அர்ஜுனால் கதி கலங்கும் குடும்பம்.. அம்மாவோடு செல்ல முடிவெடுத்த ராகினி.. கோவிலில் கிடைத்த மகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் ராகினி கோதையோடு தமிழ் வீட்டிற்கு செல்ல ஆசைப்பட அதற்கு அர்ஜுன் முடியாது என்று கூறுகிறார்.

அதே நேரத்தில் அர்ஜுன் குடும்பத்தினருக்கு அர்ஜுன் மூலமாக அதிர்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இங்கே எபிசோடு ஆரம்பத்தில் எல்லோரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராகினி குழந்தை பிறந்ததை நினைத்து எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நடேசன் இனி வீட்டிற்கு தமிழும் சரஸ்வதியோட குழந்தை தான் வரவேண்டியது இருக்கிறது. அதுவும் வந்த பிறகு சந்தோஷமாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் ராகினி எல்லாத்தையும் மறந்து எங்ககிட்ட பேசுனது தான் ரொம்ப சந்தோஷமா இருந்தது என்று தமிழிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, என்ன இருந்தாலும் ஆர்டர் செய்து முடிக்க முடியுமா என்று தெரியவில்லையே என்று நமச்சியும் நடேசனும் புலம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது தமிழ் நம்பிக்கையா இருப்போம். பொறுமையோடு இருப்போம். நம்ம எவ்வளவோ பெரிய கஷ்டங்களை தாண்டி வந்தாச்சு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் கோதை ஹாஸ்பிடலில் குழந்தையை வைத்து தாலாட்டிக் கொண்டிருக்க அர்ஜுனின் அம்மா குழந்தையை கோதையிடமிருந்து வாங்குகிறார். அதற்கு அதிர்ச்சியான ராகினி அத்தையை ஏன் இப்படி பண்ணுறீங்க என்று விசாரிக்க, அதற்கு கோதை அம்மா ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட் குழந்தையை வைத்து ஆட்டிக்கிட்டே இருக்காங்க அவங்களுக்கு ஏதாவது ஆகிட கூடாது என்று சமாளிக்கிறார்.
அதைத்தொடர்ந்து அங்கு வரும் அர்ஜுன் குழந்தையை அத்தை கிட்ட கொடும்மா என்று வாங்கி கொடுத்துவிட்டு நான் டிஸ்சார்ஜ் செய்வது எப்போது என்று ,கேட்டுவிட்டு வருகிறேன் என்று கிளம்பி போகிறார். அந்த நேரத்தில் தமிழ் வீட்டார் எல்லோரும் வந்து ராகினியின் குழந்தையிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ராகினி தன்னோடு எல்லாரும் வீட்டுக்கு வந்துருங்க என்று சொல்ல அதைக் கேட்டு அர்ஜுனனின் அம்மாவும் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் அதற்கு கோதையும் நடேசனும் மறுத்து விட சரஸ்வதி ராகினியை எங்க வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போறோம் என்று சொல்ல ராகினியும் தமிழ் வீட்டுக்கு போகட்டுமா? என்று அர்ஜுனிடம் கேட்கிறார். அதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்து விடுகிறார்.
நீங்களே ஏற்கனவே கஷ்டப்பட்டு இருக்கீங்க இந்த நேரத்தில் ராகினியும் குழந்தையும் அங்க வந்தா நல்லா இருக்காது. நாங்க வீட்டில் வச்சு நல்லா பாத்துக்குறோம் என்று அர்ஜுன் சமாளித்து விடுகிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் குழந்தையை கொஞ்சி விட்டு கோயிலுக்கு போகின்றனர். அப்போது தமிழ் எப்படி ஆர்டர் முடிச்சு கொடுக்கப் போகிறான் என்று தெரியவில்லை என்று எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு தமிழும் ஆமா டைமுக்கு ஆர்டர் கொடுக்க விட்டால் கம்பெனி பெயரை கெட்டுப் போய்விடும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் கோவில் மணி அடிக்கிறது. அதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து ராகினியை வீட்டிற்கு அழைத்து வந்ததும் அம்மாவும் அக்காவும் அர்ஜுன் மனம் மாறிவிட்டதாக நினைத்து அவரை திட்ட அப்போது கோபமான அர்ஜுன் தன்னுடைய மாமாவை அடித்து கொண்டிருக்கிறார். இவர் குடித்ததால்தான் தமிழுக்கு நன்றி சொல்ல வேண்டியதாக போச்சி, அதுக்காக அவங்க செய்த துரோகத்தை நான் எதையும் மறக்கல என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications