சூப்பர் சிங்கரில் பலரை கண்கலங்க வைத்த நடிகர் வினோத் பாபு.. அடடா அந்த எக்ஸ்பிரஷன்! பாட்டு வேற இருக்கே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத சில கூஸ்பம்ப் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இதுவரைக்கும் நடிகர் "வினோத் பாபு"வை சீரியலில் கதாநாயகனாக பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
சமீபத்தில் "மஞ்சுமல் பாய்ஸ்" திரைப்படம் வெளியான பிறகு நடிகர் "கமல்ஹாசன்" நடிப்பில் வெளியான "குணா" திரைப்பட பாடல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதுவும் "இது மனிதர் உணர்வு கொள்ள மனித காதல் இல்லை" என்று அந்த பாடலில் வரும் வசனங்கள் instagram, ஃபேஸ்புக், ட்விட்டர் என்று எந்த சமூக வலைத்தள பக்கங்களை திறந்தாலும் அங்கே ரீல்ஸ்களாக தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

இப்படியான நிலையில் இந்த பாடலை காப்பி ரைட் இல்லை என்ற காரணத்தால் சீரியல்களில் இனி ரசிகர்களின் காது தேய்கிற வரைக்கும் பின்னணியில் ஓட விட்டு விடுவார்கள் என்று ரசிகர்கள் பயந்து போயிருந்தனர். ஆனால் இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அதாவது சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் டூயட் ரவுண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சீரியல் நடிகர் வினோத் பாபு ஜீவிதாவோடு சேர்ந்து "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கவிதையே" என்ற பாடலை பாடியபடியே அப்படியே குணா திரைப்பட காட்சிகளை ரீகிரியேட் செய்திருக்கின்றனர். இது அங்கிருந்த ரசிகர்களை மட்டும் அல்லாமல் இந்த வீடியோ பார்க்கும் ரசிகர்களையும் கண்கலங்க வைத்திருக்கிறது. அதிலும் குணா கெட்டப்பில் நடிகர் வினோத் பாபு செய்த சேட்டைகளும், எக்ஸ்பிரஷனும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது.
ஒரு சில இடங்களில் இது வினோத் பாபுவா அல்லது "இயக்குனர் அட்லி"யா என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். அந்த அளவிற்கு இருவருடைய உருவ ஒற்றுமையும் ஒரே போல இருக்கிறது. விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்த சீரியல் நடிகர் வினோத் பாபு அதற்குப் பிறகு தென்றல் வந்து என்னை தொடும் என்று சீரியலிலும் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் ஆரம்பத்தில் திமிரான கேரக்டரில் நடித்திருந்தாலும் நாட்கள் போக போக இவருக்கு அதிகமான பேன்ஸ் பாலோவர்ஸ் வந்து விட்டனர். அதனாலேயே இந்த சீரியல் முடிவடைந்த பிறகு வினோத் பாபு அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பிலேயே ரசிகர்கள் காத்திருந்தனர். பல மாதங்களுக்கு பிறகு இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடியபடி டான்ஸ் ஆடி தன்னுடைய எக்ஸ்பிரஷனை காட்ட அதை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம், whatsapp போன்றவற்றில் இந்த வீடியோக்களை ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல ஜீவிதா மற்றும் வினோத் பாபுவின் எக்ஸ்பிரஷன் மற்றும் பாடலை கேட்டு அந்த அரங்கத்தில் இருந்த நடுவர்கள் மட்டுமல்லாமல் அங்கு பார்வையாளர்களாக இருந்தவர்களும் சக போட்டியாளர்களும் தங்களையும் அறியாமல் எழுந்து நின்று கைதட்டி இவர்களுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications