நான் மதுரைகாரி கெத்து காண்பித்த பெண்.. நறுக்குன்னு ஆவுடையப்பன் கேட்ட கேள்வி! இது பலருக்கு பாடம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சமூகத்தில் பேசப்படாத உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் "வாழ்க்கைத்துணையை இழந்த பிறகு அதிகமாக கஷ்டப்படுவது கணவர்களா? மனைவிகளா?" என்ற தலைப்பில் நடந்த விவாதம், பார்வையாளர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.
தங்களின் நிஜ வாழ்க்கையை மேடையில் பகிர்ந்தவர்கள்
இந்த விவாதத்தில் வாழ்க்கைத்துணையை இழந்த ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்தனர்.
மனைவியை இழந்த ஆண்கள், "குடும்பத்தைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, சமையல் முதல் வீட்டு வேலை வரை எல்லாம் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலை" என்று சொன்னார்கள். மனைவியை இழந்த பிறகு தனிமை தான் அதிகமாக வதைக்கிறது என்றும் சிலர் கண்கலங்கினர்.

மறுபக்கம் பெண்கள், "பொருளாதார பொறுப்பு, சமூகத்தின் பார்வை, பாதுகாப்பு என்ற மூன்று விஷயங்கள்தான் பெரிய சவால்" என்று வெளிப்படையாக பேசினர்.
மதுரை பெண்ணின் அனுபவம்
அதில் ஒரு பெண் பேசும்போது மேடை முழுக்க அமைதியாகிவிட்டது. "என் கணவர் இறந்த பிறகு நான் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வாழ்க்கையை நடத்துறேன். அங்க வர்ற ஒவ்வொருத்தரிடமும் 'சாப்பாடு நல்லா இருந்ததா?'ன்னு கேட்பது என் வேலையா இருக்கும். ஆனா சிலர் நம்பர் கேட்டு, 'ஃப்ரீயா இருக்கும்போது பேசலாம்'ன்னு சொல்றாங்க. எங்க அப்பா வயசு உள்ளவங்க கூட 'தனியா தானே இருக்கீங்க'ன்னு பேசுறாங்க... இதெல்லாம் ரொம்ப வேதனை," என்றார்.
ஆரம்பத்தில் தாங்க முடியாமல் இருந்தாலும், பின்னர் எதிர்த்து பேசத் தொடங்கியதாக அவர் சொன்னார்: நீங்க யாரு? உங்க வீட்டுல இருக்குறவங்களிடம் இப்படி யாராவது கேட்டா நீங்க ஒத்துக்குவீங்களா?" என்று கேட்பேன். பிரச்சனை வந்தாலும் பயப்பட மாட்டேன். புருஷன் இல்லாததால்தான் தன்மானம் இல்லாம இருக்கணுமா?" என்ற கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது.
ஆவுடையப்பன் ஆதங்கம்
இதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவுடையப்பன், "பொது இடங்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?" என்று கேட்க,
"ஆமா சார்... வேலை செய்யும் இடத்திலேயே நடக்குது," என்ற அந்த பெண்ணின் பதில் மேடையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதற்கு ஆவுடையப்பன்,
"இப்படி நடக்கும் ஆளுங்கள தைரியமா அசிங்கப்படுத்தணும்... பெண்களை இலகுவா நினைக்கிற மனநிலையே தவறு," என்று கடுமையாக பேசியது பாராட்டைப் பெற்றது.
நாம் மதுரைக்கார பொண்ணு சார்.. உடைந்த குரல்
"நாம் மதுரைக்கார பொண்ணு சார்... எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம்... தைரியமா இருப்பேன்... ஆனா சில நேரம் உடைந்து போயிடுவேன்... எவ்வளவு நேரம் தான் தைரியமா இருக்க முடியும்..." என்று கண்கலங்கிய தருணம், மேடையிலிருந்தவர்களையும் பார்வையாளர்களையும் அழ வைத்தது.
சமூக வலைத்தளங்களில் ஆதரவு மழை
இந்த எபிசோடு ஒளிபரப்பான பிறகு: " உங்க மாதிரி பெண்கள் தான் உண்மையான வீரர்கள்", "உங்கள் தைரியம் ஆயிரம் பெண்களுக்கு சக்தி", நீங்க தனியா இல்ல" என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெள்ளமாக வந்தன.
இந்த விவாதம் சொல்லும் பெரிய உண்மை
இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான விஷயத்தை மீண்டும் நினைவூட்டியது:
வாழ்க்கைத்துணையை இழப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவு வலிதான். ஆனால் பெண்களுக்கு சமூகத்தின் பார்வையும் பாதுகாப்பு பிரச்சனையும் கூடுதலாக இருக்கிறது. அதே நேரத்தில் பல பெண்கள் தைரியமாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.
பெண்களுக்கு ஒரு துணிச்சல் செய்தி
இந்த மேடையில் அந்த பெண் சொன்ன ஒரு வரி தான் பலருக்கும் ஊக்கமாக மாறியது:
"புருஷன் இல்லாததால்தான் எங்களை யாரும் இலகுவா நினைக்கக் கூடாது." வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தைரியம் உடைந்துவிடும் தருணங்கள் வந்தாலும், மீண்டும் எழுந்து நிற்கும் பெண்கள் தான் இந்த சமூகத்தின் உண்மையான பலம் என்பதை இந்த எபிசோடு நிரூபித்தது.












Click it and Unblock the Notifications