ஆபாசமாக பேசிய பயில்வான் ரங்கநாதன்.. கனவிலும் நினைக்காத பதிலடி கொடுத்த தாமரை செல்வி!
சென்னை: பிக் பாஸ் மூலம் பொதுமக்களிடம் பரிச்சயமான தாமரை செல்வி மீண்டும் ஒரு சர்ச்சையின் மையமாக மாறியிருக்கிறார். இந்த முறை விஷயம் சாதாரண குற்றச்சாட்டு மட்டுமல்ல; அதற்கு மேலாக தனிப்பட்ட குற்றச்சாட்டுகள், எதிர்ப்பு வீடியோக்கள், கடுமையான வார்த்தைகள் என சமூக வலைதளத்தில் பெரிய விவாதமாகி வருகிறது.

தாமரை செல்வி புகார்
சில மாதங்களுக்கு முன்பே இந்த பிரச்சனைக்கு அடித்தளம் போடப்பட்டிருந்தது. தாமரை செல்வி, உதவி இயக்குனர் ஆதி என்பவரை எதிர்த்து போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ஒரு சீரியல் நடிகையின் கணவர் தன்னிடம் நகை மற்றும் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு வெளியான உடன் அது சிறிய விஷயமாக இல்லாமல், பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு விவகாரமாக மாறியது.
பயில்வான் ரங்கநாதன் பேச்சு
இந்த விவகாரம் சில நாட்கள் அமைதியாக இருந்த நிலையில், திடீரென மீண்டும் தீப்பிடித்தது பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட ஒரு வீடியோவின் மூலம். நடிகரும், திரைப்பட விமர்சகருமான அவர், இந்த விவகாரம் குறித்து பேசும்போது மிகவும் சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டார். குறிப்பாக தாமரை செல்வி மற்றும் அந்த உதவி இயக்குனர் இடையே தகாத உறவு இருக்கிறது என்ற வகையில் அவர் பேசியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல், தாமரை செல்வியின் வயது 40, அந்த இயக்குனரின் வயது 20 என்று குறிப்பிட்டு, "எதற்காக ஒரு தொடர்பும் இல்லாத ஒருவரை வீட்டில் தங்க வைக்க வேண்டும்?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். இந்த மாதிரி நேரடியாக தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து பேசப்பட்டதால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் எதிர்ப்பையும் பெற்றது.
தாமரை செல்வி வீடியோ
இந்த குற்றச்சாட்டுகளுக்கு தாமரை செல்வி உடனடியாக ரியாக்ட் செய்தார். வழக்கமாக பலர் அமைதியாக இருப்பதைத் தேர்வு செய்வார்கள், ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மிகவும் ஆதங்கத்துடனும் கோபத்துடனும் ஒரு வீடியோ வெளியிட்டு நேரடியாக பதிலடி கொடுத்தார்.
அந்த வீடியோவில் அவர் பேசியது மிகவும் கடுமையான வார்த்தைகளில் இருந்தது. "என்னைப் பற்றி அவதூறாக பேசி ஒரு வீடியோ போட்டிருக்கிறார். எனக்கும் அந்த உதவி இயக்குனருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்றார். இது எவ்வளவு பெரிய பொய்?" என்று ஆரம்பித்த அவர், தன்னுடைய குடும்பத்தை இழுத்து பேசப்பட்டதை கடுமையாக எதிர்த்தார்.
மேலும், "என் புருஷனோட கால் தூசிக்கு அந்த பையன் வருவானா?" என்று தனது கணவரை ஒப்பிட்டு பேசினார். "இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? அடுத்த பெண்களைப் பற்றி பேசுவது தான் வேலையா?" என்று கேள்வி எழுப்பியதோடு, அவர் பெண்களை குறிவைத்து பேசுவதாகவும் குற்றம் சாட்டினார். "எனக்கு தெரிஞ்சு இவன் எல்லா பெண்களையும் பற்றி பேசிக்கிட்டே இருப்பான். பெண்களை பார்த்தாலே பிடிக்காது போல. அவனுக்கு பிடிச்சது எல்லாம் ஆண்கள் தான் இருக்கும்னு நினைக்கிறேன்" என்று அவர் கூறியிருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
சர்ச்சை பேச்சு
இதோடு அவர் நின்றுவிடவில்லை. "பக்கத்தில் இருந்து விளக்கு பிடிச்ச மாதிரி பேசுறானே, கொஞ்சம் கூட வெட்கமே இல்ல" என்று அவதூறாக பேசியதற்காக அவர் கடுமையாக தாக்கினார். மேலும், பயில்வான் ரங்கநாதனின் குடும்பத்தையும் இதில் இழுத்து பேசினார்.
"இவன் வீட்டிலேயே பெண்கள் இருக்காங்க. அவங்களோட நிலைமையை பார்த்தா தான் பரிதாபமா இருக்கு.. மேலும் ரங்கநாதன் உங்க மனைவி கிட்ட உங்களுக்கு குழந்தைகள் எப்படி பிறந்தது என்று கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. உங்களுக்கு அந்த குழந்தைகள் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் சர்ச்சையாக தாமரை செல்வி பேசி இருக்கிறார். மேலும் பயில்வான் ரங்கநாதனை நான் எந்த இடத்தில் பார்த்தாலும் கிழித்தெடுப்பேன். அவரை அடித்து விடுவேன் என்பது போல மிரட்டும் தோணியிலும் தாமரை பேசி இருக்கிறார்.
இந்த வீடியோ வெளியான உடன் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியது. ஒரு தரப்பு, தாமரை செல்வி உடனடியாக பதில் கொடுத்தது சரியானது என்று ஆதரித்து வருகின்றனர். "யாராவது இப்படி அவதூறு பேசினால் உடனே பதில் சொல்லணும்" என்று சிலர் கூறுகின்றனர்.
இதே நேரத்தில், பயில்வான் ரங்கநாதன் மீது இது முதல் குற்றச்சாட்டு அல்ல என்பதும் பேசப்படுகிறது. பல நடிகைகள் மற்றும் பெண்கள் குறித்து அவர் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் பார்க்கும்போது, தாமரை செல்வி மற்றும் பைல்வான் ரங்கநாதன் இடையிலான இந்த மோதல் சாதாரண கருத்து வேறுபாட்டை தாண்டி, தனிப்பட்ட குற்றச்சாட்டு - எதிர்ப்பு - மீண்டும் தாக்குதல் என்ற நிலைக்கு சென்று விட்டது. இந்த விவகாரம் இங்கிருந்து சட்டரீதியான பிரச்சனையாக மாறுமா அல்லது சமூக வலைதள விவாதமாகவே முடிவடையுமா என்பது தான் அடுத்த கேள்வியாக உள்ளது.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications