தமிழை வைத்து நமச்சி ஏமாற்றுவதை தெரிந்த அர்ஜுன்.. ரூமிற்கு வந்த மேக்னா.. கோபப்படும் சரஸ்வதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 22 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் தமிழுக்கு திருமணம் ஆனதை நமச்சி மறைத்துக் கொண்டிருப்பதை அர்ஜுன் தெரிந்து கொண்டு தமிழை மாட்டி விட வேண்டும் என்று பிளான் போடுகிறார்.

tamilum saraswathiyum serial November 22th promo and episode full update

அதே நேரத்தில் தமிழை பார்ப்பதற்காக ரூம்க்கு வந்த மேகனாவிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக நமச்சி பல தில்லாலங்கடி வேலைகளை பார்க்க அதனால் சரஸ்வதி கோபம் ஆகிறார். இந்தநிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சரஸ்வதி தமிழிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நாங்க கோவிலுக்கு போனோம். இந்தாங்க பிரசாதம் என்று சரஸ்வதி கொடுக்க, அதை பார்த்து தமிழ் எந்த கோவிலுக்கு போனீங்க என்று கேட்கிறார். அதற்கு சரஸ்வதி ஏர்போர்ட்டுக்கு அருகில் இருக்கும் அந்த கோவிலுக்கு தான் போனோம் என்று சொல்ல உடனே தமிழ் நானும் மேக்னாவும் அங்கே தானே வந்திருந்தோம் என்று சொல்கிறார்.

tamilum saraswathiyum serial November 22th promo and episode full update

உடனே சரஸ்வதி எத்தனை மணிக்கு என்று கேட்க, அதுக்கு தமிழ் நாங்கள் லஞ்ச் முடிச்சிட்டு அங்கே தான் வந்தோம் என்று சொல்கிறார். இதை கேட்டு சரஸ்வதி நமச்சியை பார்த்து கோபமாக முறைக்கிறார். நான் அப்பவே சொன்னேன் தமிழ், உங்க வாய்ஸ் கேக்குதுன்னு. ஆனா நமச்சி இது வேற யாரோ தமிழ்ல பேசுறாங்க என்று என்னிடம் சொல்லிவிட்டார் என்று திட்டிக் கொண்டிருக்க நமச்சி அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆகி விடுகிறார்.

அந்த சமயத்தில் மேக்னா தமிழை தேடி ரூமிற்கு வருகிறார். அப்போது சரஸ்வதி குளிப்பதற்காக உள்ளே சென்று விடுகிறார். உள்ளே வந்ததும் தமிழுக்கு மேக்னா தேங்க்ஸ் சொல்கிறார். அதோடு ஸ்வீட் கொடுக்கிறார். நான்தான் இந்த வருடம் பெஸ்ட் அவார்ட் விருது வாங்குவேன் என்று எல்லாரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று மேக்னா பேசிக்கொண்டு இருக்க, அந்த சமயத்தில் சரஸ்வதி இருப்பதை மறைப்பதற்காக நமச்சி சரஸ்வதியின் செப்பல், ஹேர்பேண்ட் போட்டோ என்ன எல்லாத்தையும் மறைத்துக் கொண்டிருக்கிறார்.

tamilum saraswathiyum serial November 22th promo and episode full update

இதனால் தமிழ் ஏன் இப்படி நெழிகிறாய் என்று கேட்க, ஸ்வீட் அருமையாக இருக்கிறது என்று நமச்சி சமாளித்து மேக்னாவை வெளியே அனுப்புகிறார். அப்போது நாளை நடக்கும் ஃபங்ஷனுக்கு எல்லாரும் வந்துருங்க என்று மேக்னா சொல்லிவிட்டு போகிறார். அடுத்து சரஸ்வதி பாத்ரூமில் இருந்து வெளியே வருகிறார். மறுபக்கத்தில் அர்ஜுன் இவங்க தமிழுக்கு கல்யாணம் ஆனதை எதுக்காக மறைச்சி வச்சிருக்காங்க.

இதுல ஏதோ ஒரு குழப்பம் இருக்கு. நாம தமிழ் வேலையை கண்டிப்பா கெடுத்து ஆகணும் என்று அர்ஜுன் பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு நாளை நடக்கும் பங்ஷனுக்கு நாம போகணும் பொய்தான் அங்கு தமிழுக்கு கொடுக்கும் காண்ட்ராக்டை கெடுத்து விடனும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

tamilum saraswathiyum serial November 22th promo and episode full update

அது போல் அடுத்த நாள் பங்க்ஷன் நடைபெறுகிறது. அப்போது அங்கு சாதித்தவர்களுக்கு விருது கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் இந்த வருடம் பெஸ்ட் பிசினஸ் அவார்ட் என்று சொல்லி மேக்னாவை அழைக்கின்றனர். இதனால் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அங்கு ஒரே ஒரு நபர் மட்டும் தனக்கு இந்த அவார்டு கிடைக்கும் என்று ஆர்வத்தோடு இருந்து கடைசியில் ஏமாந்து போகிறார்.

அப்போது மேக்னா மேடைக்கு சென்று என்னுடைய வெற்றிக்கு தமிழ் தான் காரணம். அவர் கொடுத்த ஐடியாவால்தான் நான் பரிசு வாங்குகிறேன் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க அங்கு தமிழுடன் சரஸ்வதியும் இருந்து இதை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+