சரஸ்வதியை காப்பாற்ற வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.. கதையில் எதிர்பார்க்காத திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இன்றைய எபிசோடில் சரஸ்வதியை ஜெயிலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமிழ் எடுத்திருக்கும் முயற்சிக்கு உதவி செய்வதற்காக சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதே நேரத்தில் ஜெயிலுக்குள் சரஸ்வதிக்கு அடுத்தடுத்த பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கான்ஸ்டபிள் திருடனை தான் பிடித்த விதம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைக் கேட்ட தமிழுக்கு ஒரு ஐடியா வருகிறது. அதை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி கண்டிப்பாக மேக்னா கொலை செய்யப்பட்ட இடத்தில் இன்னொரு கைரேகை இருக்கும் என்று பேசுகிறார்.
அப்போது இன்ஸ்பெக்டர் எனக்கு வேறொரு மீட்டிங் இருக்கிறது. நான் வேணும் என்றால் சொல்லி அனுப்புகிறேன் என் பெயரை சொல்லி நீங்களே அந்த டாக்டரிடம் விசாரிங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்த காட்சியில் ஒரு பியூன் விலை உயர்ந்த வண்டியில் வருகிறார் (அவர் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பர் செல்வம் தான்)
அதைப் பார்த்து அங்கிருக்கும் இருவர்பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பியூனால் எப்படி இவ்வளவு விலை உயர்ந்த வண்டியில் வர முடிகிறது இந்த அதிசயமா இருக்கே என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு இந்த டாக்டர் லஞ்சம் வாங்குகிறார். அதனால் தான் இந்த மாதிரி பியூனால் வர முடிகிறது என்று அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டிருப்பதை தமிழும் நமச்சியும் கேட்டு விடுகின்றனர்.

அப்போது பியூனை பிடித்தால் கண்டிப்பா நமக்கு ஏதாவது சிக்கும் என்று இவர்கள் பிளான் போட்டு அந்த பியூனுடன் எப்படி வண்டி வாங்குன என்று கேட்க அதற்கு அவர் நான் உழைத்து வாழ்கிறேன் என்று சொல்ல அதற்கு நமச்சி சாதாரண மனுஷனால் இந்த வண்டியை வாங்க முடியாது என்று கேட்க, அதற்கு பியூன் வண்டி எடுத்த பில் காட்டி பாருங்க ரெண்டு மாசம் டியூ கட்டி விட்டேன் என்று சொல்கிறார்.
அதற்கு தமிழ் சாரி என்னை மன்னிச்சிடுங்க எல்லோரும் மாதிரி நானும் யோசிச்சுட்டேன் என்று மன்னிப்பு கேட்டு இவனிடம் கைரேகை எடுக்கிற ஆபீஸர் எப்படிப்பட்டவர் என்று விசாரிக்கிறார். அதற்கு பியூன் ஏன் கேக்குறீங்க என்று தமிழிடம் கேள்வி கேட்க, அதற்கு தமிழ் என்னுடைய மனைவி ஜெயில்ல இருக்குங்க. அவளை நான் காப்பாற்றாமல் இருக்கேன் .

அவளே கர்ப்பமா இருக்கா ஆனா இப்போ போய் ரெண்டு கொலை பண்ணான்னு சொல்லி பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க என்று பீல் பண்ணி பேச அதற்கு நான் ஹெல்ப் பண்றேன் ஆனா இந்த டாக்டர் கொஞ்சம் காசு எதிர்பாருப்பாரு அது உண்மைதான் ஆனால் நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க என்று சொல்கிறார்.
அடுத்ததாக டாக்டரிடம் நமச்சி பேசப்போகிறார். ஆனால் நமச்சி காசை கொடுக்கிறேன் எப்படியாவது என் தம்பியை வெளியில் எடுக்கனும் நீங்க கைரேகை தடையை அழிக்கணும் என்று பேச, யாருகிட்ட காசு கொடுத்து விலைக்கு வாங்க பாக்குறியா என்று டாக்டர் கத்தி ஊரைக் கூட்டுகிறார். அதோடு போலீசை கூப்பிடுங்க என்று அந்த டாக்டர் மிரட்ட தமிழும் நமச்சியும் வெளியே வருகின்றனர்.
பிறகு தமிழ் சரஸ்வதியை பார்க்க ஜெயிலுக்கு போகிறார். அங்கு சரஸ்வதியை தூங்கக்கூட விடாமல் அதிகமாக துன்புறுத்தப்பட்டு நடக்கவே முடியாமல் சோர்ந்து போய் வருகிறார். அதனால் அருகில் உள்ளவர்கள் சரஸ்வதியை ரொம்ப துன்புறுத்தறாங்க சீக்கிரமா வெளியே எடுத்துட்டு கூட்டிட்டு போயிடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தமிழ் வெளியில் எடுக்க முடியாத கையாலாதவன் ஆயிட்டேனே என அழுது கொண்டிருக்கிறார். அப்போது சரஸ்வதி நீங்கள் அழாதீங்க. கண்டிப்பா ஏதாவது ஒரு வழி கிடைக்கும். நீங்கள் தைரியமாக இருந்தால் தான் நான் தைரியமாக இருக்க முடியும் என்று சரஸ்வதி ஆறுதல் கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications