போலீஸிடம் சிக்கிய கலிவரதன்.. வார்டனுக்கு சரஸ்வதி கொடுத்த அடி .. கடைசியில் நமச்சி இப்படி பண்ணிட்டாரே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் போலீஸிடம் தமிழ் இந்த மேக்னா கொலை வழக்கில் அர்ஜுன் மற்றும் அவருடைய மாமா மட்டுமல்லாமல் கலிவரதனும் சம்பந்தப்பட்டிருப்பதாக எனக்கு சந்தேகம் வருகிறது என்று சொல்ல போலீஸ் கலிவரதனை விசாரிப்பதற்காக போகின்றனர்.
மறுபக்கத்தில் அர்ஜுன் கொடுத்த பணத்திற்காக ஜெயில் வார்டர் சரஸ்வதியை பாடாய்படுத்த ஒரு கட்டத்தில் கோபமான சரஸ்வதி ஜெயில் வார்டனுக்கு சரியான அடி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் சில அதிர்ச்சியான விஷயங்களும் நடந்தது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தமிழ் போலீஸ் ஸ்டேஷனில் மேக்னாவின் கொலைக்கும் கலிவரதனுக்கும் சம்பந்தம் இருக்கு என்று சொல்லியதால் போலீஸ் கலிவரதனை விசாரிக்க வேண்டும் என்று தேடி போகின்றனர். அப்போது கலிவரதன் மேக்னா வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வக்கீல் மேக்னா மேடம் எல்லா மொத்த சொத்தையும் அனாதை ஆசிரமத்திற்கு முதியோர் இல்லத்துக்கு எழுதி வைத்துவிட்டார்.
நீங்கள் இருக்கிற வீடு கூட ட்ரஸ்ட்க்கு போய்விடும் அதனால் நீங்கள் நாளைக்குள் இருக்கிற வீட்டு காலி பண்ணனும் என்று வக்கீல் சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியான கலிவரதன் எங்களுக்காக சின்ன பிட்டு இடம் கூட விட்டு வைக்கல என்று கேட்க அதற்கு வக்கீல் நான் மேக்னாவிடம் மாமாவுக்கு ஏதாவது கொடுக்கணுமா என்று கேட்டேன் அதற்கு அவர் அவருக்கு கை கால் நல்லா தானே இருக்கு அவங்களுக்கு ஏற்கனவே நிறைய செஞ்சுட்டேன் இதுக்கு மேல எதுவும் செய்யத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார் என்று வக்கீல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
அடுத்த காட்சியில் கலிவரதனை தேடி போலீஸ் அவருடைய வீட்டிற்கு வர தமிழ் அவரிடம் நீங்கள் அவரை மிரட்டுவது போல பேசுங்கள் உண்மை எங்களுக்கு தெரியும் என்று சொல்லுங்கள் சந்தேகம் இருப்பதை காட்டிக்கொள்ளாதிங்க என்று ஐடியா கொடுத்துவிட்டு வீட்டில் பின்பக்கமாக தமிழும் நமச்சியும் போலீஸ் மற்றும் கலிவரதன் பேசுவதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது முன்பக்கத்தில் வந்த போலீஸ் கலிவரதனிடம் எல்லா உண்மையும் உங்களுக்கு தெரியும் என்று மிரட்ட அதற்கு பயந்து போன கலிவரதன் உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்க அப்போது போலீஸ் பேசும்போது அந்த நேரத்தில் நமச்சி ஒளிந்திருக்கும் இடத்தில் ஒரு பொருள் மீது காலை வைத்து விடுவதால் சத்தம் கேட்டுவிட கலிவரதன் உஷாராகி விடுகிறார்.
உடனே நான் என் பொண்ணு மாதிரி மேக்னாவை வளர்த்தேன். ஆனால் நீங்க என் மேல சந்தேகப்பட்டு இருக்கீங்களா? உங்கள நான் கம்ப்ளைன்ட் பண்ண போறேன். கொலையை செய்தது சரஸ்வதி அவளுக்கு தண்டனை கிடைத்தே ஆகணும் என்று ஆவேசமாக கத்த அதை கேட்டு கோபமான தமிழ் ஓடி வந்து கலிவரதனை அடிக்க பாய அதற்கு கலிவரதன் போலீசை பார்த்து நீங்க குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுறீங்கன்னு நான் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க போறேன் என்று மிரட்டுகிறார்.
அதற்கு போலீஸ் உங்க மேல எனக்கு டவுட் இருக்கு அதனால விசாரிக்க எனக்கு உரிமையும் இருக்கு அதனால்தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்த கட்டத்தில் சரஸ்வதி சாப்பாடு வாங்க வரிசையில் நிற்கிறார் அப்போது ஜெயில் வார்டன் உப்பு மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் கொட்டி இதை சாப்பிடு என்று மிரட்டுகிறார். அதோடு வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கண்டமேனிக்கு திட்ட ஒரு கட்டத்தில் கோபமான சரஸ்வதி மிளகாய் பொடி கலந்த சாதத்தை அந்த ஜெயில் வார்டன் முகத்தில் தூக்கி வீசி இதற்கு மேல ஏதாவது பேசினா நடக்கிறது வேற என்று மிரட்டிவிட்டு போகிறார்.
அடுத்ததாக மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த தமிழ் போலீஸிடம் ஏதாவது எவிடென்ஸ் கலெக்ட் பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சில போலீசார் திருடர்களை அழைத்துக் கொண்டு வருகின்றனர் அப்போது அந்த திருடர்கள் நீங்க எந்த எவிடென்ஸ வச்சு எங்களை புடிச்சீங்க என்று கேட்க அதற்கு போலீஸ் நீங்க திருடிய இடத்தில் இருந்த கைரேகைகளை அழிச்சிட்டீங்க.
ஆனால் கேட்டில் இருந்த கைரேகை அளிக்கவில்லை. அதை வச்சு தான் புடிச்சோம் என்று சொல்ல அதைக் கேட்டு தமிழுக்கு ஒரு யோசனை வருகிறது. அப்போது கொலைகாரன் கைரேகையை கண்டிப்பா விட்டு இருப்பான் என்று யோசிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications