நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட்.. சீறிய விஷால்.. செருப்பால அடிங்க என ஆவேசம்
சென்னை: மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் அவலங்களை ஹேமா கமிட்டி அம்பலப்படுத்திய பிறகு நடிகராகவும் தமிழ் நடிகர் சங்க தலைவராகவும் இருக்கும் விஷால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்களை உடனே செருப்பால் அடிங்க என்று பேட்டி கொடுத்து இருக்கிறார்.
சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து பலரும் வெளிப்படையாக பேசி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கும் இதுபோல தொந்தரவுகள் இருக்கிறது என்று நடிகைகள் பலர் பேட்டி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சங்க தலைவராக இருக்கும் விஷால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேரளாவை போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தமிழ் நடிகர் சங்கம் நிற்கும் என்று உறுதி கூறியிருக்கிறார்.

அதோடு மேலும் அவர் பேசுகையில், கண்டிப்பாக எவனோ ஒருத்தன் சினிமா வாய்ப்புக்காக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூப்பிடுவான்... பெண்ணை மதிக்காமல் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முயற்சி பண்ணுவாங்க.. இதை எலலாம் தவிர்க்க ஒரே ஒரு விஷயம் இருக்கு, என்னன்னா அந்தப் பெண்ணிற்கு மன தைரியம் வேணும்.
அந்தப் பெண்மணி அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட அந்த மாதிரி ஆட்களை செருப்பால அடிக்கணும். அதுதான் நான் சொல்லுவேன், வேற ஒன்றும் இல்லை என்று விஷால் கூறி இருக்கிறார். அதோடு மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி விசாரணை நடைபெற்றது போல தமிழ்நாட்டிலும் நடைபெறுமா? என்று கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக பண்ணுகிறோம் என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டிலும் 10 பேர் கொண்ட குழு வைத்து ஒரு விஷயம் பண்ணுறோம். அதற்கான ஏற்பாடுகள் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான அறிவிப்பு சீக்கிரம் வரும். அதை செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. இப்போ நடிகர் சங்கம் என்பது வெறும் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும் சரிசமமாக இருக்காங்க. பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது எங்களுக்காக இருக்காங்களா என்று கேட்கும் போது அவங்களுக்கு நடிகர் சங்கம் நாங்க இருக்கிறோம் என்று தைரியம் கொடுப்போம் என்று அந்த பேட்டியில் விஷால் பேசியிருக்கிறார்.
இது அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து தமிழ் சினிமா நடிகைகள் பலரும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை மலையாள சினிமாவில் மட்டுமல்ல தமிழிலும் அதிகமாக நடக்கிறது என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் விஷால் வெளிப்படையாக இதுபற்றி பேச தொடங்கி இருக்கிறார். ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்குள் ஹேமா கமிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப் போகிறது என்று விஷால் அறிவிக்கவில்லை.
ஏற்கனவே பல சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை பலரும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி வருகிறார்கள் இந்த நிலையில் இனி தமிழ் சினிமாவிலும் பலருடைய சாயம் வெளுக்க போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். விஷால் பேசியது பற்றி உங்க கருத்து என்ன என்பதை தட்டி விடுங்க பாஸ்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications