தமிழை புரிந்து பாசம் காட்டும் ராகினி..கம்பெனிக்குள் கார்த்திக் செய்த செயல்.. அதிர்ச்சியில் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் செப்டம்பர் 18 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ராகினிக்கு வளைகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அர்ஜுனுடைய அம்மா சொல்ல அதற்கு ராகினி தமிழும் கோதையும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று தன்னுடைய ஆசையை தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில் கம்பெனி விஷயத்தில் கார்த்திக் செய்த செயலை பார்த்து நமச்சி அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபத்தில் இருந்த ராகினியை சமாதானப்படுத்துவதற்காக அர்ஜுனுடைய அம்மாவும் அக்காவும் அவருக்கு பால் கொண்டு வந்து கொடுக்கின்றனர். அப்போது அங்கே அர்ஜுனும் வந்துவிட ராகினிக்கு வளைகாப்பு பண்ண வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ராகினி வளைகாப்புக்கு எங்க அம்மாவும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்.

அதற்கு அர்ஜுன் நீ ஆசைப்பட்டு கேட்டுட்ட உன்னுடைய ஆசையை நான் நிறைவேற்றுகிறேன் என்று சொல்ல அதைக் கேட்டு கோபமான அர்ஜுனுடைய அம்மா அவங்க இந்த வீட்டுக்கு வரக்கூடாது வந்தா நடக்கிறதே வேற என்று திட்டி விட்டு போகிறார். மறுபக்கம் கார்த்தி கம்பெனிக்கு புதுப்புது ஐடியாவை கொடுக்கிறார். அதை பார்த்த தமிழ் கார்த்திக் கம்பெனியில் எல்லாம் முடிவுகளையும் ஃப்ரீயாக எடுப்பதற்காக அவருக்கு இடம் கிடைக்கிறார். அதை பார்த்து நமச்சி அதிர்ச்சி அடைகிறார்.
அதைத்தொடர்ந்து தமிழிடம் நமச்சி எதுக்காக கார்த்தியை இப்படி எல்லாவற்றையும் செய்ய விடுகிறாய் என்று கேட்க, அதற்கு தமிழ் அவன் ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருக்கான். அந்த கம்பெனியில பெரிய போஸ்டிங்கில இருந்து வந்தவன் தான அதனால இங்க எந்த முடிவும் தப்பா எடுக்க மாட்டான் என்று சொல்ல, அதை கேட்டு சந்தோஷப்பட்ட நமச்சி அதோடு நீ கார்த்திக் கூட மட்டும் இப்படி இருக்கிற மாதிரியே அம்மா கூடவும் பேசலாம் தானே என்கிறார். அப்போது தமிழும் யோசிக்கின்றார்.

அதைத் தொடர்ந்து ராகினி அர்ஜுனிடம் கோதை அம்மா உங்களுக்கு துரோகம் பண்ணுனாலும் என் மேல பாசமா தான் இருந்தாங்க. அதுபோல தமிழ் அண்ணனும் ஒரு நாள் என் மேல பந்து விழ வந்த போது என்ன காப்பாத்துனாரு. அதனால தமிழ் அண்ணனும் நல்லவரு தான். எனக்கு அவங்க வளைகாப்பு ஃபங்ஷனுக்கு வந்தா சந்தோஷமாக இருக்கும் என்று சொல்ல, நீ ஆசைப்பட்டு கேட்டுட்ட அதை நிறைவேற்றி வைக்கிறது என்னுடைய கடமை அதற்கான வழிகளை நான் செய்கிறேன் என்று அர்ஜுனன் சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து சரஸ்வதியின் வீட்டிற்கு ஹவுஸ் ஓனர் வருகிறார். அப்போது வசுவின் குழந்தையை சரஸ்வதி தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருக்கிறார். அதைப் பற்றி ஹவுஸ் ஓனர் விசாரிக்க, அவரிடம் வசு இது அவங்க குழந்தைதான். என்கிட்ட இருக்கிறது விட அவன் அக்கா கிட்ட தான் நல்லா செட் ஆகிட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ஹவுஸ் ஓனர் போனதும் சரஸ்வதி உனக்கு ரொம்ப குசும்பு ஆகிட்டு என்று சொல்ல, இல்ல உண்மையைதான் நான் சொல்றேன் என்று சொல்லி இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்து கோதை சந்தோஷமடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?











Click it and Unblock the Notifications