குழந்தை பிறப்பு.. நச்சுன்னு வெளிப்படையாக நடிகை கஸ்தூரி சொன்ன வார்த்தை.. அதிர்ந்து போன ஆவுடையப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு குழந்தை போதும் என்பவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை வேண்டும் என்பவர்களும் கலந்து கொண்டு விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறப்பு விருந்தினராக நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் கஸ்தூரி குழந்தைகள் பிறப்பு மற்றும் அதை வளர்க்கும் விதம் குறித்து பேசிய விதத்தை கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவருமே அமைதியாக மாறிவிட்டனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tamizha Tamizha Shows Actress Kasthuri is also present as a special guest

அந்த வகையில் ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் திடீரென்று அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு இந்த நிகழ்ச்சிக்கு ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். அதுபோல தமிழா தமிழா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை 12 .30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சில சுவாரசியமான வாதங்கள் அடிக்கடி நிகழ்ந்து விடும் அதிலும் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து கலந்து கொண்ட ஜோதிடர்கள் நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் அங்கீகாரம் எப்படி இருக்கிறது என்ற தலைப்பில் பல அரசியல் பெண் தலைவர்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர். அந்த எபிசோடும் பெரிய அளவில் பேசப்பட்டது.

Tamizha Tamizha Shows Actress Kasthuri is also present as a special guest

அதற்கு பிறகும் பல எபிசோடுகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒரு குழந்தை போதும் என்று விரும்புபவர்களும் அதை எதிர்த்து ஒரு குழந்தைக்கு மேற்பட்ட குழந்தைகள் வேண்டும் என்பவர்களும் விவாதித்து கொண்டிருந்தனர். அப்போது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கஸ்தூரி பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் ஒரு குழந்தை போதுமா? இல்லை அதுக்கு மேலும் பெத்துக்க வேண்டுமா? என்பது அந்த வீட்டோட சூழ்நிலையும், அந்த இரண்டு பெற்றோர்களும் மட்டும்தான் அதை முடிவு செய்ய முடியுமே தவிர சும்மா நீங்க ஒரு குழந்தை பெத்துக்கோங்க என்று சொல்றதும் இன்னொருதங்க இல்ல இன்னொரு குழந்தை சேர்ந்து பெத்துக்கோங்க என்று சொல்வதும் ரொம்ப மோசமான வார்த்தை.

வெளியே போனா வளர்ந்த பிள்ளைகள் கூட பர்டிகுலரா ஆண்கள் இருக்கக்கூடிய சமுதாயத்தில் பெண்களை எப்படி ட்ரீட் பண்ணனும்னு தெரியாமலேயே இருக்கிறாங்க என்று சொல்ல அங்கிருந்த பெண்கள் எல்லோரும் கைத்தட்டி ஆதரவு கொடுக்கின்றனர். அதனால் தொடர்ந்து பேசிய கஸ்தூரி, வீட்டுல தாயார் செய்வதைத்தான் எல்லா பெண்களும் செய்யனும் என்கிற சிந்தனையோடு வெளியே போற ஒரு ஆண் இருக்கான் பாருங்க அது அடுத்த தலைமுறைக்கு நாம செய்யக்கூடிய பெரு மிகப்பெரிய குற்றமாகும்.

வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பார்த்து வளராதது இப்போ நிறைய பேருக்கு காலத்தின் கட்டாயமாக இருக்கு. அட்லீஸ்ட் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளோடு சேர்ந்து வளரும் குழந்தைகளுக்கு விட்டு கொடுக்கும்... குறிப்பாக பெண்களே மதிக்கும் மனப்பான்மை வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பொதுவா ஏதாவது பிரச்சனைனா நம்ம கேட்கிறோம்ல ஏன்டா நீ அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா என்று, அந்த கேள்விக்கு பதிலாகவாவது ஆண் குழந்தையை பெற்று எடுத்தவங்க இன்னொரு குழந்தையை பெத்துக்கோங்க.

ஆனால் முயற்சி பண்ணுறதும் பண்ணாததும் உங்களுடைய சாய்ஸ் என்று சொல்லுறதையும் சொல்லிவிட்டு முடிவை மக்கள் கையில் கஸ்தூரி கொடுத்து விட்டார். இதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போன ஆவுடையப்பன் அடுத்ததாக அடுத்த சிறப்பு விருந்தினரிடம் பேசி இருக்கிறார். ஆனாலும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+