மேக்னாவால் கலிவரதனுக்கு கிடைத்த அதிர்ச்சி.. இத்தனை சூழ்ச்சி நடந்து இருக்கா? மாட்டிக்கொண்ட அர்ஜுனும் மாமாவும்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி ஆறாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. இதில் சொத்துக்காக ஆசைப்பட்ட கலிவரதனுக்கும் அவருடைய மகனுக்கும் மேக்னா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் கலிவரதனை அர்ஜுனுன் அவருடைய மாமாவும் அசிங்கப்படுத்துகின்றனர்.
மறுபக்கத்தில் சரஸ்வதியை கூட்டிட்டு வந்த ஆட்டோக்காரர் அன்று நடந்த அத்தனை உண்மைகளையும் போலீஸ் முன்பு சொல்கிறார். கூடவே தான் கோர்ட்டில் வந்து உண்மையை சொல்ல போவதாகவும் சொல்கிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்கள் இன்றைய எபிசோடில் நடந்தது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுனனும் அவருடைய மாமா பரமும் ஒரு ரெஸ்டாரண்டில் இருக்கின்றனர். அப்போது அர்ஜுனிடம் பரமு நான் மேக்னாவை கத்தியால் குத்தியதும் அந்த இடத்திற்கு சரஸ்வதி வந்த நேரத்தில் நாங்கள் அங்கிருந்து ஓடி வந்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு கலிவரதன் அவருடைய பையனும் வருகின்றனர்.
அவர்கள் சோகமாக இருப்பதை பார்த்ததும் அர்ஜுனும் அவருடைய மாமாவும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது பல கோடிக்கு அதிபதி ஆயிட்டீங்க என்று பேசிக் கொண்டிருக்க அதனால் கோபமான கலிவரதன் பரமன் சட்டை பிடித்து அடிக்க போக உடனே கலிவரதனின் மகன் நீங்க இந்த மாத்திரையை சாப்பிடுங்க கோபப்படாதீங்க என்று அவரை சமாதானப்படுத்த அர்ஜுனுக்கும் அவருடைய மாமாவுக்கும் என்ன நடந்தது என்று புரியாமல் இருக்கின்றனர்.
அப்போது கலிவரதன் நாங்க சொந்த ஊர்ல கூட இருக்க முடியாம இங்க வந்துட்டோம் என்று சொல்கிறார். அதற்கு அர்ஜுன் என்ன ஆச்சு என்று பதட்டத்தோடு கேட்க அதற்கு கலிவரதன் மேகனா கல்யாணம் முடிந்து குழந்தை குட்டியோடு இருந்தால் தான் அந்த சொத்து எல்லாம் அவளுக்கு இல்லன்னா அந்த சொத்து எல்லாம் அனாதை விடுதிகளுக்கும், டிரஸ்டுக்கும் போயிடும் என்று உயில் எழுதி வச்சிருக்கா என்று சொல்ல, இதை கேட்டதும் அர்ஜுனுன் அவருடைய மாமாவும் சிரிக்கின்றனர்
உங்களை நம்பி நாங்க இவ்ளோ பெரிய விஷயத்தை செஞ்சிருக்கோம் ஆனா நீங்க என்னடா சொத்து யாரு பேர்ல இருக்குன்னு தெரியாம மாஸ்டர் பிளான் போட்டு இருக்கீங்க என்று கேட்டு சிரிக்கிறார்கள். அதோடு கலிவரதன் பேரில் சொத்து இல்லை என்பதை தெரிந்து கொண்டதும் அர்ஜுனும் அவருடைய மாமா பரமும் கலிவரதனை மரியாதை இல்லாமல் பேசுகின்றனர்.
அடுத்த காட்சியில் போலீஸ் அந்த ஆட்டோக்காரரை கூட்டிட்டு வருகிறார்கள். அப்போது அவர் போலீஸ் ஸ்டேஷனில் சரஸ்வதி அன்னைக்கு ஆட்டோவில் வந்தது, அப்போது மேக்னா அவருக்கு போன் பண்ணி உதவி கேட்டது என்ன அன்று நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார். அதோடு தான் பாதியில் இறக்கி விட்டதையும் சொல்லிவிட்டு நான் இதை இங்கே சொல்லிட்டேன் ஆனா கோர்ட்டில் வந்து என்னால் சாட்சி சொல்ல முடியாது நான் புள்ள குட்டிக்காரங்க, எனக்கு ஏதாவது ஆயிட்டுன்னா அவங்களை யாரும் பாத்துக்குவா என்று பேசுகிறார்.
அதற்கு தமிழ் அவருடைய கையை பிடித்து கெஞ்சி கொண்டிருக்கிறார். அதனால் மனம் மாறிய ஆட்டோக்கார நான் சாட்சி சொல்கிறேன் எனக்கு மனசு உறுத்துது என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் தமிழ் வீட்டிற்கு வருகிறார். நடந்த எல்லாவற்றையும் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முன்பு சரஸ்வதியை ஜெயிலில் போய் பார்த்து ஆட்டோ டிரைவர் சாட்சி சொல்லறேன் என்று சொல்லிவிட்டார், நீ நாளைக்கு கண்டிப்பா வீட்டுக்கு வந்து விடலாம் என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்ததையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டதும் வீட்டிலிருந்தவர்கள் எல்லோரும் சரஸ்வதி ஜெயிலில் கஷ்டப்படுவதை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications