பணத்தை எடுக்காத காரணம் இது தான்...அறிவுரை கூறுபவர்களுக்கு.. பதிலடி கொடுத்த தாமரை
சென்னை: கடைசி வாரத்தில் பணப்பெட்டியை தாமரைச்செல்வி எடுக்காதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.
தன்னிடம் கேள்விகளை கேட்க்கும் ரசிகர்களுக்கு சரியான பதிலடியை தாமரை கொடுத்துள்ளார்.

ரசிகர்களின் கருத்துக்கு, தாமரையின் பதில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராம பின்னணியில் இருந்து வந்து 90 நாட்களுக்கும் மேலாக தாக்கு பிடித்த தாமரைச் செல்வியின் வெளியேற்றம் ரசிகர்களை பாதித்திருந்தாலும், அவர் கடைசி நேரத்தில் செய்த செயல் சரி இல்லை என்றும், முட்டாள்தனமாக இருந்தது என்றும், இப்படி செய்திருக்கக் கூடாது என்றெல்லாம் பல விதமான கருத்துக்களை ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது தாமரைச்செல்வி பதில் கூறியுள்ளார்.

பணபெட்டி டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் 90 நாட்களுக்கு மேலே பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம். கடந்த சீசனில் கேப்ரில்லா எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தார். அதற்கு முந்தைய சீசனில் கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தார். இவர் தான் வெற்றி பெறுவார் என்று இவருக்கு அதிகமாக ஓட்டளித்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.

தாமரையின் தீர்க்கமான முடிவு
தற்போதைய சீசனில் அதிகமான ரசிகர்கள் ராஜூ டைட்டில் ஜெயிப்பார் என்று அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தாமரைச்செல்வி க்கும் அதிகமான ஆதரவு இருந்து வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இவர் பணப் பெட்டியை எடுத்து விட்டு வெளியேறி விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நான் கோடி ரூபாய் தந்தாலும் கடைசி வரைக்கும் விளையாட்டை விளையாடி தான் வெளியேறுவேன். இந்தப் பெட்டியை எடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இவருக்கு பாவனி எவ்வளவோ அறிவுரைகளையும் கூறி வந்தார் ஆனால் ஒன்றும் எடுபடவில்லை.
Recommended Video

தாமரையின் விளக்கம்
தாமரைச்செல்வி வெளியே வந்த பிறகும் அவரிடமும் பலர் இதே கேள்வி தான் கேட்டு வருகிறார்களாம். அவர்களுக்கு பதில் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அதில் நான் தனியாளாக விளையாட வரவில்லை. நான் எங்களுடைய நாடக குழுவின் சார்பாக, பல ஆயிரக்கணக்கான நாடக கலைஞர்களின் சார்பாகவும் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தேன். இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால் என்னுடைய கடனையும் அடைத்து விட்டு, என் அம்மா வீட்டுக்கு ஏதாவது செய்திருக்க முடியும். ஆனால் அப்படி சுயேச்சையாக விளையாடி இருக்க எனக்கு மனது வரவில்லை அதனால்தான் நான் அதை எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் இவருடைய ரசிகர்கள் வழக்கம்போல இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications