தங்க நகை கிஃப்ட்.. கோயிலில் சர்ப்ரைஸ்.. திருட்டுத்தனமாக தாலி கட்டிய நடிகர்? 5வது கல்யாணமா: பிரபலம்
சென்னை: நடிகர் பாலா ஒரு பேட்டியில் "கடந்த வருடம் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.. தவறான மருந்தை எனக்கு தந்துவிட்டார்கள். பிறகு, மாற்றுமருந்து தந்து உயிர் தப்பி பிழைத்தேன்.. இது எனக்கு 2வது பிறவியும்கூட.. இந்த 2வது பிறவியை சந்தோஷத்துடன் வாழ நினைக்கிறேன்" என்றார். இந்த தகவலை, பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
AG Modern Media என்ற யூடியூப் சேனலில் பேசிய பயில்வான் ரங்கநாதன் "நடிகர் பாலா தமிழில், மலையாளத்தில் பல படங்களை நடித்தவர்.. இவர் ஒரு பின்னணி பாடகியை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தந்தையானார். ஆனால், தம்பதி இருவரும் பிரிந்துவிட்டார்கள்.. அதற்கு பிறகு, அடுத்த திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இதை பற்றி சமீபத்தில் பாலாவும், அவரது 5வது மனைவி கோகிலாவும் பேட்டி தந்தார்கள்.

நடிகர் பாலா: அப்போது பாலா சொல்லும்போது, "என்னுடைய மாமன் மகள்தான் கோகிலா.. என்னைவிட வயது மிகவும் குறைவு.. எனவே அவளை நான் சிறுமியாகத்தான் பார்க்க துவங்கினேன்.. பிறகு அவசர அவசரமாக என்னுடைய இந்த கல்யாணம் நடந்துவிட்டது. எனக்கு 5வது திருமணம் என்று எல்லாரும் சொல்கிறார்கள். அது கிடையாது.
என்னுடைய 2வது மனைவிதான் கோகிலா. முதலில், கோகிலாவை நான் திருமணம் செய்ய முடியாது என்றேன்.. சின்ன பிள்ளையை போய் எப்படி திருமணம் செய்வது? என்று நினைத்தேன்.
திருமண பந்தம்: அதற்கு என்னுடைய அம்மா, "நான் உங்க அப்பாவை விரும்பி கட்டிக்கல, வேறு வழியில்லாமல் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. அதனால், திருமண பந்தம் என்பது யார் யாருக்கு முடிச்சு போட்டிருக்கிறார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். அதனால் கோகிலாவை திருமணம் செய்து கொள்" என்று சொன்னார்.. பிறகு, என்னுடைய அப்பா, கோகிலாவின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன்.
கடந்த வருடம் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.. தவறான மருந்தை எனக்கு தந்துவிட்டார்கள். இதனால் நோய் தீவிரமாகிவிட்டது.. பிறகு, மாற்றுமருந்து தந்து உயிர் தப்பி பிழைத்தேன்.. இது எனக்கு அதிசயமான நிகழ்வு ஆகும்.. இது எனக்கு 2வது பிறவியும்கூட.. இந்த 2வது பிறவியை சந்தோஷத்துடன் வாழ நினைக்கிறேன்" என்றார் பாலா.
கோகிலா மறுப்பு: பிறகு கோகிலா சொல்லும்போது, "என்னை அவர் காதலிப்பது தெரியாது. என்னை அவர் திருமணம் செய்து கொள்ள போவதும் தெரியாது.. திடீரென கிப்ட் தருவதாக சொல்லி நகைக்கடைக்கு கூட்டிட்டு போனார்.. அங்கே தமிழ்நாட்டு தாலி மாதிரியும் இல்லாமல், கேரள தாலி மாதிரியும் இல்லாமல் நகை ஒன்றை வாங்கினார். அப்படியே என்னை கோயிலுக்கு அழைத்து சென்று, என் கழுத்தில் அந்த நகையை தாலியாக கட்டிவிட்டார். இது எனக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது, இன்பமாகவும் இருந்தது, ஏற்றுக் கெண்டேன்.
இப்படித்தான் என்னுடைய திருமணம் நடந்ததே தவிர, திட்டமிட்டு நடக்கவில்லை.. அதேபோல, நான் 2வது மனைவிதான்.. 5வது மனைவி கிடையாது என்று கோகிலாவும் அந்த பேட்டியில் உண்மையை சொன்னார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications