வெண்ணிற ஆடை மூர்த்தியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காரு பாருங்க! அதுவும் பிரபல நிகழ்ச்சியில்
சென்னை: பழம்பெரும் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி பல திரைப்படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்தாலும் சமீபத்தில் அதிகமாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் பல வருடம் கழித்து இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் மனோ 40 என்ற தலைப்பில் பாடல்கள் பாடப்படுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வெண்ணிறாடை மூர்த்தியை பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிக்காட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் தற்போது வெளியான ப்ரோமோவில் வெண்ணிற ஆடை மூர்த்தி கலகலப்பாக பேசியிருக்கிறார்.

பொதுவாக சினிமாவில் இன்றைக்கு பல நடிகர்களும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய மூன்று தலைமுறைக்கு மேலான பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை மூலமாகவும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்துள்ளார். எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டுமின்றி பல இளம் நடிகர்களுடன் வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார். சொல்லபோனால் இவருடன் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லலாம்.

அதிலும் அந்த காலத்தில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம்வந்த பல நடிகர்களுக்கு போட்டியாக தனது இரட்டை அர்த்த நகைச்சுவைகளால் தனது தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டதோடு பலரை தனது ரசிகர்களாக உருவாக்கிக் கொண்டவர் தான் வெண்ணிறாடை மூர்த்தி. இவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சீரியல்களிலும் களமிறங்க தொடங்கிவிட்டார்.
வெண்ணிறாடை மூர்த்தி கலந்து கொண்ட மீண்டும் மீண்டும் சிரிப்பு நிகழ்ச்சி 5 ஆண்டுகள் ஒளிபரப்பானது. அது இப்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பெரிய திரையில் வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தவர்கள் தான். இவர்களில் சிலர் சின்னத்திரையில் உதயமான நேரத்தில் அதை பற்றி வெளிப்படையாக கிண்டல் செய்தவர்கள்.
பெரியதிரையில் தொடர்ந்து நீடிக்க முடியாத நேரத்தில் சின்னத்திரைக்கு வந்து இதுதான் அதிக அளவில் மக்களை சென்றடைகிறது என்று கூறவும் செய்தவர்கள்தான். அந்த வகையில் தன்னுடைய காமெடி திறமையால் சின்னத் திரை ரசிகர்களையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தவருக்கு ஜீ தமிழில் இருந்து கிடைத்தது பம்பர் பரிசு.
வெண்ணிறாடை மூர்த்திக்கு ஜோதிடத்தில் இருந்த திறமையை பார்த்து அவருக்கு ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஜோதிட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் வெறும் ஜோதிடத்தை மட்டும் கூறாமல் இடையிடையே புராணக்கதைகளையும் சுவாரசியமாக கலந்து கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் சில வருடங்களாக வெண்ணிற ஆடை மூர்த்தி எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவருக்கு வயது மூப்பு ஏற்பட்டு விட்டதால் இவர் நடிப்பை விட்டு விலகிவிட்டார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக்ஸ்டார் மனோ 40 என்ற தலைப்பில் பாடல்கள் பாடப்படுகிறது. அதில் முதல் முறையாக பாடகர் மனோவிற்காக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது வெண்ணிற ஆடை மூர்த்தி பேசுகையில் ஆயுசு முழுக்க ஆயுசு முழுக்க அன்போடும், பாசத்தோடும், அரவணைப்போடும் இருந்த ஒரு ஆளை புள்ளனு சொல்றதுல தவறு இல்ல...

அதனால மனோ என்னுடைய பிள்ளைதான். அதுபோல ஒரு காலத்தில் நான் ரொம்ப நல்ல பாடுவேன்னு என் சொந்தக்காரங்க எல்லாரும் சொல்லுவாங்க என்று அவர் கலகலப்பாக பேச அங்கிருந்து அனைவரும் கைதட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் ப்ரோமோ வெளியான பிறகு இவருக்கு எவ்வளவு வயசு ஆனாலும் இவருடைய காமெடி மட்டும் கொஞ்சம் கூட குறையலையே என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications