தமிழ்நாட்டை வியக்க வைத்த காதல்.. இந்த காலத்திலும் இப்படியா? தமிழா தமிழா பிரபலத்தின் செம அட்வைஸ்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதல் தம்பதிகள் தான் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதன் மற்றும் அருணா தம்பதி பேசிய வீடியோ தான் இப்போது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பற்றி வருகிறது.
கடந்த வாரத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கணவர்கள் மற்றும் மனைவிகள் கலந்து கொண்டிருந்தனர். அதில், "யார் முதலில் சண்டையை தொடங்குவது, யார் சமாதானம் செய்வது" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் பலர் பல்வேறு தகவல்களை பேசிக்கொண்டிருக்கும்போது அருணா தன்னுடைய கணவரை குறித்து பேசியது தான் பலருடைய பாராட்டைப் பெற்றிருக்கிறது.

அதில் அவர் பேசுகையில் நாங்கள் இருவரும் காலேஜ் படிக்கும் போது நண்பர்களாக பழகினோம். பிறகு எங்கள் இருவருக்கும் சில பிரச்சனைகள் வந்ததால் நாங்கள் இருவரும் சண்டையிட்டு பிரிந்தோம். ஆனால் நான் அவரிடம் ஒரு வருடம் பேசாமல் இருந்தேன். அவர் ஒவ்வொரு நாளும் எனக்கு எப்படியாவது மெசேஜ் செய்து கொண்டே இருந்தார். நான் அவரை whatsapp, facebook, twitter, insta ஃபோன் பே என்று எல்லாவற்றிலும் பிளாக் செய்தேன்.
ஆனால் எப்படியாவது என்னிடம் பேச வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் நான் அவரிடம் பேச வேண்டும் என்பதை விடவும், அந்த நாளில் நான் நன்றாக இருக்கிறேனா? என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் அவர் முயற்சி செய்தார். ஆனால் நான் எல்லாவற்றிலும் அவரை பிளாக் செய்து கொண்டு இருந்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு பெரிய பிரச்சனை வந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் என்ன முடிவு எடுக்கலாம் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் நான் அவரிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் என்னுடைய நண்பர்கள் அவரிடம் என்னுடைய பிரச்சனையை பற்றி சொல்லி இருக்கிறார்கள். உடனே அவர் எனக்காக வந்து விட்டார். அப்போதுதான் நான் அவருடைய காதலை உணர்ந்தேன். இவ்வளவு நாள் நாம் பேசாமல் இருந்தாலும் நமக்கு என்று ஒரு பிரச்சனை வரும்போது வந்து விட்டாரே என்று எனக்கு அவர் மீது அன்பு கூடியது.
அவரை புரிந்து கொள்ளவும் முடிந்தது. அதற்குப் பிறகு இந்த அன்பை நான் விட்டு விடக்கூடாது என்று முடிவெடுத்தேன். ஆனால் நாங்கள் பேசாமல் இருந்த அந்த ஒரு வருடம் நான் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். அதுக்கு மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் என்னுடைய பட்டுக்குட்டி உன்னை இனி என்னுடைய வாழ்க்கையில் எப்போதுமே கஷ்டப்படுத்த மாட்டேன்.
உன்னுடைய வாழ்க்கையில் சந்தோஷத்திலும், துக்கத்திலும் நான் உன்னுடன் இருப்பேன். உன்னை நான் என்னுடைய குழந்தை போல பார்த்துக் கொள்வேன் என்று அருணா பேச பேச எதிர்பக்கத்தில் இருந்த மதன் கலங்கி அழுது கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு காதலா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த காதல் தம்பதி தற்போது பல youtube சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் அருணா நீங்க 90ஸ் பசங்களை காதலிச்சி திருமணம் செஞ்சீங்கன்னா உங்களுடைய வாழ்க்கை நன்றாகவே இருக்கும் என்று இளம் பெண்களுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார். அதோடு தங்கள் காதல் கதையைப் பற்றி அவர் பேசுகையில் நாங்கள் இருவரும் எங்களுடைய ஈகோவில் பிரிந்து இருந்தாலும் அவர் என் மீது வைத்திருந்த அன்புக்கு நான் தகுதி இல்லை என்று தான் அவரிடம் இருந்து விலகி இருந்தேன்.
ஆனால் அவர் ஒவ்வொரு நாளும் எனக்கு மெசேஜ் செய்து கொண்டே இருந்தார். ஆனாலும் நான் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்று போது அவர்தான் எனக்கு வந்து நின்றார். அதோடு நாங்கள் ஒரு வருடமாக சண்டை போட்டு பிரிந்து இருந்த பிறகு அவர் என்னை பார்க்க வந்த முதல் நாளையும் என்னால் மறக்க முடியாது. காரணம் நாங்கள் முதலில் பேசிக் கொண்டிருக்கும் போது என்னுடைய செல்போன் ரிப்பேராக இருக்கிறது என்று அவரிடம் கொடுத்து சர்வீஸ் பார்க்க சொல்லி இருந்தேன்.
அப்புறம் நாங்க திடீரென்று பிரேக் அப் ஆகிவிட்டதால் நான் அந்த போனை கேட்கும் போதெல்லாம் அவர் நான் உன்னை நேரில் பார்க்கும் போது தான் தருவேன் என்று சொல்லிவிட்டார். பிறகு நான் அவரிடம் பேசிய நாள் காலை 10 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரைக்கும் ஒரே இடத்தில் என்னை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாப்பிடவும் போகவில்லை, எதற்காகவும் போகாமல் அப்படியே நின்று கொண்டு இருந்திருக்கிறார்.
எனக்கு ஆபீஸில் வேலை இருந்ததால் நான் சொன்ன நேரத்தில் அவரை போய் பார்க்க முடியவில்லை. பிறகு நான் எல்லா வேலையும் முடித்துவிட்டு அங்கு வரும்போது அவர் நின்றதை பார்த்து நான் அழுதுவிட்டேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அதோடு என்னுடைய கணவரை நான் இந்த காலத்து ராமன் என்று சொல்வேன்.
ஏனென்றால் நான் ஒரு வருடம் அவரிடம் பேசாமல் இருந்த போதும் அவர் என்னைத் தவிர வேறு எந்த பெண்ணிடமும் பேசவில்லை. பல பெண்கள் அவரிடம் பேசிய போது கூட எனக்கு அருணா தான் வாழ்க்கையில் முக்கியம். அவள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து போய்விட்டாலும் வேறு யாருக்கும் இடம் இல்லை என்று உறுதியாக இருந்திருக்கிறார் என்று அருணா பேசி இருக்கும் நிலையில் இவர்கள் இதுபோல பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பலர் வாழ்த்தி வருகிறார்கள்.
-
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications