கதறி அழுத மேக்னா.. தமிழ் செயலால் சரஸ்வதி அதிர்ச்சி.. அர்ஜுனின் அடுத்த பிளான்.. தொடங்கியது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 21ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மேக்னாவுக்கு அவார்ட் ஃபங்ஷன் நடைபெறுகிறது. அப்போது அவரை ஒருவர் அவமானப்படுத்த அதற்கு தமிழ் தட்டி கேட்கிறார்.

அதனால் அனைவரும் முன்னிலையிலும் மேக்னா தமிழை கட்டிப்பிடிக்க அதை பார்த்து அர்ஜுன் புது பிளான் போடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் வர தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே தமிழுக்கு திருமணமானது மேக்னாவிற்கு தெரியாமல் நமச்சி மற்றும் மாமா மறைத்து கொண்டிருக்கின்றனர். மேக்னாவை பழிவாங்க வேண்டும் என்று மேக்னாவின் மாமா தமிழை வைத்து கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இது தெரியாமல் நமச்சியும் இந்த சூழ்ச்சியில் மாட்டி இருக்கிறார். அதோடு தமிழுக்கு கல்யாணம் முடிந்தது தெரிந்து விட்டால் தங்களுக்கு தந்த ஆர்டரை மேக்னா கேன்சல் பண்ணி விடுவார் என்று நினைத்த நமச்சி சரஸ்வதி கூடவே இருக்கும் போது தமிழ் பற்றி எதுவும் சொல்லாமல் ஒவ்வொரு இடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழ் உடைய ஆர்டரை கெடுக்க வேண்டும் என்று அர்ஜுனும் பெங்களூருக்கு வந்திருக்கிறார்.
ஆனால் மேக்னா ஆபீஸில் மேக்னாவின் மாமா அர்ஜுனை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மேக்னாவிற்கு அவார்ட் ஃபங்ஷன் நடைபெறுகிறது. அப்போது மேக்னாவிற்கு பெஸ்ட் தொழிலதிபர் அவார்ட் கிடைக்கிறது.
அதை பொறுத்துக் கொள்ள முடியாத இன்னொரு தொழில் அதிபர் உண்மையாகவே மேடையில் அவமானப்படுத்துகிறார். அதில் நீ இந்த அவார்ட் வாங்கினேன் என்று சொன்னதை விடவும் உன்னுடைய அழகு வாங்கி கொடுத்து இருக்கு. அது உனக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். அப்போது அங்கு வரும் தமிழ் அவரை நிறுத்தி உங்களை மாதிரி ஆம்பளைங்களால தான் திறமையான பல பெண்கள் வெளிச்சத்துக்கு வராம இருக்காங்க.
அவங்கள பாராட்டலனாலும் பரவால்ல சார் பொறாமையால இவ்வளவு சிறுமைப்படுத்தி பேசாதீங்க என்று சொல்ல அதைக் கேட்டு அழுது கொண்டே ஓடிவந்து மேக்னா தமிழை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் மேக்னா கட்டி பிடிச்சதுல வெறும் பிரண்ட்ஷிப் மட்டும் இல்ல வேற எதுவோ இருக்கு என்று யோசிக்கிறார். இந்த ப்ரோமோவை எதிர்பார்க்காத ரசிகர்கள் நல்லா போயிட்டு இருந்த சீரியல் இப்படி ஒரு திருப்பம் தேவையா?
நாங்க கூட இந்த ப்ரோமோவின் தம் லைன் பார்த்து தமிழ் பற்றிய உண்மை மேக்னாவிற்கு தெரிய வந்துவிட்டதோ என்று நினைத்தோம். ஆனால் இப்படி கதை போய்க் கொண்டிருக்கிறது. தென்றல் போலவோ அல்லது திருமதி செல்வம் சீரியல் போலவோ கொண்டு போய் விடாதீர்கள் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications