அர்ஜுன் பிளானை முறியடித்த தமிழ்.. மனம் மாறும் ராகினி.. கோதை சொன்ன வார்த்தை.. எதிர்பாரா முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் சொத்துக்களை அர்ஜுன் பெயருக்கு ராகினி எழுதி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக தமிழ் குடும்பத்தோடு சேர்ந்து புது பிளான் போடுகிறார்.

tamilum saraswathiyum serial November 7th promo and episode full update

இதனால் ராகினி சொத்து விஷயத்தில் மீண்டும் மனம் மாற அதனால் அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் தமிழ் வீட்டில் இருந்து கோபமாக வீட்டுக்கு வந்த ராகினிக்கு ஆரம்பத்தில் ஆறுதல் கூறுவது போல அர்ஜுனனும், அவருடைய குடும்பத்தினரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அர்ஜுன் இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்று பிளான் போட்டு ராகினியிடம் நான் நமக்கு லாபம் தராத ஒரு கம்பெனியை விற்று விடலாம் என்று நினைத்தேன்.

tamilum saraswathiyum serial November 7th promo and episode full update

ஆனால் அது என் பெயரில் இல்லை என்பதால் என்னால் விற்க முடியவில்லை. நான் வெறும் சேர்மனாக மட்டும் தான் இருக்கிறேன் என்று சொல்ல அதற்கு ராகினி அப்போ மொத்த சொத்துக்களையும் உங்க பெயரிலேயே எழுதி தந்து விடுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு வேண்டாம் என்பது போல அர்ஜுன் நடிக்கிறார். அதை புரிந்து கொள்ளாத ராகினி எங்க அப்பா அம்மா உங்க அப்பாவை ஏமாற்றி தானே இந்த சொத்தை வாங்கி இருக்காங்க.

அது உங்களுக்கே கிடைக்கிறது தான் சரி. நான் உங்க பேருக்கு எழுதி தரேன். அதற்குள்ள வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு மாடிக்கு போகிறார். அதைக் கேட்டு அர்ஜனை அவருடைய மாமா தூக்கி கொண்டாடி சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். இதையெல்லாம் பார்த்த வீட்டு வேலைக்கார பெண் கோதைக்கு போன் போட்டு ராகினி சொத்தை அர்ஜுன் பெயரில் எழுதிக் கொடுக்கப் போவதை சொல்ல, அதைப்பற்றி தமிழிடம் கோதை சொல்கிறார்.

tamilum saraswathiyum serial November 7th promo and episode full update

அப்போது தமிழ் சரி விடுங்க எப்படியோ போகட்டும் என்று சொல்ல, அதற்கு சரஸ்வதி அப்படியெல்லாம் விட முடியாது. ராகினி பெயரில் சொத்து இருக்கிற வரைக்கும் தான் அவளுக்கு அங்க சேஃப்டி இல்லன்னா, அவளை தூக்கி வீசிடுவாங்க என்று சொல்ல அதைக்கேட்டு தமிழ் அதுவும் சரிதான் நான் அவன் கைக்கு சொத்து போகாத மாதிரி ஒரு வழி சொல்றேன் என்று வீட்டில் இருப்பவர்களோடு சேர்ந்து ஒரு பிளான் போடுகிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் ராகினி குழந்தையை தூக்கிக்கொண்டு கோயிலுக்கு வருகிறார். அங்கு கோதை, சரஸ்வதி என குடும்பத்தினரும் அனைவரும் வந்திருக்கின்றனர். அவர்களை பார்த்ததும் ராகினி வழக்கம் போல கோபப்பட்டு நீங்க என்னை எங்கேயும் போக விட மாட்டீங்களா? நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா? என்று திட்டுகிறார்.

tamilum saraswathiyum serial November 7th promo and episode full update

அதற்கு சரஸ்வதி நாங்க கோயிலுக்கு சாமி கும்பிட வந்தோம் என்று சொல்ல, அதற்கு அப்போ போங்க என்று ராகினி கோபப்பட, அதற்கு அத்தை உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்னு தான் இருக்காங்க. நீ அர்ஜுனுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கிறது வேண்டாம்னு சொல்லலை, அவர் பேர்ல சொத்தை எழுதி கொடுத்தா அவர் உயிருக்கு ஆபத்துனு ஜோசியர் சொல்லி இருக்கிறார் என்று சொல்ல அதை கேட்டு ராகினி யோசித்தபடி இருக்கிறார்.

அந்த நேரத்தில் கோவிலுக்கு வரும் படிக்கட்டில் தமிழ் எண்ணையை ஊற்றி விட, அப்போது அங்கு வரும் அர்ஜுன் அந்த எண்ணெயில் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். இதை பார்த்ததும் சரஸ்வதி ராகினியிடம் நாங்க இதுக்கு தான் சொன்னோம் பாத்தியா? நீ சொத்தை எழுதி வைக்கிறேன்னு சொன்னதுமே அவருக்கு ஆபத்து வர தொடங்கிடுச்சு.

எழுதி வச்சா ஏதாவது ஆகிட கூடாதுன்னு தான் உனக்கு நாங்க எச்சரிக்கை கொடுக்கிறோம் என்று பேசுகின்றனர். இதை கேட்டு மனம் மாறும் ராகினி பிறகு அர்ஜுனிடம் நாம இப்போதைக்கு சொத்த மாற்ற வேண்டாம். கொஞ்ச நாளைக்கு இதை தள்ளி வைக்கலாம் என்று சொல்ல, அதைக் கேட்டு அர்ஜுன் அதிர்ச்சியாகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+