கிராமத்துகாரங்க.. தமிழா தமிழாவில் கணவரை அசிங்கப்படுத்தி பேசிய மனைவி! ஆவுடையப்பன் கொடுத்த பதிலடி
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி தமிழா தமிழா. சமூகத்தில் பேசப்படாத பல உண்மைகளை நேருக்கு நேர் விவாதமாக கொண்டு வரும் இந்த நிகழ்ச்சி, கடந்த வாரமும் பரபரப்பான ஒரு தலைப்பால் பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது.
இந்த வாரம் "வாழ்க்கைத்துணையை கிராமத்தில் இருந்து தேர்ந்தெடுத்த நகரத்துவாசிகள்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. நகர வாழ்க்கைக்கு பழகியவர்கள், கிராமத்து வாழ்க்கை முறையிலிருந்து வரும் வாழ்க்கைத்துணையுடன் எப்படிப் பொருந்துகிறார்கள், அந்த மாற்றத்தில் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பதையே மையமாக கொண்டு நிகழ்ச்சி நகர்ந்தது.

இதில் கலந்து கொண்ட நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை பற்றிப் பேசிய விதம் அரங்கில் இருந்தவர்களையே அதிர்ச்சியடைய வைத்தது. கிராமத்தில் வளர்ந்த கணவரின் பழக்கவழக்கங்கள், பேச்சு நடை, வாழ்க்கை முறை அனைத்தையும் தானே மாற்றியதாகவும், தற்போது அவர் முழுவதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் வெளிப்படையாக கூறினார்.
கணவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவரை ஒரு அடிமை போல நடத்துவதாக அவர் பேசிக்கொண்டிருந்த போது, அரங்கில் இருந்தவர்களிடையே எதிர்ப்பு குரலும் எழுந்தது. தன்னுடைய கணவர் வீட்டில் ஆடு, கோழி எல்லாம் வளர்ப்பார்கள் அதை பார்த்தாலே எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. நான் அந்த வீட்டுக்கு போக வேண்டும் என்றாலே ஆட்டை விற்க சொல்லி விடுவேன் ஆடு கோழி எல்லாம் வளர்க்கும் வீட்டில் எப்படி சுத்தம் இருக்கும் என்று கேட்டிருந்தார்.
அந்த நேரத்தில் தொகுப்பாளர் ஆவுடையப்பன் தலையிட்டு, திருமணம் என்பது ஒருவரை ஒருவர் மாற்றிக் கொள்வதற்கான உறவு அல்ல, புரிந்து கொண்டு இணைந்து வாழ்வதற்கான உறவு என்று கடுமையாக பதிலளித்தார். நீங்கள் உங்களுடைய கணவரின் வாழ்க்கையில் வந்து ஐந்து வருடம் தான் ஆகிறது ஆனால் அவர் முப்பது வருடங்களாக அதே சூழ்நிலையில் தான் வளர்ந்து இருக்கிறார். அவர் ஆரோக்கியமாக இல்லையா? உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் எல்லோரும் உங்களுக்காக மாற வேண்டும் என்று நினைப்பது என்ன மாதிரி மனநிலை? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
வாழ்க்கைத்துணையை மதிக்காமல் பேசுவது தவறு என்றும், நகரம் - கிராமம் என்ற வேறுபாடு வைத்து மனிதர்களை அளவிட முடியாது என்றும் அவர் கூறிய விதம் அரங்கில் கைதட்டல்களை பெற்றது.
இந்த சம்பவம் ஒளிபரப்பானதும், குறித்த பகுதி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. கணவரை இழிவாக பேசிய அந்த பெண்ணின் கருத்துக்கு எதிராகவும், அதற்கு தக்க பதில் அளித்த ஆவுடையப்பனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில் கடந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சி, நகரம் - கிராமம் என்ற வாழ்க்கை முறை வேறுபாட்டை மட்டுமல்லாமல், திருமண உறவில் பரஸ்பர மரியாதை எவ்வளவு முக்கியம் என்பதையும் வலியுறுத்திய நிகழ்ச்சியாக அமைந்தது. பார்வையாளர்களிடையே நீண்ட நேரம் பேசப்பட்ட இந்த விவாதம், நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு வைரல் தருணத்தை சேர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications