Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் ஸ்டார் ரஜினியே மனைவி கிட்ட காசு கேட்பாராம்! கெனிஷாவை பார்த்தால்? ஜெயம் ரவி மாறணும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பூர்வமாக வேண்டுமானால் ஜெயம் ரவி பிரிந்து போகலாம். ஆனால் 2 பிள்ளைகளுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது.. விவாகரத்து வழக்குகளில், பிள்ளைகளுக்கு 18 வயது வரும்வரை நீதிமன்றங்கள் விவாகரத்துக்களை யாருக்குமே தரக்கூடாது. 18 வயதுக்கு பிறகு பிள்ளைகளின் கவனத்தையும் கொண்டு விவாகரத்துகளை நீதிமன்றங்கள் தரவேண்டும் என்று தன்னுடைய கருத்தை மீண்டும் ஆணித்தரமாக எடுத்து வைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா

2 நாட்களுக்கு முன்பு சேகுவேரா சேனல் ஒன்றுக்கு தந்திருந்த பேட்டியில், "சினிமாவையும் நிஜம் என்று நம்பக்கூடிய மக்கள் இங்கு இருக்கும்போது, பொதுமக்கள் பார்வையில் ஜெயம் ரவியின் நடவடிக்கை எப்படி தெரியும்? சமூகத்துக்கான பார்வை இருக்கும்தானே?

Television Rajini Kenisha

ஜெயம் ரவி செய்து கொண்டிருப்பதை போல ஆர்த்தி செய்திருந்தால்? ஒரு ஆணுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சி அல்லது பொதுநிகழ்ச்சிக்கு சென்றிருந்தால், ஆர்த்தியை இந்த உலகம் என்ன பேசும்? ஆர்த்தியை எவ்வளவு தாக்கி பேசும் இந்த சமூகம்? ஆர்த்தியை தவறாக பார்க்கும் இந்த சமூகம், ஜெயம் ரவியையும் பார்க்கணும்தானே? இந்த விஷயத்தில் மனசாட்சியோடு பேசணும்.. ஜெயம் ரவி செய்தது தவறு.

சமூகத்துக்கான மரியாதை

வாழ விரும்பவில்லை என்றுதானே கோர்ட்டுக்கு போனீங்க? அப்படியானால் கோர்ட்டுக்கென ஒரு மரியாதை உள்ளதுதானே? சட்ட தீர்ப்பு வரும்வரை காத்திருக்கலாமே? சட்டத்தையும் மதிக்காமல், சமூகத்தையும் மதிக்காமல், மனைவியையும் மதிக்காமல் பிள்ளைகளை பற்றியும் கவலைப்படாமல் உள்ளதுபோல இருக்கிறது ஜெயம் ரவி செய்தது.

கெனிஷாவுடன் நட்பாக மட்டுமே பழகுவதாக சொன்னார். ஆனால், இன்று அந்த நட்பும் சேர்ந்து களங்கப்பட்டுவிட்டது. பெண்கள் விரும்பக்கூடிய, மதிக்கக்கூடிய நடிகர் ஜெயம் ரவி.. அவரே இப்படி நடந்து கொண்டது ஆச்சரியமாக உள்ளது. சமூகத்துக்கம் ஒரு பார்வை உள்ளதால், அதற்கும் ஒரு மதிப்பு தர வேண்டும்-

மிரட்டி பணிய வைத்துள்ளாரா

கெனிஷா ஜெயம் ரவியை மிரட்டி, தன்னிடம் வைத்துள்ளார் என்றுகூட பேசுகிறார்கள். இப்படி பல பேச்சுக்கள் வரத்தான் செய்யும். ஆனால் உண்மை என்ன என்பது அவர்களுக்குதான் தெரியும்.. பொதுவாக, 2 உறவுகளுக்குள் 3வதாக ஒரு உறவு வருகிறது என்றாலே கருத்து முரண் என்பது எளிதாக வந்துவிடும். தன்னுடைய மனைவி பற்றி, இன்னொரு பெண்ணிடம் குறைகளை சொன்னால், அவன் நல்ல கணவனே கிடையாது. இது மனைவிக்கும் பொருந்தும்.

ஜெயம் ரவி விஷயத்தில் பணப்பிரச்சனையோ, மாமியார் பிரச்சனையோ கிடையாது. இன்னொருவருடனான உறவு ஜெயம் ரவிக்கு ஏற்பட்டுள்ளதே காரணம். அதை நட்பு என்ற போர்வையில் மூடி மறைத்தும் முடியவில்லை. கெனிஷா கிடைத்ததும், ஆர்த்தியை கழட்டிவிடணும் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை? " என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், BBTCinema யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ஆரம்பத்திலும் சரி, இப்போதும்சரி, ஆர்த்தியின் நடவடிக்கைகள், மிகவும் நிதானமாகவும், பக்குவப்பட்டும் இருக்கிறது.. "உங்களை எவ்ளோ நம்பினோம்?" என்று ரசிகர்களே இன்று ஜெயம் ரவியை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. அதாவது, ஆரம்பத்திலிருந்தே ஆர்த்தியைவிடவும், ஜெயம்ரவியை அதிகமாக நம்பியது ரசிகர்கள்தான்..

தனுஷ் - ஐஸ்வர்யா

இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், அவரை நம்முடைய வீட்டு பிள்ளையாகவே பார்க்கிறோம். அதனால்தான், இத்தனை பேரும் அவர்மீது கொந்தளிக்கிறார்கள்..

தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து நடந்தது.. ஆனால், யாராவது இப்படி கொந்தளித்தார்களா? ஜெயம் ரவி - ஆர்த்தி அளவுக்கு தனுஷ் - ஐஸ்வர்யாவை பேசினார்களா? ஏனென்றால், தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே பிரிய தயாராக இருந்தார்கள்.. இங்கே ஆர்த்தி அப்படி தயாராக இல்லை..

கண்ணாடி டம்ளர்

தனுஷ், ஜெயம் ரவி இருவருமே இப்போது ஒரே மாதிரி ஆயிட்டாங்க.. அதுக்காக ஜெயம் ரவியை விட்டுவிட்டு போய்விட முடியாது. பெண் பித்தன் என்று சிலர் ஜெயம் ரவியை சொல்கிறார்கள்.. ஆனால், அவர் அப்படிப்பட்டவர் கிடையாது.. இதுவரை எந்த நடிகையுடனும் ஜெயம்ரவியை இணைத்து யாருமே பேசியதில்லை.. இது ஒரு கெட்ட நேரம்.. இதிலிருந்து விடுபட்டு ஜெயம் ரவி வெளியே வந்துவிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

இதுபோன்ற விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும். அந்தவகையில், ஆர்த்தி மிகவும் பக்குவத்தோடு இந்த விஷயத்தை கையாள்கிறார்.. கண்ணாடி டம்ளரை போல கவனத்துடன் அணுகுகிறார்.. குடும்பத்து பெண் போல கெனிஷா தெரியவில்லை.. ஆடையை வைத்து நான் சொல்லவில்லை.. விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு திருமணம் செய்து, குடும்பத்தை நடத்தக்கூடியவர் என்பதுபோல தெரியவில்லை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

எல்லாருமே இங்கு நல்லவர்கள்தான்.. மனைவிக்கு இல்லாத ஒரு விஷயம், வேறு பெண்ணிடம் ஆண்களை ஈர்க்க செய்யும் என்பது இயல்பானதுதான்.. அதுக்காக ஈர்க்கும் பெண்களை எல்லாம் தாலி கட்டி, மனைவியாக்கி குடும்பம் நடத்த முடியாது..

கணவன் - மனைவி பந்தம் என்பது காலகாலமாக தொடரும் பந்தம்.. கணவன் எவ்வளவு சம்பாதித்தாலும், அதை மொத்தமாக மனைவியிடம் தந்துவிட்டு செலவுக்கு மனைவியிடமே கை நீட்டுவதும், அதற்கு அந்த மனைவி சிறிது பணத்தை தருவதும், பிறகு செல்லமாக சண்டையை போட்டு கூடுதல் பணத்தை கணவன் வாங்குவதும் என்பது தம்பதிக்குள் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்..

இதெல்லாம் ஜெயம் ரவி இன்னும் அனுபவிக்கவில்லை என்றே தெரியவில்லை.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே செலவுக்கு, தன்னுடைய மனைவியிடம்தான் காசு கேட்பாராம்..

வலுவான காரணங்கள் இல்லை

வீட்டு நிர்வாகத்தையும், கணவனின் செலவினங்களை மனைவி பார்ப்பது ஒன்றும் தவறு கிடையாது.. அப்படிப்பட்டவர்கள்தான், நல்ல மனைவிகளாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு சேர்த்து வைப்பவர்களாகவும் இருப்பார்கள். ஜெயம் ரவி இதுவரை சொன்ன புகார்களை வைத்து பார்க்கும்போது, அதில் வலுவான காரணங்கள் இருப்பதுபோல தெரியவில்லை.

மாமியார் பிரச்சனை என்றால், மனைவியை அழைத்து கொண்டு 10க்கு 10 ரூமில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தியிருக்கலாமே? ஜெயம் ரவி இன்னமும் பக்குவப்பட வேண்டும். இங்கு சினிமா துறையிலேயே எத்தனையோ பேருக்கு பல கோடி ரூபாய் சொத்து இருந்தும், வாரிசு இல்லை.. யாரையும் காயப்படுத்த இப்படி சொல்லவில்லை.. ஆனால், பிள்ளைச்செல்வம் இல்லாமல் பல நடிகர்கள் உள்ளபோது, 2 சிங்கக்குட்டிகள் போல ஆர்த்தி 2 மகன்களை தந்திருக்கிறார்.. இதைவிட ஜெயம் ரவிக்கு வேறென்ன வேண்டும்?

குழந்தைகள் பாவம்

சட்டப்பூர்வமாக வேண்டுமானால் ஜெயம் ரவி பிரிந்து போகலாம். ஆனால் 2 பிள்ளைகளுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது.. விவாகரத்து வழக்குகளில், பிள்ளைகளுக்கு 18 வயது வரும்வரை நீதிமன்றங்கள் விவாகரத்துக்களை யாருக்குமே தரக்கூடாது. 18 வயதுக்கு பிறகு பிள்ளைகளின் கவனத்தையும் கொண்டு விவாகரத்துகளை நீதிமன்றங்கள் தரவேண்டும்..

கெனிஷாவை தூக்கி ஜெயம் ரவி மடியில் உட்கார வைத்து கொள்ளட்டும், அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை.. ஆனால், பிள்ளைகளை பற்றி பேசியாக வேண்டியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+