“வின்னர்” படத்தில் பிரசாந்த் பாட்டியின் மகள் திடீர் மரணம்.. ஜிம் வொர்க் அவுட்டின் போது மாரடைப்பு
சென்னை: வின்னர் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்தின் பாட்டியாக நடித்த நடிகை எம். என். ராஜமும் அவருடைய கணவர் ஏ.எல். ராகவன் இருவருமே சினிமா மற்றும் சீரியல்களில் அதிகமாக நடித்திருக்கிறார்கள். ராகவன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து போய் விட்டனர். இந்த நிலையில் இவர்களுடைய மகள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பால் காலமானதாக கூறப்படுகிறது.
சமீப காலமாகவே பலர் உடல் ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்று ஜிம் வொர்க் அவுட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் அங்கு ஒரு சிலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். அந்த வரிசையில் பிரபல திரைப்பட நடிகை எம்.என் ராஜம் மற்றும் ஏ.எல் ராகவனின் மகளும் காலமானதாக கூறப்படுகிறது.

அந்த கால நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள்தான் ராகவன் மற்றும் ராஜம். ராகவன் பல பாடல்களை பாடி இருக்கிறார். இவர் பாடகர் என்பதையும் தாண்டி சினிமா மற்றும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனாலும் கொரோனா காலகட்டத்தில் இறந்து விட்டார். அதுபோல எம் என் ராஜமும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து அதற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் நடித்து பல படங்களில் பாட்டியாகவும் நடித்திருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் 2வில் இதனால் தான் நடிக்கல.. விஜய் டிவியில் நேரடியாகவே கேட்டாங்க.. சுஜிதா ஓபன்
அதிலும் குட்டி, பம்மல் கே சம்பந்தம், அன்பே வா, திருப்பாச்சி, இம்சை அரசன், மருதமலை என்று பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படத்தில் கூட பிரசாந்தின் பாட்டியாக நடித்திருப்பார். கதாநாயகி, வில்லி மற்றும் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருந்த ராஜம் தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்றும் கூறுகிறார்கள்.

கணவர் மறைவிற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இதில் மகள் நளினா சரவணன் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்த சரவணன் என்பவர் வேறு யாருமில்லை இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மைத்துனர் தான். இந்த நிலையில் நளினா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் காலமானதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நளினாவின் மகன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் வந்த பிறகு நளினாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications