தாலியால் வந்த வினை! இந்த உண்மையை மறைச்சுட்டாங்க! திடீரென முடிக்கப்பட்ட சீரியல்.. எஸ்வி சேகர் ஆதங்கம்
சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 'மீனாட்சி சுந்தரம்' என்ற தொலைக்காட்சித் தொடர் வெறும் நான்கு மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. இந்தத் தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் எஸ்.வி. சேகர் இது குறித்து ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மீனாட்சி சுந்தரம் தொடர்
மீனாட்சி சுந்தரம் சிரியில் ப்ரோமோ காட்சிகள் வெளியானதும் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது எஸ்வி சேகர் சீரியல் நடிகை உடன் திருமண கோலத்தில் இருப்பதை பார்த்ததும் அதிகமான விமர்சனங்களும் வந்தது. இந்தத் தொடரில் மூத்த நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஷோபனா முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தனர். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
முடிவுக்கான காரணம்
பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சீரியலின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து ஆகஸ்ட் 23 அன்று கடைசி அத்தியாயம் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடர் 100 நாட்களுக்குள்ளேயே முடிவுக்கு வந்ததால் எஸ்.வி. சேகர் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
போலி திருமணம்
"இந்த சீரியலின் கதை பற்றி கதாநாயகிக்கு கூட திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று சரியான உண்மை கதை சொல்லப்படவில்லை. 'ஃபேக் மேரேஜ்' என்று சொன்னார்கள். திருமணத்தில் என்ன ஃபேக் மேரேஜ்?" என்று எஸ்.வி. சேகர் கேள்வி எழுப்பினார். "என்னை விட நாற்பது வயது குறைந்த ஒரு பெண்ணிடம் கூட தாலி கட்டுவதைப் பற்றி சொல்லவில்லை. சினிமாவில் தான் பொய் கதையைச் சொல்லி கலைஞர்களை உள்ளே இழுப்பார்கள். ஆனால் தொலைக்காட்சியில் ஏன் அப்படி செய்கிறார்கள்?" என்று அவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
ரஜினியுடன் ஒப்பிடல்
"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வேண்டுமானால் அது செட் ஆகும். ஆனால் நான் வேறு. நான் டிராமா சூப்பர் ஸ்டார் மட்டுமே" என்று எஸ்.வி. சேகர் தனது தனித்துவத்தை வலியுறுத்தினார். "கடைசியில் நானும் அந்தப் பெண்ணும் பேசி நானும் உனக்கு தாலி கட்டவில்லை. நீயும் எனக்கு கழுத்து நீட்டவில்லை. இது ஒரு ஆக்சிடென்ட் போல எடுப்போம் என்று அந்த காட்சி எடுக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.
யார் இந்த எஸ்.வி. சேகர்
எஸ்.வி. சேகர் ஒரு நாடகக் கலைஞர் மற்றும் அரசியல்வாதி. அவர் தமிழகத்தில் பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது நகைச்சுவை நாடகங்கள் மிகவும் பிரபலம். 1980களில் அவர் சினிமா உலகில் நுழைந்தார். அவரது நகைச்சுவை மற்றும் வித்தியாசமான உடல்மொழி ரசிகர்களைக் கவர்ந்தது. 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது', 'அண்ணே அண்ணே' போன்ற படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. எஸ்.வி. சேகர் தனது பேச்சுகள் மூலம் பல சர்ச்சைகளை சந்தித்தவர். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பல முறை விவாதங்களுக்கு உள்ளாகின. இருப்பினும் அவருடைய நகைச்சுவை உணர்வும் நாடக அனுபவமும் அவரை ஒரு தனித்துவமான கலைஞராக அடையாளப்படுத்தின.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications