Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிய போகும் போது கூட இப்படியா பண்ணுவாங்க? ராகிணியால் மேலும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த சீரியலில் பார்க்கலாம். அதில் அர்ஜுன் பெயரில் ராகிணி சொத்தை எழுதி வைப்பதை தடுக்க போன தமிழுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியல் வரும் வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. ஆனாலும் இன்றைய எபிசோட்டில் நடந்த சில காட்சிகள் ரசிகர்களை கோபப்படுத்தும் விதத்தில்தான் இருந்தது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

tamilum saraswathiyum serial April 15th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பித்தில் ராகிணி அர்ஜுனுக்கு சொத்தை மாற்றிக் கொடுப்பதற்காக கையெழுத்து போடும்போது ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வந்த போலீஸ் அதை தடுத்து நிறுத்துகிறார். அப்போது என்ன ஆச்சு என்று ரெஜிஸ்டார் கேட்க, அதற்கு போலிஸ் இன்ஸ்பெக்டர் ராகிணி சொத்தை மாற்றி கொடுக்கும் அர்ஜுன் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

அவரை அரெஸ்ட் பண்ணுவதற்காக தான் நாங்க வந்திருக்கோம் என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்கிறார். அதற்கு போலீஸ் சரியான ஆதாரத்தோடு தான் வந்து இருக்கிறேன் என்று போலீஸ் ஸ்டேஷனில் மேக்னா கொலை வழக்கில் ஜெயிலில் இருக்கும் களிவரதனும் அவருடைய மகனும் கொடுத்த வாக்குமூலத்தை காட்ட அதைப் பார்த்து அதிர்ச்சியான ராகினி என்ன அர்ஜுன் இவங்க சொல்றதெல்லாம் உண்மையா?

tamilum saraswathiyum serial April 15th episode full update

நீங்க மேக்னா கொலையில் சம்பந்தப்பட்டிருக்கீங்களா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு அர்ஜுன் வழக்கம் போல என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியலையே என்று நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் அங்கிருக்கும் கான்ஸ்டபிளை கூப்பிட்டு அர்ஜுனை கைது செய்ய சொல்கிறார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு போன் வருகிறது.

அவரிடம் உயர் அதிகாரி போனில் பேசுகிறார். அவர் களிவரதன் பேசியது எல்லாமே பொய். அவர் அப்படி பேசுவதற்கு தமிழும் அவருடைய நண்பரும் சென்று லஞ்சம் கொடுக்கிறோம் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். அந்த வீடியோ எனக்கு இப்போதான் கிடைத்தது என்று இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்கிறார். அதை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் தமிழை திட்டுகிறார்.

tamilum saraswathiyum serial April 15th episode full update

என்ன சார் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க இந்த வீடியோ அசிஸ்டன்ட் கமிஷனருக்கு போய் இருக்கு அவர் போன் பண்ணி என்னை திட்டுகிறார் என்று திட்டிவிட்டு போலீஸ் கிளம்பி போனதும், ராகிணி சொத்துக்காக தானே நீங்க இவ்வளவு பண்ணிட்டு இருக்கீங்க? உங்க கண் முன்னாடியே எல்லா சொத்தையும் நான் அர்ஜுன் பெயருக்கு எழுதி வைக்கிறேன் என்று பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.

அடுத்த கட்டத்தில் அர்ஜுன் வீட்டில் அவருடைய அப்பா மற்றும் அக்கா போட்டோ முன்பு நின்று அர்ஜுனின் அம்மா நீங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து இன்னைக்கு நம்ம புள்ள பெயருக்கே வந்துட்டு என்று பேசிக் கொண்டிருக்கும் அர்ஜுன் ராகிணியிடம் நீ என்னுடைய மனைவியாக கிடைத்ததற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் தமிழ் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தமிழ் எதையாவது செஞ்சு அந்த சொத்தை அவன் கிட்ட இருந்து திருப்பி வாங்கியே ஆகணும் என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கு வரும் அர்ஜுன் இன்னுமா சார் அந்தக் கனவுல இருக்கிறீங்க. நீங்க வீர வசனம் பேசுனதை எல்லாம் பார்த்தா சொத்தை காப்பாத்திருவீங்கன்னு நினைச்சேன் கிண்டல் செய்ய,

அதற்கு நடேசன் இவனை அடித்து வெளியே துரத்துங்கடா என்று கோபப்படுகிறார். அதற்கு அர்ஜுன் சொத்து எல்லாம் போயிடுச்சுன்னு நீங்க கண்ணீர் விட்டு கதறுவீங்கனு நெனச்சேன். ஆனா இன்னும் நீங்க ஸ்ட்ராங்கா தான் இருக்கீங்க என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக எபிசோடு முடிவடைகிறது.

இந்த சீரியலுக்கான கடைசி நாள் சூட்டிங் கடந்த வாரத்தில் முடிவடைந்து விட்டது. இந்த வாரத்தோடு சீரியல் முடிவடைகிறது. ஆனாலும் இந்த சீரியல் பாசிட்டிவாக முடிக்காமல் இப்போதும் நெகட்டிவாகவே கதையை கொண்டு போய் கொண்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+