நண்பன் நமச்சியால் நாசமாக போகும் தமிழ் வாழ்க்கை.. சுற்றி நடக்கும் சூழ்ச்சி.. இது தப்பான முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் 27ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் மேக்னாவிடம் நடந்த விஷயத்தை எடுத்து சொல்ல அதைக் கேட்டு மேக்னா தமிழ் மீது ஈர்ப்பு கொண்டு அவரை வீட்டிற்கு அழைத்து வர மாமாவிடம் சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து தமிழைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட மேக்னாவின் மாமா தமிழை வைத்து மேக்னா சொத்துக்களை பிடுங்க பிளான் போடுகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஹாஸ்பிடலில் மேக்னாவிடம் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்க என்னுடைய நண்பனை அடித்ததற்காக தான் நான் உங்களை அடித்தேன். ஆனால் நான் பெண்களை ரொம்பவே மதிக்க கூடியவன். பெண்கள் இந்த மாதிரி தைரியமாக இருப்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
இவ்வளவு பெரிய கம்பெனியை இவ்வளவு கெத்தாக நீங்க நடத்துவதை நான் பாராட்டுகிறேன். அதோடு நீங்க ஆபத்தான நிலைமையில் இருந்ததால் தான் உங்கள் உங்கள் புடவையை நான் உருவினேன் என்று விளக்கம் கொடுத்து விட்டு என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்ட நமச்சியோடு ஹாஸ்பிடலை விட்டு வெளியே வருகிறார்.
அதைத் தொடர்ந்து மேக்னாவின் மாமா ஹாஸ்பிடல் வந்து மேக்னாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தமிழ் தப்பித்து இங்கே வந்தது தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்க அதற்கு மேக்னா தமிழ் இங்கே தான் வந்தார். எனக்கு நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியாது அவரை நாளைக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட அழைச்சிட்டு வாங்க என்று சொல்ல அதை கேட்டு மேக்னாவின் மாமா அதிர்ச்சி அடைகிறார்.
வெளியே வந்து தன்னுடைய மகனோடு இனி அந்த தமிழை வைத்து தான் நாம மேக்னா சொத்துக்களை பிடுங்கணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் தமிழை அடியாள்கள் வந்து பிடித்துக் கொண்டு போய் மீண்டும். அதே இடத்தில் கட்டி வைக்கின்றனர். அதை தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலால் அந்த இடத்திற்கு மேக்னாவின் மாமா வந்து நல்லவர் போல பேசி உங்களை மேக்னா மன்னிச்சிட்டா நாளைக்கு வீட்டுக்கு சாப்பிட வர சொல்லி இருக்கா, நீங்க வந்துருங்க என்று பேசி சாப்பிடுவதற்காக கை கழுவ அனுப்புகிறார்.

அதைத் தொடர்ந்து தமிழ் பற்றி விசாரிக்க சொல்லி இருந்த இடத்திலிருந்து அவர்களுக்கு தமிழ் உதவிக்காக வந்திருப்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருப்பதும் தெரிய வருகிறது. ஆனாலும் திருமணம் முடிந்து விட்டது என்ற உண்மையை மேக்னாவிடம் சொல்லக்கூடாது என்று மேக்னா மாமா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு நமச்சிவர நமச்சி இடம் நல்லவர் போல நமச்சி வருவதை கவனிக்காதது போலவே பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இனி இவர்கள் பேச்சை நம்பி தமிழுக்கு கல்யாணம் முடிந்ததை நமச்சி மறைத்து இந்த ஆர்டரை வாங்கி விட வேண்டும் என்று பிளான் செய்ய அதனாலேயே தமிழ் அடுத்த பிரச்சனையில் சிக்க இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஜய் டிவியில் பல சீரியல்களில் இரண்டு பொண்டாட்டி கதை வந்து கொண்டிருப்பது போல இனி இந்த சீரியலிலும் அதே போன்று வைத்து விடுவார்களோ என்று பலர் பயந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு ஐடியா இருந்தால் இது தவறான முடிவு. இதை இப்போதே மாற்றிவிட்டால் நல்லது என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications