தமிழுக்கு கல்யாணம் ஆனதை மேக்னாவிற்கு தெரியப்படுத்திய அர்ஜுன்.. வெடிக்கப் போகும் பூகம்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 23ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது மேக்னாவிற்கு தெரியாது என்ற உண்மையை அர்ஜுன் தெரிந்து கொள்கிறார்.
அதனால் அர்ஜுன் மேக்னாவிற்கு உண்மையை தெரிய வைப்பதற்காக புது பிளான் போடுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் எல்லோரும் எதிர்பார்த்து இருந்த தருணம் வந்துவிட்டது. ஏற்கனவே மேக்னாவிற்கும் தமிழுக்கும் திருமணமாகவில்லை என்று மேக்னாவின் மாமா மற்றும் நமச்சி இருவரும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம் மேக்னாவின் மாமா பையனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காததால் அவர் கோபத்தை காட்டிக்கொண்டே இருக்கிறார்.
அதே நேரத்தில் மேக்னாவின் அவார்ட் பங்ஷனில் இன்று ஒரு நபர் மேக்னாவிற்கு அவார்ட் கொடுத்தது அவருடைய அழகை வைத்து தான் என்று அவமானப்படுத்துகிறார். அதற்கு தமிழ் நீங்க சொன்ன இந்த வார்த்தை ரொம்பவே தவறு. எனக்கு மேக்னாவை பற்றி நல்லாவே தெரியும். நான் அவரோடு மூன்று நாட்கள் பயணித்திருக்கிறேன்.
மேக்னா ஒரே நேரத்தில் 30 பிரச்சனைக்கு தீர்வு காண்பார். எத்தனை கம்பெனியை ஒரே ஆளாக பார்த்துக் கொண்டு இருக்காங்கன்னு தெரியுமா? நீங்க இந்த மாதிரி அவங்களை சிறுமைப்படுத்தி பேசியது ரொம்பவே தப்பு. இது மேக்னாவை மட்டும் அல்ல ஆண் வர்க்கத்திற்கே அவமானம் என்று பேச அங்கிருந்த பெண்களும் மேக்னாவிற்கு சப்போர்ட்டாக பேசியதால் தமிழ் மீது மேக்னாவிற்கு மேலும் காதல் கூடுகிறது..
அதே நேரத்தில் நாளைக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் அர்ஜுனும் அவருடைய மாமாவும் பாரில் குடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு மேக்னாவின் மாமா பையனும் குடித்துக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய அப்பா மேக்னாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டு அந்த தமிழுக்கு கட்டி வச்சிருவாரு போல டா என்று தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த நண்பர்கள் தமிழுக்குத்தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டுன்னு சொன்னியே டா என்று கேட்க அதற்கு அந்த நபர் அது மேக்னாவிற்கு இன்னும் தெரியாதுடா. அவனை கல்யாணம் ஆகாதவன்னு தான் நினைச்சுகிட்டு இருக்கா என்று சொல்ல, இதை கேட்டு அர்ஜுனும் அவருடைய மாமாவும் பிளான் போடுகின்றனர்.

அப்போது அர்ஜுன் தமிழ் உடைய பிசினஸை கெடுக்கணும்னா அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்ற உண்மை மேகனாவுக்கு தெரிஞ்சாலே போதும் என்று சொல்லி ஒரு கடிதத்தில் தமிழுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்பதை எழுதி மேக்னா காருக்குள் போடுகின்றனர். அப்போது மேக்னா அந்த காருக்குள் வருகிறார் அங்கிருக்கும் கடிதத்தை எடுத்து படிக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இனி அந்த கடிதத்தை படித்ததும் மேக்னா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications