கோர்ட்டில் அர்ஜுனை மாட்டி விட்ட ராகிணி.. சொத்து விஷயத்தில் எடுத்த முக்கிய முடிவு.. தமிழ் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் தமிழ் குடும்பத்தினர் அர்ஜுன் தங்களுடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கி விட்டான் என்று கேஸ் கொடுத்து இருந்த நிலையில் அது கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. கோர்ட்டில் ராகிணி ஆஜராகி இருந்த நிலையில் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறார்.
அதே நேரத்தில் தமிழ் குடும்பத்திற்கு மீண்டும் ராகிணி சொத்தை எழுதி கொடுத்து விடலாம் என்று சொன்ன யோசனையை கேட்டு அர்ஜுனனின் குடும்பத்தினர் அடுத்த பிளானை போட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதே விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அர்ஜுன் மற்றும் ராகிணி மீது கோதை குடும்பத்தினர் தங்களை ஏமாற்றி அர்ஜுன் சொத்தை எழுதி வாங்கிவிட்டார் என்று கொடுத்திருந்த கேஸ் நீதிமன்றத்திற்கு ஹியரிங் வந்திருக்கிறது. அதற்கு ராகிணியும் வந்திருக்கிறார். அப்போது நான் உங்களிடம் கேஸை வாபஸ் வாங்க சொல்லி அவ்வளவு கேட்ட பிறகும் நீங்க வாங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க இல்ல என்று வழக்கம் போல கோவப்பட்டு கொண்டிருக்கிறார். ஆனால் கோதை குடும்பத்தினர் யாரும் அதை பெரிசாக கண்டுகொள்ளவில்லை.
அதே நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்குகிறது. அப்போது கோதை குடும்பத்தில் வக்கீல் நீதிபதியிடம் கோதை பெயரில் இருந்த ஒரு வீட்டை ராகிணி பெயருக்கு எழுதிக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் அர்ஜுன் மற்றும் ராகிணி அவர்களுக்கே தெரியாமல் பொய் பத்திரம் ரெடி பண்ணி அதில் கையெழுத்து வாங்கி விட்டார்கள் என்று சொல்ல அதற்கு ராகிணி தரப்பு வைக்கில் அது எப்படி ஒருத்தங்க படிச்சு பார்க்காமல் கையெழுத்து போடுவாங்களா? என்று கேள்வி கேட்க,

அதற்கு கோதை நான் செய்தது தப்புதான். என்னை மன்னித்து விடுங்கள். நான் என்னுடைய மகள் மீது வைத்திருந்த நம்பிக்கையால் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டேன். ஆனால் எனக்கு இரண்டு ஆண் பையன்களும் ஒரு பொண்ணும் இருக்கும் போது மொத்த சொத்துக்களையும் பொண்ணுக்கு எழுதி கொடுப்பாங்களா? அர்ஜுன்தான் எங்களை ஏமாற்றி சொத்துக்களை வாங்கி விட்டான் என்று சொல்ல நீதிபதி ராகிணி இடம் கேள்வி கேட்கிறார்.
இது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஏமாற்றி தான் வாங்கினீர்களா? என்று கேட்க அதற்கு ராகிணி அது வேற யாருக்கும் அம்மா எழுதிக் கொடுக்கலையே எனக்கு தானே எழுதி தந்தாங்க என்று சமாளிக்கிறார். பிறகு வேறு வழியில்லாமல் பொய் சர்டிபிகேட் ரெடி பண்ணி கையெழுத்து வாங்கினதை ஒத்துக் கொள்கிறார். அதற்கு நீதிபதி நீங்கள் எழுதி வாங்கிய சொத்துக்களை மீண்டும் உங்க குடும்பத்திடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அட்வைஸ் செய்து அனுப்புகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த ராகினி அர்ஜுன் அம்மா மற்றும் அக்காவிடம் நான் இந்த சொத்துக்களை அம்மா அப்பா பெயருக்கே மீண்டும் எழுதி கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன். இந்த சொத்துக்களால் தான் பிரச்சனை மேல பிரச்சனை வந்துகிட்டே இருக்கு... எனக்கு எப்போதுமே சொத்துக்கள் மீது ஆசை இருந்தது இல்லை என்று சொல்ல அதற்கு அர்ஜுன் அம்மா கோபப்படுகிறார்.

அதோடு, உனக்கு விருப்பமில்லை என்றால் நீ எழுதி கொடுத்து விடு ஆனால் இந்த சொத்துக்களுக்காக எங்க வீட்டில் இரண்டு உயிர் போய் இருக்கு. என்னுடைய கணவரும் என்னுடைய மகளும் உயிரை விட்டு இருக்காங்க. அதற்கு பழிவாங்க தான் அர்ஜுன் இப்படி செஞ்சான். அது தப்புன்னு உனக்கு தோணுச்சுன்னா நீ எழுதி கொடுத்துடு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் அர்ஜுனுக்கு போன் பண்ணி இங்கே நடந்தது எல்லாவற்றையும் சொல்ல, அதற்கு அர்ஜுன் அவ சொத்துக்களை எழுதிக் கொடுக்க முடிவு எடுத்துட்டாளா? அடுத்த பிளானை போடணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் தமிழ் நானும் இந்த சொத்துக்கள் ராகினிக்கு எழுதிக் கொடுத்தது அப்படியே இருக்கட்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன் ஆனால் நாம அப்படி விட்டால் இந்த அர்ஜுன் ஒரேடியாக மேலே போய்விடுவான். அதனால் தான் நான் கேஸ் போட சம்மதித்தேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications