தமிழும் சரஸ்வதியும்: தமிழ் உடைத்த உண்மை... மனம் மாறும் அர்ஜுனின் அம்மா.. சந்தேகப்படும் ராகினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் அர்ஜுன் செய்த செயலால் சரஸ்வதியின் வயிற்றில் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறார்.

இதற்கு காரணம் அர்ஜுன் தான் என்பதை தெரிந்து கொண்ட தமிழ் வீட்டிற்கு சென்று அடித்து மிரட்ட ராகினி சந்தேகப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்று எபிசொடின் ஆரம்பத்தில் எல்லோரும் பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு போவதற்காக ரெடியாகி கொண்டிருக்கின்றனர். அப்போது தமிழும் சரஸ்வதியும் பைக்கில் கிளம்பி போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது அர்ஜுன் அடியாள்களை வைத்து தமிழுடைய பைக்கில் மோத வைக்கிறார். இதனால் தமிழ் பைக்குடன் கீழே விழ சரஸ்வதியும் கீழே விழ வயிற்றில் அடிபட்டு விடுகிறது.

இதனால் பதறி போன தமிழும் நமச்சியும் சரஸ்வதியை ஹாஸ்பிடலில் வேகமாக கொண்டு சேர்க்கின்றனர். சரஸ்வதியை ஹாஸ்பிடலில் சேர்த்ததும் நமச்சி இந்த ஆக்சிடெண்ட் தானா நடந்திருக்காது. இதற்கு அர்ஜுன்தான் காரணமாக இருப்பான். அவன் தான் பிளான் போட்டு இப்படி செய்திருப்பான் என்று சொல்ல, தமிழ் அர்ஜுன் வீட்டிற்கு சென்று அர்ஜுனை இழுத்து போட்டு அடிக்கிறார்.
அப்போது ராகினி வந்து தடுத்து தமிழை திட்ட அதற்கு தமிழ் அர்ஜுன் சரஸ்வதியை ஆக்சிடெண்ட் பண்ணிய விஷயத்தை சொல்ல, ராகினி அதை நம்பாமல் தமிழை மீண்டும் திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு தமிழ் நீ தான் இவனை கண்ணமூடி தனமா நம்பிட்டு இருக்க என்று திட்டி விட்டு, சரஸ்வதிக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் உன்னை சும்மா விடமாட்டேன் கொன்னு போட்டு விடுவேன் என்று அர்ஜுனை மிரட்டி விட்டு போகிறார்.

அதைத் தொடர்ந்து அர்ஜுன் தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தமிழுடைய பைக்கில் ஆள் வைத்து மோத வைக்கவில்லை என்று சமாதானப்படுத்த பார்க்க, அதற்கு ராகினி அண்ணன் வண்டி என்று தானே சொல்லுச்சு பைக் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க, அதற்கு அர்ஜுன் மாமா வெளியே பேசிட்டு இருந்தாங்க. பைக் தான் ஆக்சிடென்ட் பண்ணிச்சினு, அதை வச்சு தான் சொன்னேன் என்று சமாளிக்க ராகினியும் சமாதானம் ஆகிறார்.

அதைத்தொடர்ந்து அர்ஜுனை கூட்டிட்டு போய் அவருடைய அம்மாவும் அக்காவும் ஏண்டா இப்படி பண்ணுன, ஒரு கருவை கலைக்கிறது எவ்வளவு மோசமான செயல். இதுதான் பண்ண போற என்று தெரிந்திருந்தால் நான் அப்பவே வேண்டாம் என்று தடுத்து இருப்போம் என்று திட்டுகின்றனர். அதோடு சரஸ்வதிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று வேண்டி கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சரஸ்வதிக்கு ஆக்சிடெண்ட் ஆனது பற்றி கோதைக்கு தெரிய வர கோதை அதிர்ச்சியில் இருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications