சரஸ்வதியை ஆள் வைத்து கொடுமைப்படுத்தும் அர்ஜுன்.. தமிழுக்கு கிடைத்த முக்கிய “ஆதாரம்”
சென்னை: தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 8ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் சரஸ்வதியை போலீஸ் கஸ்டடியில் கொடுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜெயில் வார்டனுக்கு அர்ஜுன் பணத்தை கொடுத்ததால் சரஸ்வதியை பாடாய் படுத்துகிறார்.
அதே நேரத்தில் சரஸ்வதியை வெளியே கொண்டு வருவதற்காக தமிழுக்கு முக்கிய ஆதாரம் ஒன்றும் கிடைக்கிறது. இந்நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுன் வார்டனை பார்க்க வந்திருக்கிறார். அப்போது அவரிடம் சரஸ்வதி ஜெயிலில் டார்ச்சர் அனுபவிக்க வேண்டும் நிம்மதியாக இருக்க கூடாது அவ ரொம்ப தைரியமாக இருப்பேன்னு சொல்லுவா அவ தைரியத்தை உடைக்கணும் என்று சொல்ல அதற்கு வார்டன் இப்படி பண்ணுனா எனக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடாதே என்று கேட்க, அதற்கு அதெல்லாம் பிரச்சனை வராது அதை நான் பார்த்துக்குறேன் என்று அர்ஜுன் பணத்தை கொடுக்கிறார்.
அடுத்ததாக தமிழ் வீட்டில் இருக்கும்போது சரஸ்வதிக்கு ஏதோ ஆவது போல கனவு காண்கிறார். அதனால் சரஸ்வதியை பார்க்க வேண்டும் என்று புலம்பி கொண்டு இருக்க எல்லோரும் இப்போ பார்க்க முடியாது என்று தமிழுக்கு ஆறுதல் சொல்கின்றனர். மறுபக்கத்தில் சரஸ்வதி உட்கார்ந்திருக்கும் போது சாப்பாடை ஒரு தட்டில் போட்டு வார்டன் சரஸ்வதியை சாப்பிட சொல்லி மிரட்டுகிறார்.
சரஸ்வதி அந்த சாப்பாடு எடுத்து வாயில் வைத்து அதில் உப்பு காரம் அதிகமாக இருப்பதால் துப்பி விடுகிறார். அதனால் கோபம் பண்ண வார்டன் திட்ட எனக்கு சாப்பாடு வேண்டாம் தண்ணியே போதும் என்று தண்ணீர் குடித்துவிட்டு சரஸ்வதி தூங்கி விடுகிறார். அடுத்ததாக தூங்கிக் கொண்டிருக்கும் சரஸ்வதியை பார்த்து வார்டன் எப்படி இவ நிம்மதியா தூங்கலாம் என்று தண்ணீரை எடுத்து மேலே ஊற்றுகிறார்.
அர்ஜுன் கொடுத்த பணத்திற்காக வார்டன் சரஸ்வதியை பாடாய்படுத்துகிறார். மறுநாள் காலையில் தமிழும், நமச்சியும் சரஸ்வதியை பார்க்க வருகிறார்கள். அப்போது தமிழ் சரஸ்வதியின் முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியாகி என்னாச்சு உடம்புக்கு எதுவும் சரியில்லையா முகம் எல்லாம் சோர்வா இருக்குது கண்ணு உள்ள போயிருக்கிறது என்று கேள்வி கேட்க அதற்கு பக்கத்தில் இருந்த பெண் இவளை எப்படியாவது வெளியே கூட்டிட்டு போயிடுங்க இங்க ரொம்ப டார்ச்சர் அனுபவிக்கிறா,

மேக்னாவால் கலிவரதனுக்கு கிடைத்த அதிர்ச்சி.. இத்தனை சூழ்ச்சி நடந்து இருக்கா? மாட்டிக்கொண்ட அர்ஜுனும் மாமாவும்
நேத்து சாப்பாட்டில் மிளகாய் பொடி அள்ளி போட்டு கொடுக்குறாங்க என்று உள்ளே நடந்த எல்லாவற்றையும் போட்டு கொடுக்கிறார். இதனால் தமிழ் கோபத்தில் கொந்தளிக்கிறார். அதோடு ஜெயில் வார்டன் வந்ததும் என்ன இப்படி எல்லாம் மரியாதை இல்லாமல் நடத்துறீங்க என்று திட்டுகிறார். அதற்கு ஜெயில் வார்டன் உங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கணும் கொலைகார குடும்பம் என்று பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
இனிவரும் எப்படி தமிழ் சரஸ்வதியை காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஜெயில் வார்டன் மீது இனி கேஸ் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலமாகவும் சரஸ்வதி வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதுபோல ஜெயில் வார்டனுக்கு அர்ஜுன் பணம் கொடுத்த விஷயத்தை தமிழ் கண்டுபிடித்தால் அடுத்தடுத்த உண்மைகள் வெளியே வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications