உன்னை பற்றி புரியாமல் அப்படி பேசி விட்டேன்.. கவின் குறித்து பதிவிட்ட அபர்ணாதாஸ்..கவின் கொடுத்த பதில்
பேட்டிகளில் கவின் சட்டென கோபப்படுபவர் என்று கவினை புரிந்து கொள்ளாமல் பேசி விட்டேன் என்று நடிகை அபர்ணாதாஸ் பதிவிட்டிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்த கவின் பற்றி நடிகை அபர்ணாதாஸ் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் கவின் தற்போது டாடா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் இடையில் நேற்று தான் அந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
கவின் பற்றி புரிந்து கொள்ளாமல் பேட்டிகளில் தவறாக பேசி விட்டேன் என்று நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்ட அபர்ணா தாஸ்க்கு கவின் பதில் அளித்து இருக்கிறார்.

சின்னத்திரையில் அறிமுகம்
சின்னத்திரையில் அறிமுகம் ஆகி ஒரு சிலர்தான் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு நபராக தற்போது நடிகர் கவின் மாறி இருக்கிறார். இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் பல பெண்களின் மனதை ஜெயித்து இளைஞர்களுக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது நான்காவது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய டாடா திரைப்படம் வெளியான பிறகு அவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நன்றி மழை
இந்த நிலையில் நடிகர் கவின்க்கு ஜோடியாக நடித்த அபர்ணாதாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி கவின். சிறந்த ஒரு சக நடிகராக இருந்ததற்கும் நன்றி. நாளை உங்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய நாளாக இருப்பதால் நாளை உங்களுக்கான நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை எனக்கு ஒரு வருடத்திற்கு மேலாக தெரியும். டாடா திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்திற்கு நீங்கள் அதிகம் உழைத்ததை பார்த்திருக்கிறேன்.

வலுவான எதிர்ப்பு
டாடா திரைப்படத்தில் எந்த துறையாக இருந்தாலும், அங்கு நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். சில பிரச்சனைகள் வரும்போதெல்லாம் அதற்கு எதிராக நீங்கள் போராடி அதை சரி செய்தீர்கள். இந்த படத்தை சிறப்பாக செய்ய நீங்கள் எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறீர்கள். பல விஷயங்கள் உங்களை கீழே இழுக்க முயன்றனர். ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து வலுவாக இருந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள்.

சொல்ல நினைத்த விஷயம்
நான் இதனை பேசுவதற்கு ஒரு மேடை கிடைக்கும்போதெல்லாம் இந்த விஷயங்களை பற்றி சொல்ல விரும்பினேன் ஆனால் என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது. நீங்கள் இல்லை என்றால் இந்த படம் உருவாகி இருக்காது. எல்லாவற்றுக்கும் நன்றி. பெரும்பாலான நேர்காணங்களில் நான் உங்களை சட்டென கோபம் அடைபவர் என சொன்னேன். ஆனால் நீங்கள் சரியான விஷயங்களுக்காக மட்டுமே போராடி இருக்கிறீர்கள்.

எப்போதும் உங்களுடன் இருப்பேன்
இந்த அழகான திரைப்படத்தை உருவாக்கி அதில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் ஒரு அற்புதமான நபர் மற்றும் ஒரு அற்புதமான நடிகராக இருப்பதால் நீங்கள் மேன்மேலும் பல பெரிய இடங்களுக்கு செல்வீர்கள். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும், நீங்கள் செய்யும் அனைத்திற்கும் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு நன்றி அபர்ணா நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கு கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று பதில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications