அரவிந்த்சாமி நடந்து கொண்ட விதம்.. சொல்ல வார்த்தை இல்லை.. எமோஷனலான சன் டிவி சீரியல் நடிகை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் நடிகை சுவாதி கொண்டே கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் அரவிந்த் சாமி தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பேட்டி ஒன்றில் சுவாதிகா பேசியிருக்கிறார்.
ஒரு சில நடிகைகள் சீரியலில் அறிமுகமாகி திரைப்படங்களிலும் பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் தமிழில் பிரபலமான சுவாதி கொண்டே அதை தொடர்ந்து சன் டிவியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு நடிகர் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த திரைப்படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பேட்டிகளில் பேசியிருக்கிறார். அப்போது நானும் அரவிந்த் சுவாமியும் நடித்த காட்சிகள் திரையில் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
நான் சின்ன வயசிலிருந்து அரவிந்த்சாமியின் ரசிகை ஆனால் அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பக்கத்தில் பார்த்த போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவர் ரொம்பவே கலராக இருந்தார். அவருடைய கலரை பார்த்து நான் பிரமித்து போய்விட்டேன். இப்படி இருப்பாங்களா? என்று நினைத்தேன். அதற்கு பிறகு அவரோடு காட்சிகள் வந்தது. அவரை நான் கட்டிபிடிப்பது போன்ற காட்சிகள் இருந்தது.
ஆனால் என்னால் அவரை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நான் பதட்டத்தோடு இருந்ததை பார்த்து அரவிந்த்சாமி என்னிடம் இயல்பாக இருங்கள். இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. அப்போது சீரியலில் நம்மோடு நடிப்பவர்கள் நமக்கு ஒரு கம்ஃபர்ட் கொடுப்பது போல தான் அரவிந்த்சாமி எனக்கு கொடுத்தார். அவரை இதற்கு முன்பு நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் ஏதோ பல வருடம் பந்தம் இருப்பது போல அவர் நடந்து கொண்டார்.
அவரைப் பார்த்தபோது என் மனதிற்குள் இருந்த சந்தோஷத்தை சொல்லுவதற்கு வார்த்தையே இல்லை என்று சுவாதி கொண்டே பேசியிருக்கிறார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மெய்யழகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் முழுக்க உறவுகளின் அன்பை சொல்லும் விதமாகத்தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக திரைப்படங்களில் அதிகமாக வன்முறைகள் தெறித்துக் கொண்டிருக்கிறது.
ரத்தம்,கத்தி, துப்பாக்கி சத்தம் இல்லாத திரைப்படங்கள் இருக்கா என்று விரல் விட்டு எண்ணும் வகையில் தமிழ் சினிமா போய்க்கொண்டிருக்கும் நிலையில் மெய்யழகன் திரைப்படம் குடும்பத்தினரை வெகுவாக கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த சீரியல் நடிகை சுவாதிகா பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications