சரஸ்வதியிடம் போனில் பேசும் மேக்னா.. குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ்.. மீண்டும் நின்ற வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழிலும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் 31ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் தமிழ் போன் செய்யவில்லையே என்று கஷ்டத்தோடு காத்திருக்கும் குடும்பத்திற்கு தமிழ் அதிர்ச்சி கொடுக்கிறார்.

tamilum saraswathiyum serial 31th October promo and episode full update

அதைத்தொடர்ந்து ஊருக்கு வந்ததும் தமிழுக்கு மேக்னா போன் செய்ய அப்போது சரஸ்வதி பேசுகிறார். இந்த நிலையில் இதில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் மேக்னா சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதை நானே செய்கிறேன் என்று மேக்னா சொன்னதும் அங்கிருந்து தமிழ் கிளம்புகிறார். அதே நேரத்தில் வீட்டில் சரஸ்வதி தமிழுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. இன்னும் ஒரு போன் கூட பண்ணல என்று பீல் பண்ணியப்படியே புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ஒரு போன் வந்ததும் அது தமிழ் தான் என்று சரஸ்வதி ஆசையாக பேச போக அது ராங் நம்பராக இருக்கிறது. பிறகு வெறுப்போடு வீட்டிற்கு வரும் நிலையில் அங்கு கோதை ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்து அப்போ தான் வீட்டில் இருக்கிறார். அவரிடமும் தமிழ் இன்னும் போன் பண்ண வில்லை என்று சொல்ல எல்லோரும் என்ன நடந்திருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

tamilum saraswathiyum serial 31th October promo and episode full update

அப்போது தமிழ் போன் பண்ணி எல்லாம் நல்லபடியாக முடிந்தது மேக்னா எல்லாத்துக்கும் சரி என்று சொல்லி அவர் நமக்காக உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டார். இனி நாம் வேலையை தொடங்கி விடலாம் என்று கூறி நான் வீட்டுக்கு தான் வந்திருக்கிறேன் என்று சொல்ல சரஸ்வதி இதை ஏன் இவ்வளவு நேரமா சொல்லல, அதற்கு சரஸ்வதி இத நீங்களே போன் பண்ணி சொல்லி இருக்கலாமே நாங்க பயந்துட்டே இருந்தோம் என்று செல்லமாக சண்டை இடுகிறார்.

அதை பார்த்து எல்லோரும் வீட்டில் இருப்பவர்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் நமச்சி கம்பெனிக்கு வந்திருந்த இடத்தில் அங்கு ஒரு மிஷின் ரிப்பேராக இருக்கிறது என்று அங்கு இருக்கும் தொழிலாளி வந்து சொல்ல, அதை தமிழ் வந்ததும் சரி பண்ணி விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் சரஸ்வதியும் தமிழும் ஹாஸ்பிடலுக்கு போய்விட்டு கம்பெனிக்கு வருகின்றனர். அப்போது தமிழ் குழந்தையை பற்றி நமச்சி இடம் பேசிவிட்டு ரிப்பேரான மெஷினை சரி செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மேக்னா தமிழுக்கு போன் செய்ய போனை சரஸ்வதி எடுக்கிறார். மேக்னா தான் பேசுகிறார் என்று தெரிந்ததும் ரொம்ப நன்றி என்று பேசிக் கொண்டிருக்க மேக்னா தமிழிடம் பேசியதோடு தொடர்ந்து யாராக இருக்கும் அந்த பெண் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது அவருடைய அம்மா என்ன ஆச்சு எதனால் டென்ஷனாக இருக்கிறாய் என்று கேட்க அதற்கு தமிழுக்கு போன் பன்னுனேன். அங்கு சரஸ்வதின்னு ஒரு பொண்ணு பேசிச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் மாமாவிடமும் நீங்க அந்த பொண்ணு யாருனு விசாரிங்க என்று சொல்ல, உடனே அவர் நான் உமாபதிக்கு போன் செய்து விசாரிக்கிறேன் என்று போன் பேசுகிறார்.

அது தமிழ் கம்பெனியில் வேலை பார்க்கும் பொண்ணு, தமிழ் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாராம். அதனால் தான் அந்த பொண்ணு அவ்ளோ உரிமையா பேசி இருக்கு என்று சொல்கிறார். அதை கேட்டதும் மேக்னா சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக அர்ஜுன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அங்கு வரும் அவருடைய மாமா தமிழ் கம்பெனியை தொடங்கி விட்டான் என்று சொல்ல அதற்கு அர்ஜுன் அப்படியெல்லாம் இருக்காது என்று அலட்சியப்படுத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+