அப்போ "காதல்” படத்தில் சந்தியா கணவர்.. இப்போ ஜீ தமிழ் "மார்க்கண்டேயன்” கடந்த சோகமான பாதை
ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியலில் மார்க்கண்டயன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவக்குமார் காதல் திரைப்படத்தில் சந்தியாவின் கணவராக நடித்து இருக்கிறார்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் மார்க்கண்டேயன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவரின் நிஜ பெயர் சிவக்குமார்.
நடிகர் சிவகுமார் ஏற்கனவே பசங்க திரைப்படத்தின் மூலமாக பலருக்கும் பிரபலமானவர்.
நடிகராகவும், அசிஸ்டன்ட் டைரக்டராகவும் பல திரைப்படங்களில் சிவக்குமார் பணியாற்றி இருக்கிறார்.

இயக்குனர் கனவு
சமீபத்தில் வெளியான லெஜன்ட் சரவணா திரைப்படத்தில் கோ டைரக்டராக வேலை செய்த நடிகர் சிவகுமார் அதற்கு பிறகு இவருக்கு எந்த வாய்ப்பு இல்லாத நேரத்தில் தான் இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியல் வாய்ப்பு கிடைத்திருந்ததாம். தன்னுடைய 25 வருட பயணத்தில் இந்த கேரக்டர் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக பாக்கிறேன் என்று கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இந்த வயசுல ஹீரோவாக நடிப்பது என்பது நான் எதிர்பார்க்கவில்லை. இந்த சீரியலின் வாய்ப்பு என்னுடைய பிரண்ட் மூலமாகத்தான் எனக்கு கிடைத்தது. என்னோட கவனம் முழுக்க டைரக்ஷனில் மட்டும்தான். எப்படியாவது ஒரு இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்று தான் நான் இருந்து வருகிறேன். ஆனால் திடீரென சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சதும் ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினேன் என்று கூறியிருக்கிறார்.

ஆடிஷனில் நடந்த ட்விஸ்ட்
அது லெஜெண்ட் சரவணா திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு எதுவும் இல்லாததால்
இந்த வாய்ப்பு வந்ததும் தவற விட மனசு இல்லாமல் தான் இவர் இதற்கு சரி என்று சொன்னாராம். ஆடிசனுக்கு இவர் சென்றிருக்கும் போது இவரிடம் இவருடைய வயசு கேட்டிருக்கிறார்கள். அப்போது இவர் வயசு சொன்னதும் இந்த கேரக்டருக்கு இவர் செட் ஆவாரா என்று கொஞ்சம் தயங்குனாங்கலாம். ஆடிஷனுக்கு இவர் போகும்போது டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்ல தான் போயிருக்காரு. பிறகு லுக் டெஸ்ட் எடுத்து செய்து பார்த்திருக்கிறார்கள் அப்போது பார்ப்பதற்கு சாந்தமான அப்பாவாக இருக்கிறார் என்று தான் இவரை செலக்ட் செய்தார்களாம்.

ஸ்பெஷலான நேரம்
ஆரம்பத்தில் தவமாய் தவமிருந்து சீரியலில் மார்க்கண்டேயன் என்கிற பெயரில் தான் வைக்கப்பட்டதாம். பின்பு தான் சீரியலின் பெயரை மாற்றி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் இந்த சீரியலுக்காக ஜீ தமிழில் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் என்ற விருது வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த நேரம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அந்த நேரத்தில் என்னுடைய பொண்ணு கடிதம் எனக்காக எழுதியிருந்தார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்றுதான் என்று நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

பலருக்கும் இதே கஷ்டம் தான்
குறிப்பாக சினிமாக்காரங்கன்னு சொன்னாலே ஃபேமிலியோட நேரம் செலவழிக்க முடியாது. நான் துணை இயக்குனராக இருந்தபோது அதிகமான நேரம் வெளியூர்ல தான் இருந்திருக்கேன். விடிய காலையில் வீட்டிலிருந்து கிளம்பினால் ராத்திரி பசங்க தூங்குன பிறகு தான் வீட்டுக்கு வருவேன். இன்னைக்கு சினிமாவில் இருக்கக்கூடிய பெரும்பாலானோர் நிலைமையும் இதுதான். இந்த நேரத்துல நமக்கு விருது பாராட்டு எல்லாம் கிடைக்கிற போது சந்தோஷமாக இருக்கிறது. அந்த சந்தோஷங்களும் நம்முடைய வலியை கடக்க செய்கிறது என்று நெகிழ்ச்சியாக இவர் பேசியிருக்கிறார்.

வாழ்க்கை இலட்சியம்
அதுமட்டுமல்லாமல் நடிகர் சிவகுமார் தான் காதல் திரைப்படத்தில் சந்தியாவின் கணவராக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவர் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்திருக்கிறார். அப்போது சந்தியாவை இந்த திரைப்படத்திற்கு செலக்ட் செய்தது இவர்தானாம். அப்போது அங்கே தான் சந்தியாவை இவர் செலக்ட் செய்தாராம். ஆனால் ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் சந்தியா நடிப்பதற்கு சம்மதிக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கனவு, கமர்சியலுடன் ஒரு யதார்த்தமான திரைப்படத்தை டைரக்ட் பண்ணுகிறது என்பதுதான். அதற்காக ஓடிக்கிட்டே இருக்கேன் என்று இவர் உறுதியோடு பேசி இருக்கிறார். இதற்கு பல ரசிகர்கள் பாராட்டி இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
டான்ஸ் ஜோடி டான்ஸில் இந்த முறை கலக்கல்! பிரசாந்த், சிம்ரன், சினேகா மட்டுமில்ல! போட்டியாளர்களும் ஸ்பெஷல் தான் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications