மொத்த சொத்தையும் எழுதி வாங்க அர்ஜுன் போட்ட பிளான்.. ராகினி சொன்ன வார்த்தை.. ஏமாறும் சரஸ்வதி தமிழ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் ஒன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் தமிழ் மீது மேக்னா காதலோடு இருக்க தமிழ் தன்னுடைய மனைவி என்று சரஸ்வதி அறிமுகம் செய்யும்போது மேக்னா போனை வைத்து விடுகிறார்.

அதுபோல இன்னொரு பக்கத்தில் கோதை மீது ராகினிக்கு இருக்கும் பாசத்தை பார்த்து சொத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றுவதற்காக அர்ஜுன் புது ப்ளான் போட்டு இருக்கிறார்.

tamilum saraswathiyum serial November 1st promo and episode full update

இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். அந்த வகையில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ராகினி குழந்தையை குளிப்பாட்டி பொட்டு வைத்து கொஞ்சி கொண்டிருக்கிறார். அப்போது குழந்தையிடம் உங்க அப்பா பாரு உன்னை தூக்காம பெரிய வேலை செஞ்சுட்டு இருக்காரு என்று ராகினி சொல்ல, அதற்கு ஆபீஸில் புது ஆர்டர் வந்து இருக்கு அதான் பாத்துட்டு இருக்கேன் என்று அர்ஜுன் சொல்கிறார்.

இதற்கிடையில் அங்கு வரும் அர்ஜுனன் அம்மா குழந்தை தூங்கி விட்டதா குழந்தைக்கு காதில் இந்த எண்ணெய்யை விட வேண்டும் என்று சொல்ல அதனால் கோபம் அடைந்த ராகினி இதையெல்லாம் செய்யக்கூடாது. எங்க அம்மா எனக்கு எல்லாமே சொல்லி தந்து இருக்காங்க. குழந்தைக்கு என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும் என்று சொல்ல அதை கேட்டு கோபமான அர்ஜுனின் அம்மா அர்ஜுனிடம் இவளுக்கு இருக்கிற திமிர பாத்தியா?

எதுக்கெடுத்தாலும் கோதை கோதை என்று சொல்றா, இப்படியே போச்சுன்னா மறுபடியும் கோதையை சேர்த்தப்பாளோ என்று சொல்ல, இதற்கெல்லாம் நான் ஒரு முடிவு கட்டுறேன் என்று அர்ஜுன் கூறுகிறார். மறுபக்கத்தில் சரஸ்வதி கம்பெனியில் இருக்கும் தமிழுக்கும் அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் டீ போட்டு கொடுக்கிறார். அந்த நேரத்தில் மேக்னா போன் செய்ய மேக்னாவிடம் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது மேக்னா சாப்பிடாமல் இருப்பதால் அவரை சாப்பிட்டுவிட்டு வருமாறு தமிழ் சொல்ல உடனே சரி என்று மேக்னா போனை வைத்து விடுகிறார். ஆனால் அது தெரியாமல் தமிழ் என் மனைவி உங்க கிட்ட பேசணுமாம் என்று சொல்லி சரஸ்வதியிடம் போனை கொடுக்கிறார். சரஸ்வதி ஃபோனை வாங்கி பேச போக அங்கு மேக்னா போனை கட் பண்ணி விடுகிறார்.

இதைத் தொடர்ந்து மேக்னா வீட்டிற்கு அவசரமாக வந்து எனக்கு பசிக்குது. ஏதாவது செஞ்சிதாமா என்று கேட்க, அவருடைய வேலைக்கார அம்மா போகிறார். அப்போது மேக்னா தமிழை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கத்தில் ராகினியின் மொத்த சொத்தையும் தன் பெயருக்கு மாற்ற அர்ஜுன் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

tamilum saraswathiyum serial November 1st promo and episode full update

அப்போது நான் சொன்னா ராகினி கேட்க மாட்டா அவளுக்கு சந்தேகம் வரும். ஆனால் சொல்ல வேண்டிய ஆளை வச்சு சொன்னா கண்டிப்பா கேட்பா என்று புது பிளான் போட்டு ஆடிட்டரை அங்கு வர வைத்து அவரின் மூலமாக கம்பெனியில் விஷயமாக அடுத்த சேர்மனாக ராகினியை ஆக்கிவிடலாம் என்று சொல்ல வைக்கிறார். அதற்கு ராகினியும் அர்ஜுன் ப்ளான் தெரியாமல் எனக்கு கம்பெனி பற்றி என்ன தெரியும் உங்களுக்கு தானே தெரியும் நீங்களே கம்பெனி பிசினஸ் எல்லாத்தையும் பாத்துக்கோங்க என்று சொல்லி அதற்கான வேலைய பாருங்க ஆடிட்டர் என்று கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+