தமிழை அவமானப்படுத்த பிளான் போட்ட அர்ஜுனுக்கு கிடைத்த அதிர்ச்சி.. ராகினி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ராகினியின் வளைகாப்பு பங்க்ஷனை வைத்து தமிழையும் கோதையும் அவமானப்படுத்த வேண்டும் என்று அர்ஜுன் முடிவு செய்கிறார்.

இதை தெரிந்து கொள்ளாத ராகினி கோதையிடம் சென்டிமெண்டாக பேசுகிறார். அப்போது யாரும் எதிர் பார்க்காத பதிலை தமிழ் சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுன் மாமா, அவரிடம் நாம கஷ்டப்பட்டு அந்த கோதை குடும்பத்தை துரத்தி விட்டோம். ஆனா நீ இப்போ பேசிக்கிட்டு இருக்கிறதா பார்த்தா நீயே அந்த குடும்பத்தை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துருவா போல என்று கேள்வி கேட்கின்றனர். அதற்கு அர்ஜுனனின் அக்கா ஆமாடா இந்த தமிழ் வேற உன்னை ஏதாவது செய்யணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கான்டா என்று சொல்கிறார்.
அதற்கு அர்ஜுன் கோதை குடும்பத்தை கட்டாயமாக வளைகாப்புக்கு கூப்பிடனும். அங்க வச்சு தான் என்ன அடிச்ச தமிழுக்கு பதிலடி கொடுக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து தமிழ் வீட்டில் நடேசன் காய்கறி கட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது சரஸ்வதி இதை நான் கட் பண்ணுறேன் நீங்க பண்ண வேண்டாம் என்று சொல்லி தடுத்து பார்த்தும் அவர் கேட்காமல் காய்கறி கட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கே அர்ஜுனும் அவருடைய மாமாவும் போகின்றனர்.
அர்ஜுனை பார்த்தது எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் ராகினிக்கு உண்மை தெரியவரும். அது வரா மட்டும்தான் உன்னுடைய ஆட்டம் என்று திட்டி கொண்டு இருக்கின்றனர் அதற்கு அர்ஜுன் நான் சொல்ல வந்த விஷயத்தை உங்களிடம் சொல்லி விடுகிறேன். நாளைக்கு ராகினிக்கு கோவிலில் வைத்து வளைகாப்பு வைத்திருக்கிறோம். நீங்க எல்லோரும் கண்டிப்பா வரணும்னு அவ ஆசைப்படுறா என்று சொல்ல நடேசன் அதெல்லாம் வர முடியாது இங்கிருந்து போ என்று துரத்தி விடுகிறார்.
அப்போது கோதை மட்டும் யோசித்தபடியே நிற்க, நடேசன் யாரும் வளைகாப்பு வீட்டுக்கு போக கூடாது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து தமிழ் வீட்டுக்கு போகிறார். அங்கு ராகினி என்ன ஆச்சு என தெரியலையே என்று பரபரப்பில் இருக்க அப்போது அங்கு வரும் அர்ஜின் அவங்க கட்டாயம் வருவாங்க. அத்தை வரேன் என்று சொல்லல்ல ஆனா அவங்களோட ரியாக்ஷன் அப்படித்தான் இருக்கு என்று சொல்ல ராகினி சந்தோஷப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து கார்த்திக், தமிழ் என எல்லோரும் பேசி சந்தோஷமாக இருக்கின்றனர். கோதை மட்டும் சோகமாக இருக்கிறார். அப்போது என்னாச்சு என்று கேட்க ராகினிக்கு வளைகாப்பு வைக்கும் விஷயத்தை சொல்கின்றனர். அதற்கு தமிழ் சொத்தை எல்லாம் எழுதி வாங்கப் போறோம் என்று தெரிஞ்சு தானே அந்த அர்ஜுன் பக்கம் போனாள்.
அங்கு யாரும் போக வேண்டாம். இது பற்றி இனிமேல் யாரும் பேசவும் வேண்டாம் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து நடேசன் தமிழ் சொல்வதுதான் சரி என்று சொல்கிறார். பிறகு விடிந்ததும் வளைகாப்புக்கு போக முடியவில்லையே என்று கோதை கவலைப்பட்டுக் கொண்டிருக்க அபி போன் செய்து ராகினியிடம் பேசப்படுகிறார். அப்போது ராகினி வளைகாப்பு ஃபங்ஷனுக்கு கூட வர மாட்டீங்களா? என்று பாசமாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications