நாஞ்சில் விஜயன் குழந்தைக்கு பெயர் சூட்டிய தமிழிசை சௌந்தரராஜன்.. அழகும் தைரியமும் நிறைந்த பெயர்!
சென்னை: விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயனுக்கு கடந்த மாதத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மருத்துவரும், பாஜக நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன் பெயர் சூட்டி இருக்கிறார். தமிழிசை சௌந்தர்ராஜனின் பிறந்த நாள் பங்க்ஷனில் கலந்து கொண்ட போது நாஞ்சில் விஜயன் தன்னுடைய குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த வீடியோவை நாஞ்சில் விஜயன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் காமெடியனாக அறிமுகமாகி இப்போது சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கும் நாஞ்சில் விஜயனுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டுதான் மரியா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நாஞ்சில் விஜயனுக்கு கடந்த மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை இல்லாததால் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து பல பேட்டியில் நாஞ்சில் விஜயனும் அவருடைய மனைவியும் பேசி இருக்கிறார்கள்.

குழந்தை பற்றிய கேள்வி
திருமணம் முடிந்த அடுத்த மாதத்தில் இருந்தே எல்லோரும் எங்களிடம் குழந்தை இல்லையா? என்று கேட்க தொடங்கி விட்டார்கள் முதலில் எங்களுக்கு பெரிதாக வருத்தம் இல்லை என்றாலும் சில மாதங்களில் எங்களுக்குள் வருத்தம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும் என்னுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது. அதுபோல என் குழந்தையை கையில் வாங்கிய நொடி நான் இந்த உலகத்தில் புதிதாய் பிறந்தது போல உணர்ந்தேன் என்று நாஞ்சில் விஜயன் பேட்டிகளிலும் பேசி இருக்கிறார். தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களிலும் பதிவு வெளியிட்டிருந்தார்.
நாஞ்சில் விஜயன் மகள் பெயர்
அதுபோல நாஞ்சில் விஜயனும் அவருடைய மனைவியை மரியா இருவரும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். நாஞ்சில் விஜயன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே தன்னுடைய குழந்தைக்கு மூன்று மதத்தின் போதனைகளையும் போதிக்க போவதாகவும் போட்டோ சூட் மூலமாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் குழந்தைக்கு தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் பெயர்சூட்டி இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை நாஞ்சில் விஜயன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டிருந்தார்.
நாஞ்சில் விஜயன் பதிவு
அதில் "வெளிப்புறத் தோற்றத்தை வைத்து எவ்வளவு விமர்சனங்கள் வந்தபோதும் அதை எல்லாம் கடந்து இரண்டு மாநிலங்களில் ஆளுநராகவும் ஒரு கட்சியின் தலைவராகவும் பதவி வகுத்து, மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்று.. இதையெல்லாம் தாண்டி இன்று வரை ஒரு வீர பெண்மணியாக பல சமூக பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் எனது குழந்தைக்கு பெயர் வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி" என்று நாஞ்சில் விஜயன் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள்
தமிழிசை சௌந்தரராஜனின் பிறந்த நாளில் அவருடைய வீட்டிற்கு தொண்டர்கள் பலரும் வந்து தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது நாஞ்சில் விஜயனும் அவருடைய மனைவி மற்றும் குழந்தையோடு தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அதோடு தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் தன்னுடைய குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெயர் சூட்டு விழா
அதோடு எனக்கும் தமிழ் மீது அதிக பற்று உண்டு, உங்களுக்கும் தமிழ் மீது பற்றும் மரியாதையும் உண்டு அதனால் குழந்தைக்கு தமிழ் பெயராகவும் அதேபோல வருங்காலத்தில் தைரியமாகவும் வீரமாகவும் இருப்பதற்காக வீரம் நிறைந்த பெயரையும் வைக்கும்படி நாஞ்சில் விஜயன் கேட்டுக்கொண்டார். அதற்கு தமிழிசையும் பெயர் சூட்டி இருக்கிறார். ஆனால் அந்த பெயர் என்ன என்பது குறித்து அந்த பதிவில் நாஞ்சில் விஜயன் குறிப்பிடவில்லை. தன்னுடைய குழந்தையின் பெயரை விரைவில் அறிவிப்பதாக நாஞ்சில் விஜயன் அதில் கூறி இருக்கிறார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications