சூப்பர் சிங்கர் பிரபலங்களுக்கு பிரியங்கா வைத்த திடீர் விருந்து.. அப்போ அந்த செய்தி உண்மைதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சூப்பர் சிங்கர் பிரபலங்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுக்கு அசைவ விருந்து வைத்திருக்கிறார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினிகள் என்று சொன்னதுமே ஒரு சில தொகுப்பாளிகளின் முகம் தான் டக்கென்று நினைவுக்கு வரும். அந்த வகையில் பிரியங்கா பலருக்கும் தெரிந்தவர் தான். பிரியங்கா விஜய் டிவியில் பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார். தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டராக விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் பிரியங்கா குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது திருமணம்
சில மாதங்களுக்கு முன்புதான் பிரியங்காவிற்கு முதல் திருமணம் விவாகரத்து ஆன செய்தியே தெரியவந்தது. அப்போது இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே பிரியங்கா அவருடைய கணவர் குறித்து பேசவில்லை என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் தன்னுடைய விவாகரத்து செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத பிரியங்கா தன்னுடைய இரண்டாவது திருமண புகைப்படங்களை பகிர்ந்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
இணையத்தில் தேடல்
பிரியங்காவின் இரண்டாவது கணவர் யார், அவருடைய முதல் கணவர் யார்? முதல் கணவரோடு எதனால் பிரிவு ஏற்பட்டது? என்றெல்லாம் சோசியல் மீடியாக்களில் தேடி வந்தனர். அதேபோல சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய போது பிரியங்கா பற்றி அதிகமான விமர்சனங்கள் வந்தது.
சுசித்ரா குற்றசாட்டு
அந்த நேரத்தில் கூட பாடகி சுசித்ரா தன்னுடைய உறவினரை தான் பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரியங்கா சரி கிடையாது என்று பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதற்கும் பிரியங்கா எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. தன்னை பற்றி எவ்வளவு வதந்திகள் பரவினாலும், சர்ச்சைகள் பரவினாலும் அதற்கு பதில் கொடுக்காமல் தன்னுடைய வேலையிலேயே கவனமாக இருக்கிறார்.
நண்பர் திருமணம்
இப்போது இவருடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. அதைத் தொடர்ந்து பிக் பாஸில் இருந்து தன்னுடைய நண்பர்களாக இருக்கும் அமீர் பாவனியின் திருமணத்தில் ஹெஸ்ட் ஆக பிரியங்கா கலந்து கொண்டார். அமீருடைய அக்காவாக மாறி பாவனிக்கு நாத்தனார் முடிச்சு போட்டு இருந்தார்.
புதிய தொகுப்பாளினி
தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பிரியங்கா விஜய் டிவியில் தான் பல வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி டீமுக்கு அசைவ விருந்து வைத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வார எபிசோடில் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லட்சுமி பிரியா தான் வந்திருந்தார்.

அசைவ விருந்து
அதுபோல விஜய் டிவி உரிமை கலர்ஸ் தமிழ் குடும்பத்திடம் கைமாறி இருக்கும் நிலையில் பிரியங்காவை விஜய் டிவியில் இருந்து வெளியே அனுப்ப முடிவு செய்ததால் தான் பிரியங்கா திடீர் திருமணம் செய்து கொண்டார் என்றும் சிலர் பரப்பி வருகிறார்கள். இப்போது பிரியங்கா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சூப்பர் சிங்கர் டீமுக்கு பிரியாணி விருந்து வைத்திருக்கும் விஷயம் கூட அவர் இந்த சேனலை விட்டு விலகப் போவதை குறித்து தான் அவர் விருந்து வைத்திருக்கிறார் என்று சிலர் கூறி வருகிறார்கள்.
லட்சுமி பிரியா அறிவிப்பு
ஆனால் சூப்பர் சிங்கரில் கடந்த வாரத்தில் லட்சுமி பிரியா நான் இப்போதைக்கு மட்டும்தான் வந்திருக்கிறேன் இந்த இடத்திற்கு சொந்தக்காரியான பிரியங்கா மீண்டும் வருவார் என்று அறிவித்திருந்தார். இதனால் பிரியங்கா தான் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications