விஜயகாந்துக்காக கொடுக்கப்பட்ட விருது.. கையில் வாங்கியதும் பிரேமலதா சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை
சென்னை: ஜீ தமிழில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழா தமிழா விருதுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வழங்கப்படுகிறது. அதில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு விருதுகள் வழங்கி இருக்கும் நிலையில் அவருடைய சார்பாக அவருடைய மனைவி பிரேமலதா அந்த விருதை வாங்கி இருக்கிறார். விருதை வாங்கியதும் அவர் சொன்ன வார்த்தை ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நடிகர் விஜயகாந்துக்கு அறிமுகமே தேவை இல்லை. தமிழ் சினிமா இருக்கும் காலம் வரைக்கும் அவருடைய புகழும், பெயரும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரால் உதவி பெற்ற நடிகர் நடிகைகளின் மனதிலும் இருக்கும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர்களில் விஜயகாந்த் ஒருவர். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருந்து பலரையும் வியக்க வைத்தவர். அவருடைய மறைவு இப்ப வரைக்கும் ரசிகர்களையும் அவருடைய குடும்பத்தையும் வருத்தப்பட வைத்து கொண்டிருக்கிறது.

விஜயகாந்த் வாழ்ந்த வரைக்கும் தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்திருக்கிறார். இப்போதும் அவருடைய நினைவிடத்தில் அன்னதானம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் நடிக்க வந்த பலர் அந்த கொடுத்த உணவை சாப்பிட்டு இருப்பதாக பேட்டிகளில் பேசியிருக்கிறார்கள். அதுபோல யாருக்கு உதவி என்று கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் விஜயகாந்த் செய்வார் என்றும் பலரும் அவர் குறித்து செய்திகளை சொல்லி இருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அவருக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது. அது அவருடைய கலை திறமை மற்றும் அரசியல் சேவை என எல்லாவற்றையும் தொகுத்துதான் அந்த விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த விருது அவர் உயிரோடு இருக்கும்போது கிடைத்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன் என்று அவருடைய மனைவி கூறி இருந்தார். இதே கருத்தை அவருடைய ரசிகர்களும் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜீ தமிழில் தமிழா தமிழா 2024 விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த தலைசிறந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விருதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பெற்றிருக்கிறார். விருதை கையில் வாங்கியதும், பத்மபூஷன் அவார்டு டெல்லியில் வாங்கிய பிறகு அடுத்தது ஒரு அவார்ட்டுக்காக நான் ஸ்டேஜ்ல நிற்கிறேன் என்றால் அது இந்த தமிழா தமிழா விருதுதான்.

"தமிழக மக்களால் இந்த விருது கேப்டனுக்கு இன்று கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்" என்று சொல்லக்கூடியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.. என்று அந்த நிகழ்ச்சியில் பிரேமலதா பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட நிலையில் அவர் கையால் விருதுகளை தேமுதிக கட்சியின் தலைவராகவும் விஜயகாந்தின் மனைவியாகவும் பிரேமலதா விஜயகாந்த் பெற்றிருக்கிறார். இந்த நெகழ்ச்சியான தருணத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜயகாந்தை மிஸ் பண்ணுவதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு விஜயகாந்த் பற்றி என்ன நினைவுக்கு வருகிறது? என்பதை கமெண்டில் தட்டி விடுங்க.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications