“என் கண்ணாடிப் பூ ஜோதிகா”, நெகிழ்ந்து பேசிய சூர்யா.. மேடையிலே சிவக்குமார் சொன்ன வார்த்தை, ஆடிப்போன அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா குறித்து நெகிழ்ச்சியாக பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து பேசிய சிவகுமார் சூர்யா பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்த சில திரைப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. சூர்யா குறித்து இணையத்தில் பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடித்த ரெட்ரோ திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் பட்டி தொட்டி எல்லாம் வைரலாகி கொண்டிருக்கிறது.

Surya Sivakumar Jodhika

ரெட்ரோ பட நடிகர்கள்

இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதற்காக பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அதுபோல நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், சுவாதிகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சூர்யா பேச்சு

அப்போது சூர்யா பேசும்போது அன்பான ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். உங்களுடைய அன்பினால் மட்டுமே நான் என்று பேச தொடங்கி இருந்தார். அதைத்தொடர்ந்து "ரெட்ரோ என்பது நாம் கடந்து வந்த காலத்தை குறிப்பது. அந்த காலத்தை என்னால் மறக்கவே முடியாது. இந்தப் படத்திற்கான சூட்டிங்கில் ஜெயராம் சார் முதல் பெஞ்ச் மாணவன் மாதிரி ப்ராக்டிஸ் பண்ணுவார். அதுபோல விது இந்த படத்துல ரொம்பவே கஷ்டப்பட்டான்.

வாழ்க்கை அழகானது

இந்த படத்தில் நாலு மாசம் தான் வேலை பார்த்தாலும் அத்தனை நடிகர்களும் சிரத்தை கொடுத்து உழைத்தவர்கள். படத்தில் ருக்மணியாக வந்ததற்கு நன்றி பூஜா. ஒரு படம் உருவாகுவதற்கு ஒரு சகோதரத்துவம் தேவையானது. 82 நாட்களில் படப்பிடிப்பு முடிஞ்சிடுச்சி. ஒவ்வொரு நாளையும் நான் என்ஜாய் பண்ணுனேன். கார்த்திக் சுப்புராஜ் ஐடில இருந்து சினிமாவுக்கு வந்திருந்தார். இப்படி ரிஸ்க்கு எடுப்பது தப்பு இல்ல.

கண்ணாடிப் பூ ஜோதிகா

எல்லாருக்கும் இந்த வாழ்க்கை அழகானது. நான் இயங்குவதற்கு முக்கியமான காரணமே உங்களுடைய அன்பு தான். இந்த அன்பு இருந்தால் எப்போதுமே நல்லா இருப்போம். நான் நடிகன் என்கிறதை தாண்டி அகரம் அறக்கட்டளை தொடங்கி நடத்துகிறேன். இதற்கெல்லாம் காரணமே நீங்கள்தான் என்று அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு தன்னுடைய மனைவி குறித்து பேசும் போது "என்னுடைய கண்ணாடி பூவான ஜோக்கு நன்றி" என்று சொல்லியிருந்தார்.

Surya Sivakumar Jodhika

சிவகுமார் சொன்ன வார்த்தை

அப்போது அங்கிருந்து சிவகுமார் கைதட்டி பாராட்டி இருந்தார். பிறகு சிவகுமார் சூர்யா குறித்து பேசி இருந்தார். அப்போது அவர் பேசும்போது நேருக்கு நேர் படத்தில் சூர்யா அவள் வருவாளா என்ற பாட்டு பண்ணி இருப்பார். அந்த பாட்டில் ஒரு இடத்தில் அவருடைய கண்களுக்கு குளோசப் வைத்திருக்கும். அதை பார்த்த தயாரிப்பாளர் சூர்யாவின் கண்களில் ஒரு பவர் இருக்கிறது, இந்த கண்களை பார்த்து தமிழ்நாட்டு பொண்ணுங்க தூக்கத்தை கெடுக்க போறாங்கன்னு சொன்னாரு.

Surya Sivakumar Jodhika

ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு

அப்படி சினிமாவே என்னன்னு தெரியாது இருந்த சூர்யாவை ஒரு நடிகனாக மாற்றிய மணிரத்தினத்திற்கும், வசந்த் அவர்களுக்கும் நான் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று மேடையில் பேச சிவக்குமார் பேச்சைக் கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் ஓவென்று கத்தி ஆர்ப்பரித்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+