Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படி நடக்கும்னு நினைக்கல! 2 மணி நேரம் அழுதேன்.. சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் காயத்ரி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக காயத்ரி தேர்வானார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது இந்த நிகழ்ச்சியில் நடந்த பல சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார். இந்த பேட்டியில் இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தால் இரண்டு மணி நேரம் அழுது கொண்டிருந்தேன் என்று காயத்ரி பேசியிருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டும் அடுத்தடுத்த சீசன்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது அதிகமான விமர்சனங்கள் வந்தது.

Super Singer Vijay TV

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் காயத்ரி

ஆனாலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து இப்பொழுது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்ற இரண்டு பிரிவாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகி காயத்ரி வெற்றி பெற்று இருந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பலர் இப்போது பின்னணி பாடகர்களாக சினிமாவில் பிரபலமாக இருக்கிறார்கள். அதில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதி உட்பட பலரை சொல்லலாம். அந்த வரிசையில் காயத்ரியும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் சிங்கர் காயத்ரி அழுகை

இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் காயத்ரி பேசி இருந்தார். அப்போது ஃபைனலிஸ்ட் ஆக முதலில் தேர்வு செய்யப்படாமல் இருந்தது குறித்து அதில் விளக்கம் கொடுத்து இருந்தார். அப்போது காயத்ரி பேசும்போது, எனக்கு அந்த கப் அடிக்க வேண்டும் என்று எண்ணமெல்லாம் இல்லை. ஜாலியா பாட வேண்டும் என்று தான் இருந்தது. ஒருமுறை எனக்கு கோல்டன் ஷவர் கிடைக்கவில்லை என்று நான் அந்த நிகழ்ச்சியில் அழுதுவிட்டேன்.

பாட்டி சொன்ன ஆறுதல்

நான் பைனலிஸ்ட் ஆவேன் என்று ஆரம்பித்தில் நினைத்து இருந்தேன். ஆனால் ஒரு சின்ன தவறால் எனக்கு கோல்டன் ஷவர் கிடைக்கவில்லை. அதற்காக நான் இரண்டு மணி நேரம் அழுது கொண்டு இருந்தேன். அப்போது ஒரு பாட்டி எனக்கு யாருன்னு தெரியாது அவங்க என்னிடம், "இதற்கெல்லாம் நீ அழுகாத, நான் உனக்காக மொட்டை அடிக்கிறேன்" என்று சொன்னாங்க. அதற்குப் பிறகு நான் எந்த இடத்திலும் அழவே இல்லை.

சூப்பர் சிங்கரால் கிடைத்த உறவு

இந்த நிகழ்ச்சி நமக்கு எவ்வளவு பெரிய உறவுகளையும், நம்பிக்கையும் கொடுத்து இருக்கிறது. இதற்காக நாம் அழக்கூடாது என்று முடிவெடுத்தேன். அதுபோல நான் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டதுமே பலர் சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் வீட்டு குழந்தை ஜெயித்தது போன்று என்னுடைய வெற்றியை கொண்டாடினார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சூப்பர் சிங்கர் செட்டில் நாங்க எல்லாருமே நண்பர்களாகத்தான் இருந்தோம். இப்போது அந்த செட்டை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறோம் என்று காயத்ரி பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+