தேவா பட சூட்டிங்காக விஜய் வீட்டுக்கு போன போது.. எதிர்பார்க்காத சம்பவம்! அஜித் வருத்தப்பட்டாரு! நடிகை சுவாதி ஓபன்
சென்னை: 90-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்த சுவாதி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆரம்ப கால அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சுவாதி பேட்டி
அந்த பேட்டியில், தனது முதல் படமான தேவா படத்தின் போட்டோஷூட் சம்பவத்தை சுவாதி நினைவுகூர்ந்துள்ளார். அந்த படத்தை இயக்கிய எஸ். ஏ. சந்திரசேகர் வீட்டிலேயே ஹீரோ-ஹீரோயின் போட்டோஷூட் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாம். அதற்காக சுவாதியும் சென்றிருந்தாராம். அப்போது கேமராமேன் "இப்படி நின்று கொள்ளுங்கள், அப்படி போஸ் கொடுங்கள்" என்று சொல்ல, அதற்கேற்ப அவர் போஸ் கொடுத்து கொண்டிருந்ததாக கூறினார்.
அந்த நேரத்தில் திடீரென ஒருவர் அங்கு வந்து சுவாதி தோளில் கை வைத்தாராம். அவரை பார்த்த சுவாதிக்கு யார் என்று தெரியாமல் குழப்பமாக இருந்ததாம். பின்னர் "இவர்தான் இந்த படத்தின் ஹீரோ" என்று சொல்லியபோது தான், அது விஜய் என்று தெரிந்ததாக சுவாதி தெரிவித்துள்ளார். "அந்த நேரத்தில் எனக்கு பெரிய நடிகர்கள் என்றால் ரஜினி, கமல் போன்றவர்கள்தான் தெரியும். விஜய் யார் என்று தெரியவில்லை. பிறகு தான் அவர் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் மகன் என்று சொன்னார்கள்" என்று அவர் சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.
அஜித் குமார் வருத்தம்
அதன் பிறகு சுவாதி, அஜித் குமார் உடன் வான்மதி மற்றும் உன்னைத்தேடி போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக "வான்மதி" படப்பிடிப்பு காலத்தில் அஜித் மிகவும் அமைதியானவராக இருந்ததாகவும், சினிமா பின்னணி இல்லாததால் தனக்கு யாரும் இல்லை என்ற வருத்தத்தை அவர் பகிர்ந்ததாகவும் சுவாதி கூறியுள்ளார்.

சினிமாவை விட்டு விலகல்
திரைப்படங்களில் வெற்றிகரமாக நடித்து வந்த சுவாதி, திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார். அதன் பின்னர் 2009-ஆம் ஆண்டு "யோகி" படத்திற்குப் பிறகு சில காலம் முழுமையாக திரையுலகை விட்டு விலகியிருந்தார். தற்போது மீண்டும் நடிக்க திரும்பியுள்ள அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் சீரியலில் ஹீரோவின் அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜய் வளர்ச்சி
இதே நேரத்தில், அந்த காலத்தில் புதுமுகமாக இருந்த விஜய் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தந்தை இயக்கிய படங்கள் மூலம் அறிமுகமான அவர், தனது முயற்சி, உழைப்பு மற்றும் ரசிகர்கள் ஆதரவால் இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராக வளர்ந்துள்ளார்.
மொத்தத்தில், சுவாதி பகிர்ந்த இந்த பழைய நினைவுகள், ஒரு காலத்தில் புதுமுகமாக இருந்த நடிகர்கள் இன்று எவ்வளவு பெரிய உயரத்தை எட்டியுள்ளனர் என்பதை நினைவூட்டுவதுடன், தமிழ் சினிமாவின் மாற்றங்களையும் காட்டுகிறது.
-
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications