தமிழா தமிழாவில் கண்ணீர் விட்டு கதறிய பெண்.. பிள்ளைகளை வளர்ப்பதற்காக இத்தனை தியாகங்களா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஒற்றைப் பெற்றோர்களாக இருந்து குழந்தைகளை வளர்த்தவர்களும், அவர்களுடைய குழந்தைகளும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் பல பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளை தனி ஆளாக வளர்த்த விதத்தைக்கு பற்றி கூறி இருக்கையில் ஒரு பெண் தன்னுடைய அப்பாவுக்காக பாடிய பாடல் அனைவரையும் கண்ணீர் விட வைத்திருக்கிறது.
பொதுவாக அம்மா அப்பா இல்லாத குழந்தைகளுக்கு தான் அவர்களுடைய அரவணைப்பும் பாசமும் தெரியும். அதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அம்மாவோ அல்லது அப்பாவோ தனி ஆளாக ஒரு குழந்தையை வளர்த்து எடுத்து வருவது என்பது பெரிய சவாலான விஷயம்தான். சமுதாயத்தையும் குடும்பத்தையும் பல பிரச்சனைகளை தாண்டி ஒற்றைப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை உலகமாக போற்றி தங்களுடைய கனவுகளையும் சந்தோசங்களையும் தியாகம் செய்து தங்களுடைய குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
அந்த வகையில் அதை மையமாகக் கொண்டே இந்த வாரம் ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒற்றைப் பெற்றோர்கள் வலி மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் படும் கஷ்டங்கள் குறித்து விவாதங்கள் வைத்திருக்கின்றனர். ஏற்கனவே இப்படியான விவாதங்கள் நீயா நானா நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி இருப்பதை பலரும் பார்த்திருப்பார்கள்
அதே வரிசையில் இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியும் முயற்சி எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் உங்களுடைய துணைகளை நீங்கள் இழந்த போது எப்படி இவங்கள கரை சேர்க்க போறோம் என்று எந்தெந்த விஷயங்களில் எல்லாம் தயக்கம் இருந்துச்சு என்று தொகுப்பாளர் ஆவுடையப்பன் கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதற்கு ஒரு தந்தை," நான் நார்மலா எந்த விஷயத்துக்கும் பயப்படற ஆளு கிடையாது. ஆனால் ஒரு விஷயத்துக்கு பயந்தேன். என்னனா எனக்கு கடவுள் என் குழந்தைகள் பெருசாகுற வரைக்கும் ஆய்வுசை கொடுக்கணும்" என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு அம்மா," ஒரு ஆக்சிடென்ட்ல என்னுடைய கணவர் தவறிட்டாங்க. பாப்பாவுக்கு இப்ப ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரியும். அவ கேட்ட ஒரே விஷயம் என்னன்னா ஒரே ஒரு முறை அப்பா போட்டோவை பார்க்கணும் என்று கேட்டார்" என்று கண் கலங்குகிறார்.
அதைத் தொடர்ந்து இன்னொரு அப்பா, "என்னுடைய மனைவி இருந்திருந்தால் எதையெல்லாம் பண்ணி இருப்பாலோ, அதை எல்லாம் நான் சிங்கிள் ஆக செஞ்சேன்" என்று சொல்ல, அதற்கு அவருடைய மகள்," எப்படி ஒரு பொண்ணை இப்படி சக்சஸ் புல்லா வளர்க்க முடியும் என்பதை என்னுடைய அப்பா நிருபிச்சிட்டார்" என்று சொல்ல, அதற்கு அந்த பெண்ணின் அப்பா, "தன்னுடைய உலகம் முழுக்க அவ தான்" என்று சொல்ல, அதற்கு அந்தப் பெண்," ஒரு தெய்வம் தந்த பூவே" எனும் பாடலை பாட அந்த பெண்ணின் அப்பா மட்டும் அல்லாமல் அரங்கத்தில் இருந்த அத்தனை தந்தை தாய்களின் கண்களிலும் கண்ணீர் வருகிறது.
அதோடு அந்த பெண் இதே போல ஒரு அப்பா எத்தனை ஜென்மத்திலும் கிடைக்கணும்னு தான் ஆசைப்படுவேன் என்று கூறியிருக்க இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த பிரமோவிற்கு அதிகமான ரசிகர்கள் அந்தப் பொண்ணு பாடும்போது எங்களுக்கும் அழுகை வந்தது என்று கருத்து தெரிவிக்க, இன்னும் அதிகமான ரசிகர்கள் தங்கள் அப்பா அம்மாவை மிஸ் பண்ணுவதை பற்றியும் குறிப்பிட்டு வருகிறார்கள்.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications