வார்டனால் மாட்டும் அர்ஜுன்.. கண்கலங்க வைத்த சரஸ்வதி.. ஆனால் இனி ரசிகர்களுக்குத் தான் கஷ்டம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஜெயிலிலிருந்து வெளியே வந்த சரஸ்வதி ஜெயில் வார்டனால் தான் பாதிக்கப்பட்டது குறித்து வீட்டில் அனைவரிடமும் சொல்லி தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொள்ள அனைவரும் அதைக் கேட்டு கஷ்டப்படுகின்றனர்.
மறுபக்கத்தில் கம்பெனியில் அர்ஜுனால் புது பிரச்சனை வர இருக்கிறது. ஏற்கனவே கம்பெனி விஷயத்தில் தமிழிடம் கேட்காமல் கார்த்தி எடுத்த முடிவால் வேலையாட்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் மேக்னா பிரச்சனை முடிவடைந்ததும் மீண்டும் அரச்ச மாவையே அரைக்க தொடங்கி இருக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் சரஸ்வதி கோர்ட்டில் இருந்து விடுதலை ஆகி வெளியே வர அப்போது தமிழ் அவரை பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கண் கலங்குகிறார். பிறகு அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். அதற்கு முன்பு கார்த்தி மற்றும் வசு, சரஸ்வதி எப்போ வருவாங்க என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு சரஸ்வதி வந்ததும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து உள்ளே அழைத்து செல்கின்றனர்.
சரஸ்வதி குளித்துவிட்டு கீழே வருகிறார். அப்போது சரஸ்வதியை தமிழ் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதற்குள் சரஸ்வதிக்கு என்னென்ன வேணுமோ எல்லா சாப்பாடுகளையும் தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஆனால் சரஸ்வதி இது எதுவுமே எனக்கு வேண்டாம் என்று கூறி விடுகிறார். அதோடு அனைவரிடமும் மன்னிப்பும் கேட்கிறார்.

அதனால் சரஸ்வதி நான்வெஜ் விரும்புகிறாரோ என்று மட்டன் வாங்கி கொண்டு வரவா என்று கேட்க அதற்கு அதெல்லாம் வேண்டாம் எனக்கு தயிர்சாதம் வேணும்... ஜெயிலில் நான் இருந்தபோது நிறைய காரம் போட்டு சாப்பாடு கொடுப்பாங்க, அதை வாயிலேயே வைக்க முடியாது நெருப்பு மாதிரி இருக்கும். அதனால எனக்கு தயிர் சாதம் கிடைக்குமா? என்று கேட்கிறார். உடனே தயிர் சாதம் ரெடி பண்ணி கொடுக்கின்றனர்.
அதை தமிழ் ஊட்டி விடுகிறார். பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது சரஸ்வதியை இவ்வளவு கொடுமை பண்ணி இருக்காங்களே என்று கோதை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தமிழ் அந்த வார்டன் மேல தான் விசாரணை வச்சிருக்காங்களே கண்டிப்பா அவங்க மாட்டுவாங்க இதற்கான தண்டனை அனுபவிப்பாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதோடு மேக்னா வாழ வேண்டிய பொண்ணு இப்படி சொத்துக்காக சொந்த தாய்மாமனே கொலை செஞ்சுட்டானே என்று பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்க அதற்கு நம்ம வீட்டிலயும் தான் சொத்துக்காக தானே ஒருத்தன் இவ்வளவு நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு சொத்துக்காக நம்மளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டானே இந்த மாதிரி சொத்துக்காக நிறைய பேரு தப்பான வேலைகளை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பிறகு சரஸ்வதியும் தமிழும் தூங்கப்போகின்றனர். சரஸ்வதி தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்த வார்டன் தன் மீது தண்ணீரை ஊற்றியதை வைத்து கனவு கண்டு தண்ணீர் ஊற்றாதீங்க.. நான் தூங்கல என்று அலறி அடித்து கத்துகிறார். அதற்கு தமிழ் என்னாச்சு என்று கேட்க, ஜெயிலில் நான் கண் அசந்து தூங்கிவிட்டால் கூட அந்த வார்டன் வந்து தண்ணீரை என் மீது ஊற்றி விடுவார் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் என்ன ஆச்சு இவ்வளவு சத்தம் கேட்கிறது என்று வர ஜெயிலில் நடந்ததை எல்லாம் சரஸ்வதி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு படுபாவிங்க இந்த மாதிரி எல்லாம் பண்ணி வச்சிருக்காங்களே! என்று எல்லோரும் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதோடு வசு இப்ப பயப்படாதீங்க நீங்க வீட்லதான் இருக்கீங்க என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications