இசைவாணியை வச்சு செய்யும் போட்டியாளர்கள்...இதுதான் பழிவாங்கும் படலமா??
சென்னை: தான் வைத்திருக்கும் காயினை பயன்படுத்தி தலைவர் பதவியை பெற்றிருக்கிறார் இசைவாணி.
போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த அபிநய் கடைசி நேரத்தில் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
தலைவர் பதவியில் வீட்டை ஆள வேண்டுமென்று நினைத்த இசைவாணிக்கு பிக்பாஸ் ஆப்பு வைத்து விட்டது.

எதிர்பாராதது நடந்து விட்டது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல் சொல்வது போல தான் இந்த வார தலைவர் பதவியும் எதிர்பாராமல் நடந்திருக்கிறது. அது வரைக்கும் ஒன்றாக போட்டியாளர்களுடன் சேர்ந்து முடிவெடுத்த இசைவாணி, கடைசி நேரத்தில் தன்னுடைய சொந்த முடிவை தைரியமாக எடுத்து விட்டார். இதுவரைக்கும் இவர் எந்த முடிவையும் தைரியமாக எடுக்கவில்லை என்று இவருடைய ரசிகர்களும், போட்டியாளர்களும் இவர் மீது குறை கூறிக் கொண்டிருந்த நேரத்தில் இன்று தனக்கான நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த முடிவு வேற லெவல்
இந்த வார வீட்டின் தலைவராக போட்டியிடும் நபர்களுக்கு போன வாரத்தில் நடந்த செண்பகமே செண்பகமே டாஸ்க் விறு விறுப்பாக இருந்தது. அவ்வளவு பெரிய போட்டியில் வெற்றி பெற்று இந்த வார தலைவர் பதவிக்கு போராடிக்கொண்டிருந்த 9 போட்டியாளர்களில் அமைதியாக இருந்து கொண்டு கடைசியில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முதல்முறையாக இசைவாணி கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ரசிகர்களின் கேள்வி
ஏற்கனவே முதல் வாரத்தில் வீட்டின் மொத்த ஆளுமையும், இவரின் பக்கம் இருந்தாலும் போட்டியாளர்கள் இவருக்கு அதிகமான ஒத்துழைப்பு கொடுக்காததால், இவரால் இவருடைய பணியை சரியாக செய்ய முடியவில்லை. அதனால் மீண்டும் தனக்கான அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று இவர் நினைத்திருந்த நேரத்தில் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் செய்தது போலத்தான் தற்போதும் இவர் மீது செம காண்டில் இருக்கின்றனர். ஏற்கனவே இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களில் இப்படித்தான் ஒரு சில போட்டியாளர்களை சக போட்டியாளர்கள் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தது போலத் தான் இவருக்கும் நடந்து கொண்டிருக்கிறதா??என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பழிவாங்கும் படலமா??
தலைவர் பதவியை இவர் காயினை யூஸ் பண்ணி பெற்றிருப்பதால் இவருக்கு சலுகைகள் கிடைக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில் பிக் பாஸ் வெளியிட்ட அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வாரம் முழுக்க சர்வராக வேலை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் சொன்னதும் சக போட்டியாளர்கள் எனர்ஜி கொடுத்தது போல ஆகிவிட்டது. அதனால் தங்களுடைய மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் இசை வாணியிடம் வேலை சொல்லியே தீர்த்து வருகின்றனர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications