூறி வாழ்த்து கூறி வந்தனர்.

அக்காவால் கிடைத்த வாய்ப்பு
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் அதிகமான பாடல்களை பாடிவரும் அஜய் கிருஷ்ணாவிற்கு மூன்று அக்காக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயார் சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில் அவருடைய அக்காவின் அரவணைப்பில் தான் இருந்து வந்திருக்கிறார். அஜய் கிருஷ்ணா அக்கா ஒருவரின் முயற்சியினால் தம்பியின் பாட்டு திறமையை வெளியே கொண்டு வந்து இருக்கிறார். அதன் மூலமாகத்தான் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணான கண்ணே கலங்காதடி என்ற பாடலை ஆல்பம் போல பாடி பதிவிட்டிருந்தார்.

இணையத்தில் காதல்
இந்த வீடியோவை பார்த்த ஜெஸி அப்போது இவருக்கு நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு நன்றி கூறிவிட்டு ஜெஸியின் புகைப்படத்தை பார்த்த அஜய் கிருஷ்ணா அவருடைய நீளமான முடி மீது காதல் ஏற்படவே இருவரும் நண்பர்களாக பழகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது இவர்களின் காதலுக்கு சாட்சியாக ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இந்த செய்தியை சமீபத்தில் ஜெஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

கடமை உணர்ச்சி உள்ள தந்தை
இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா தன்னுடைய குட்டி மகனை தாலாட்டி தூங்க வைத்திருக்கிறார். அந்த வீடியோவை அவருக்கே தெரியாமல் ஜெஸி எடுத்து அதை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து அந்த வீடியோவிற்கு கடமை உணர்ச்சி உள்ள ஒரு தந்தை என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். தற்போது அது அதிகமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications