நமச்சி சொன்ன வார்த்தை.. மீண்டும் மும்பைக்கு கிளம்பிய மேக்னா.. கடைசியில் கிடைத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் டிசம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் நேற்றைய எபிசோட்டில் மேக்னாவிற்க்கு தமிழுக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயம் தெரிய வந்தது போன்ற காட்சிகள் இருந்த நிலையில் கடைசியில் அது இன்று கனவு என்று முடித்து விட்டனர்.
ஆனால் உண்மையை மறைக்க வேண்டும் என்பதற்காக நமச்சி மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தமிழ் வீட்டிற்கு மேக்னா வந்து உண்மை எல்லாம் தெரிந்து விட்டதாக நமச்சி காருக்குள்ளே இருந்து கனவு காண்கிறார். பிறகு முழித்ததும் இதெல்லாம் கனவு என்று தெரிந்து நிம்மதி அடைகிறார். இருந்தாலும் மேக்னாவை எப்படி தமிழ் வீட்டுக்கு போக விடாமல் தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அதை தொடர்ந்து மேக்னாவின் மாமா மேக்னாவிற்கு ஃபோன் பண்ணி உன்னை மினிஸ்டர் பார்க்க வேண்டும் என்று சொன்னாரு. நீ எப்போ ஊருக்கு வர? சீக்கிரமா நீ வந்தால் அவரை சந்தித்து விடலாம் என்று சொல்ல அதனால் நானும் மும்பைக்கு வருகிறேன் என்று சொல்லி நமச்சியிடம் தமிழ் வீட்டுக்கு வர முடியாது என்று சொல்ல சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இதனால் நமச்சி சந்தோஷம் என்று நிம்மதியாக இருக்க பிறகு மினிஸ்டரிடம் மேக்னா போன் பண்ணி தான் சென்னையில் இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு அவர் அப்போ உங்க மாமாவை வந்து என்னை பார்க்க சொல்லுங்க என்று சொன்னதும் மேக்னா சந்தோஷமடைந்து மாமாவுக்கு போன் பண்ணி அவரை மினிஸ்டரை பார்க்க சொல்லி அனுப்பிவிட்டு தமிழுக்கு போன் பண்ணி நான் வீட்டிற்கு வருவேன் என்று சொல்கிறார்.

இதனால் தமிழ் வீட்டில் எல்லோரும் சந்தோஷப்பட இதை கேட்டு நமச்சி அதிர்ச்சி அடைகிறார். கூடவே எப்படியாவது சரஸ்வதியை இங்கிருந்து போக வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணி சரஸ்வதியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக சொல்லி கட்டாயப்படுத்துகிறார். இதனால் சரஸ்வதியை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போகிறார். அதைத் தொடர்ந்து தமிழின் கல்யாண போட்டோ அங்கு இருந்தால், தான் கனவில் கண்டது போல பிரச்சினை ஆகி விடும் என்பதை யோசித்து அதை எடுத்து மறைத்து வைக்க முயற்சிக்கும் போது கீழே போட்டு விடுகிறார்.
அதனால் போட்டோவில் இருக்கும் கண்ணாடி உடைந்து விட அதையும் மெல்லமாக எடுத்து மறைத்து வைத்து விடுகிறார். அதை தொடர்ந்து வீட்டிற்கு வரும் மேக்னா தமிழ் வீட்டில் எல்லாரிடமும் பேசிவிட்டு சாப்பிட்டு கிளம்ப ரெடி ஆகிறார். அந்த நேரத்தில் நமச்சி சரஸ்வதி வந்து விடுவாளோ என்ற பயத்தில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications