Thandakaranyam OTT: ஓடிடி-யில் வெளியானது 'தண்டகாரண்யம்'! அதுவும் இந்த தளத்தில் தான்!
சென்னை: தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு தனித்துவமானக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துப் படங்களைத் தயாரிப்பதில், இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு முன்னோடியாகவே இருக்கிறார். அவருடைய நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், 'அட்டகத்தி' தினேஷ் மற்றும் கலையரசன் நடிப்பில் வெளியான 'தண்டகாரண்யம்' திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதியன் ஆதிரையின் படைப்பு
அதியன் ஆதிரை இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்றப் படத்தை இயக்கி, விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றவர். அதைத் தொடர்ந்து, அவர் இயக்கிய 'தண்டகாரண்யம்' திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
தயாரிப்பு இந்த படத்தையும் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. பா.ரஞ்சித் தொடர்ந்து தரமானப் படைப்புகளாகத் தயாரித்து வரும் நிலையில், இதுவும் ஒரு நல்ல படமாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
நடிகர்கள் பட்டாளமும், கதைக்களமும்
இந்தப் படத்தில், 'அட்டகத்தி' தினேஷ் மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
கதைக்களம்
ஒரு வித்தியாசமானக் கதைக்களத்துடன் உருவான இந்தப் படம், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'தண்டகாரண்யம்' படம் திரையரங்குகளில் வெளியாகி, விமர்சகர்களிடம் நல்லப் பாராட்டைப் பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

ஓடிடி வெளியீடு
இந்நிலையில், இந்தப் படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்தப் படம் சிம்பிலி சவுத் (Simply South) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது. திரையரங்குகளில் தவறிய ரசிகர்கள், இப்போது இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்கத் தயாராகி வருகின்றனர். பாக்ஸ் ஆபீஸில் குறைவாகப் பேசப்பட்ட இந்தப் படம், இப்போது ஓடிடி தளத்தில் தனக்கான ஆடியன்ஸை கவருமா என்றப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications