நான் ஓவர் ஆக்டிங் பண்றேனா? மன வேதனையில் பேசிய சூர்யா.. வருத்தத்திற்கு இதுதான் காரணமா?
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சூரியா பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய நடிப்பு குறித்து வரும் விமர்சனங்கள் குறித்து தன் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சூர்யா பற்றி அடிக்கடி சர்ச்சை செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சூர்யா ஜோதிகா எது செய்தாலும் அதை சிலர் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படம் வெளியான போது முதல் நாளே அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துவிட்டது.

சிவக்குமாரின் சர்ச்சை பேச்சு
அதனாலயே அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்த திரைப்படம் வெற்றி பெறாதது குறித்து கூட நடிகை ஜோதிகா வருத்தத்தை தெரிவித்து இருந்தார். அதுவும் அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
விஷால் விளக்கம்
ரெட்ரோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பற்றி அவருடைய தந்தை சிவக்குமார் பெருமையாக பேசியதை கூட பலர் ட்ரோல் செய்து இருந்தனர். தமிழ் சினிமாவில் சூர்யா தான் சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர், சூர்யாவுக்கு பிறகு யாரும் சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்று சிவக்குமார் பேசியது பலராலும் கலாய்க்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் விஷால் கூட விளக்கம் கொடுத்திருந்தார்.
விமர்சனத்திற்கு சூர்யா விளக்கம்
இந்த நிலையில் என்னை யாரும் ஆக்டர் என்று சொல்றதை விடவும் ஓவர் ஆக்டிங் ஆக்டர் என்று சொல்றாங்க. ஆனால் நான் பாலா அண்ணன் சொல்லிக்கொடுத்தபடி தான் நடிக்கிறேன் என்று பேட்டி ஒன்றில் சூர்யா வருத்தமாக பேசுகின்றார். இயக்குனர் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இருக்கும் பந்தம் பலருக்கும் தெரிந்ததுதான். நந்தா, பிதாமகன் போன்ற சூர்யாவின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படங்களை இயக்கியது பாலா தான்.
பாலா சொன்ன வார்த்தை
பாலா திரைப்படங்களில் நடிப்பதற்காக பலர் பயப்படுவார்கள். ஆனால் பாலா இயக்கத்தில் சூர்யா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடிப்பதாக ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகி இருந்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் பிரச்சனை என்றெல்லாம் அந்த நேரத்தில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று சூர்யா விளக்கம் கொடுத்தார்.
சூர்யாவின் வருத்தம்
இப்படியான நிலையில் சமீபத்தில் சூர்யா பேசுகையில், சிலர் என்னை ஓவர் ஆக்டிங் நடிகர் என்று விமர்சிக்கிறார்கள். சினிமாவில் அனுபவம் எத்தனை வருஷங்களாக இருந்தாலும் ஒவ்வொரு வேலையும் கற்றுக் கண்டு அதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று சூர்யா பேசியிருக்கிறார். அதோடு தன்னுடைய தம்பி கார்த்தி பற்றியும் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
தம்பி பற்றி பெருமை
அதில், என்னுடைய தம்பி கார்த்தி நடித்த மெய்யழகன் படம் அருமையாக இருந்தது. அந்த படத்தில் கார்த்தி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுபோல என்னால் இயல்பாக நடிக்க வராது. காரணம் அது அவருடைய ஸ்டைல். அதுல அவரை மாதிரி நான் நடிக்க முடியாது. அதுபோல எனக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கிறது. அது பாலா அண்ணா ஆரம்பத்திலேயே உருவாக்கிய விதம்தான்.
உங்கள் கருத்து
ஒரு காட்சி இருக்கிறது என்றால் அதற்கு முழுமையாக தன்னை தயார்படுத்த வேண்டும் என்று சொல்லித் தந்திருக்கிறார். அதேபோல நான் அந்த கேரக்டராக மாறி நடிக்கிறேன் அவ்வளவுதான். வேறு எதுவும் நான் ஸ்பெஷல் ஆக செய்வதில்லை என்று சூர்யா பேசியிருக்கிறார். சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படத்தை பார்த்து விட்டீர்களா நண்பர்களே? அதுபோல தன்னுடைய நடிப்பு பற்றி சூர்யா வருத்தமாக பேசியதை எப்படி பார்க்கிறீர்கள் பாஸ்?












Click it and Unblock the Notifications