போலீஸ் கையில் கிடைத்த ஆதாரம்.. சரஸ்வதிக்கு ஆதரவாக அர்ஜுனை எதிர்க்கும் ராகினி.. மேக்னா சாகவில்லையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது. அதில் போலீசுக்கு மேக்னாவை கொலை செய்த இடத்தில் இருந்து பரமு உடைய கண்ணாடி துண்டுகள் கிடைக்கிறது. அதை வைத்து போலீஸ் கேசை பரமு பக்கம் திசை திருப்புகிறது.
மறுபக்கத்தில் ராகினி வீட்டில் சரஸ்வதி தான் கொலை செய்திருப்பார்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அதற்கு ராகினி மறுத்து பேசி சரஸ்வதிக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். இதனால் அர்ஜுன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பரமு அர்ஜுனிடம் ஓடிவந்து மாப்பிள்ளை நம்ம நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்துச்சு. அந்த ரவுடிங்க போலீஸிடம் சரணடைந்து விட்டார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்தாச்சு என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு வரும் அர்ஜுனனின் அம்மா என்ன ஆச்சு? என்ன பணம்? என்ன ரவுடி? என்று விசாரிக்க அப்போது அவரிடம் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்த கட்டத்தில் ராகினியிடம் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ராகினி சரஸ்வதி இப்போ எங்க இருக்கிறார் என்று கேட்க, அதற்கு அர்ஜுனுடைய அண்ணி கொலை செஞ்சவங்க எங்க இருப்பாங்க ஜெயில்ல தான் இருப்பாங்க என்று நக்கலாக சொல்ல அதற்கு ராகினி சரஸ்வதி அண்ணி கண்டிப்பா கொலை செஞ்சிருக்க மாட்டாங்க. அவங்களை பத்தி எனக்கு தெரியும்.

நீங்க யாரு என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் என்று உறுதியாக பேசிக் கொண்டிருக்க அதற்கு அர்ஜுனுடைய குடும்பத்தினர் நக்கலாக பேசுகின்றனர். அப்போது அபி உண்மையில் கொலை செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்க கண்டிப்பா மாட்டுவாங்க. சரஸ்வதி அக்கா கண்டிப்பா கொலை செஞ்சிருக்க மாட்டாங்க என்று பேசிக் கொண்டிருக்கும் போது ராகினி எப்படியும் தமிழ் அண்ணன் சரஸ்வதி அண்ணியை வெளிய எடுத்துருவாங்க.
ஏன்னா அண்ணி மேல அண்ணன் அவ்வளவு உசுரா இருப்பாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார் .அடுத்த கட்டத்தில் தமிழ் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது எல்லோரும் சரஸ்வதியின் நிலைமையை சொல்லி வருத்தப்பட்டு கொண்டு இருக்க அந்த நேரத்தில் தமிழும் கார்த்திக்கும் அங்கு வந்ததும் எல்லோரும் மினிஸ்டர் என்ன சொன்னாரு? என்ன நடந்தது என்று எல்லோரும் விசாரித்துக் கொண்டிருக்க,
அப்போது தமிழும் கார்த்திக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இவர்கள் தமிழை அடித்ததற்காக கேஸ் கொடுக்க போன நேரத்திலேயே அங்கு அடியாள்கள் வந்து சரண் அடைந்தது என எல்லா விஷயத்தையும் சொல்லி இந்த விஷயத்தில் அர்ஜுன் மீதும் கலிவரதன் மீதும் தான் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த காட்சியில் தமிழ் வீட்டில் ரூமில் தனியாக இருக்கும்போது சரஸ்வதியோடு பழகியது ஆரம்பத்தில் கஷ்டப்பட்டது என எல்லாவற்றையும் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல ஜெயிலில் சரஸ்வதியும் தமிழை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெயிலில் சாப்பாடை தள்ளிவிட்டு விடுகின்றனர். அதற்கு சரஸ்வதி ஏன் சாப்பாடை இப்படி தள்ளி விடுறீங்க என்று கேட்க அதற்கு ஜெயில் வார்டன் அடிக்கப் போகிறார்.
இப்படியான சோகமான காட்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
மறுநாள் காலையில் தமிழும் கார்த்திக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகின்றனர் அப்போது தமிழ் அர்ஜுன் மீதும் கலிவரதன் மீதும் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு போலீஸ் சந்தேகத்தை வைத்து ஒன்னும் பண்ண முடியாது ஏதாவது எவிடன்ஸ் இருந்தா நல்லது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இன்னொரு கான்ஸ்டபிள் வந்து பார்ன்சி ரிப்போர்ட் வந்துட்டு என்று எல்லாவற்றையும் கொடுக்கிறார்.

அதில் சரஸ்வதி உடைய முடி இருப்பதால் இந்த கேசில் இனி நம்மால் எதுவும் பண்ண முடியாது என்று போலீஸ் அதிர்ச்சி கொடுக்கிறார். அதோடு இன்னொரு கவரில் ஒரு கண்ணாடி துண்டு கிடைக்கிறது. அதை பார்த்ததும் தமிழ் இது பரமுடைய கண்ணாடித்துண்டு என்று சொல்ல அதற்கு போலீஸ் அப்படியா உண்மையாவா? இது கண்டிப்பா உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, அதற்கு ஆமாம் என்று தமிழ் உறுதிப்படுத்துகிறார்.
பிறகு போலீஸ் இனி அடுத்த கட்ட வேலையை பார்ப்போம் என்று பரமுடைய வீட்டிற்கு கிளம்புகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதே நேரத்தில் மேக்னா கொலை செய்யப்பட்டது மட்டும்தான் காட்சிகளில் காட்டி இருப்பதால் ஒருவேளை உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்விகளும் சமூக வலைதளத்தில் எழுந்து வருகிறது. ஏனென்றால் மேக்னா இறந்து போய்விட்டார் என்று மட்டும் தான் சொல்லி இருக்கிறார்கள் தவிர அவருடைய இறுதி காட்சிகள் எதுவுமே காட்டப்படவில்லை.
மேக்னா பெரிய பிசினஸ் செய்பவராக இருக்கிறார். ஆனால் அவர் இறந்து போயிருக்கிறார் என்றால் அது பற்றி பெரிய அளவில் எந்த செய்தியும் காட்டப்படாமல் இருப்பதால் ஒருவேளை இன்னும் ஒரு சில எபிசோடுகள் கழித்து மேக்னா உயிரோடு இருப்பது போன்று காட்சிகள் காட்டப் போகிறார்களா என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications