Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு வேலை பார்க்கும் பெண்ணுக்கு, மறக்க முடியாத செயல் செய்த ஓனர்! இப்படியும் மனிதர்கள் இருக்கிறாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் (Tamizha Tamizha Episode) தமிழா தமிழா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சமூகத்தில் பேசப்படும் பல உண்மை சம்பவங்களை மேடைக்கு கொண்டு வந்து உணர்ச்சியூட்டும் தருணங்களை உருவாக்கி வருகிறது. இந்த வாரம் "கடன் பெற்றவர்கள் - தக்க நேரத்தில் உதவியவர்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம் பார்வையாளர்களை ஆழமாக நெகிழ வைத்தது. குறிப்பாக மேடையில் பேச வந்த ஒரு பெண் பகிர்ந்த அனுபவம் அங்கு இருந்தவர்களையும், டிவி முன் பார்த்தவர்களையும் கண்கலங்க வைத்தது.

Tamizha Tamizha Zee Tamil

தமிழா தமிழா இந்த வார எபிசோடு

அந்த பெண் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். ஆனால் அவர் பேசிய விதத்தில் அந்த வீடு அவருக்கு வேலை இடம் மாதிரி இல்லை; அவரே அந்த குடும்பத்தில் ஒருவராக இருந்த உணர்வு தெரிந்தது. அந்த வீட்டில் குழந்தைகளை கவனிப்பது, சாப்பாடு செய்வது தான் அவரது வேலை. ஆனால் மற்ற வீடுகளைப் போல வேலைக்காரி என்ற பார்வை இல்லாமல், "நம்ம வீட்டுப் பொண்ணு" என்ற உரிமையோடு நடத்தினார்கள். எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள், அவருடைய வீட்டுக் கஷ்டங்களை கேட்டு தெரிந்து கொள்வார்கள், தேவையான நேரங்களில் ஆறுதல் கூறுவார்கள் என்று அவர் சொன்ன போது மேடையே அமைதியாகி விட்டது.

ஓனர் செய்த உதவி

ஒரு நாள் அந்த வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருந்தபோது, வேலைக்கு வரும் அந்தப் பெண்ணின் குழந்தை ஓடிவந்து "ஆண்ட்டி... எங்க பாட்டி உடம்பு சரியில்லை" என்று சொன்னதாக அவர் கூறினார். அதை கேட்டவுடன் அந்த வீட்டின் அம்மா அவரை அழைத்து "நாங்க உன்னை எப்போதாவது பிரித்து பார்த்திருக்கோமா... இப்படியொரு பெரிய விஷயத்தை எங்களிடம் சொல்லாமல் இருந்திருக்கே?" என்று உரிமையோடு கண்டித்தாராம். அந்த ஒரு வரியில் அந்த உறவு என்ன அளவுக்கு இருந்தது என்பது புரிந்துவிடுகிறது.

இப்படியும் மனிதர்கள்

அதற்குப் பிறகு நடந்தது தான் பலரையும் நெகிழ வைத்தது. உடனே அந்தப் பெண்ணின் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து, தேவையான சிகிச்சைகள் அனைத்தையும் செய்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வந்த மருத்துவ செலவையும் அந்த வீட்டுக்காரர்கள் முழுவதுமாகச் செலுத்தியிருக்கிறார்கள். "இப்போ இந்த காலத்துல இப்படிப் பட்ட மனசு இருக்கா?" என்ற கேள்வியை அந்த மேடையிலிருந்தவர்களே கேட்டுக் கொண்டனர். பேசிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணும் அழுதுகொண்டே நன்றியைச் சொல்லிய தருணம் பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கரு.பழனியப்பன் எப்போதும் போல இந்த சம்பவத்தை மிக நிதானமாக கேட்டு, மனிதநேயத்தின் அர்த்தத்தை நினைவூட்டும் வகையில் சில வார்த்தைகள் கூறியதும் கைதட்டல் முழங்கியது. சமூகத்தில் இன்னும் நல்ல மனசுடையவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை இந்த ஒரு சம்பவம் மீண்டும் உருவாக்கி வைத்தது.

ஜீ தமிழ் சேனல் ஆரம்பித்த காலத்திலிருந்தே குடும்பம் முழுக்க உட்கார்ந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. சரிகமப, சர்வைவர், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததோடு, தமிழா தமிழா போன்ற விவாத நிகழ்ச்சிகள் மூலம் சமூகத்தில் மறைந்து கிடக்கும் மனிதநேய கதைகளையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது.

இந்த வாரம் ஒளிபரப்பான இந்த ஒரு சம்பவம், பணம் கொடுத்த உதவி பற்றிய கதையாக இல்லாமல், மனித உறவுகள் இன்னும் உயிருடன் இருக்கின்றன என்பதை நினைவூட்டிய தருணமாக மாறி விட்டது. "உறவுக்கு சம்பளம் கிடையாது... மனசு இருந்தால் போதும்" என்ற உண்மையை அந்தப் பெண்ணின் கண்ணீரே சொல்லிவிட்டது என்று சொல்லலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+