அபிஷேக் நல்லாதான் பெர்பாமன்ஸ் பண்ணாரா??அப்போ வெளியே எதையுமே காட்டலயே
சென்னை: கம் பேக் கொடுத்திருக்கும் அபிஷேக் வாங்கிய அவார்டு தான் ரசிகர்களை குழப்பமடைய செய்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக நுழைந்திருக்கும் அபிஷேக் விளையாட்டை மறந்து விட்டாரா என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.
கனா காணும் காலங்கள் டாஸ்கில் இவர் எதையுமே செய்து நாங்கள் பார்க்கவில்லையே என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கேரக்டரே மறந்து போச்சா??
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் டாஸ்கில் அபிஷேக் பெர்பாமன்ஸ் செய்வதை மறந்து சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தனர். இவருக்கு ஆசிரியர் கேரக்டர் கொடுத்து இருந்த நேரத்தில் கேரக்டரை மறந்து சிலநேரங்களில் ஸ்டூடண்ட்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பலர் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர். அதுமட்டுமில்லாமல் இவருக்கு பர்சனாலிட்டி டெவலப்மென்ட் மற்றும் ஜீகே வகுப்பெடுக்கும் ஆசிரியர் வேலை. ஆனால் அதில் அடிக்கடி மறதி ஞாபகம் உள்ள ஆசிரியராக நடிக்க சொன்னதை அப்படியே மறந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

உடையில் நேர்த்தி இல்லை
முதல்நாள் டாஸ்கில் சரியாக பர்பாமன்ஸ் பண்ணவில்லை என்று மாணவர்களுடன் இவரையும் சிபி கண்டித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் நடந்ததை அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பலர் கூறி வருகின்றனர். இவர் எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு பர்பாமன்ஸ் பண்ணாமல் அமைதியாகத்தான் அங்கே இங்கே சென்றுகொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஆசிரியருக்கு உரிய ஆடை அணியவில்லை, மற்ற போட்டியாளர்கள் தங்களுக்கு உரிய கேரக்டரில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இவர் உப்புக்கு சப்பாக தான் இருந்து கொண்டிருந்தார் என்று பலர் கூறிக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது வாய்ப்பு
முதல் பகுதியில் ஆட்டம் போட்டு அனைவரையும் மிரள வைத்த அபிஷேக் இரண்டாவது பகுதியில் உள்ள வந்த நாளிலிருந்து இவர் இருக்குமிடம் அதிகமாக வெளியே தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் முறையாக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமாகும்போது அனைத்து ப்ரமோக்களில் தவறாமல் இடம் பிடித்து கன்டென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனாலேயே இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என ரசிகர்கள் கூறிவந்தனர். இதனாலே இவர் இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எல்லாம் எடிட்டர் வேலை தானா??
கிடைத்த வாய்ப்பை இவர் சிறப்பாக பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இவர் நடந்து கொண்டு வருவது சிறிய ஏமாற்றமாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் கனாகாணும் காலங்கள் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று அபிஷேக் பெயரையும் போட்டியாளர்கள் பலர் கூறியிருந்தனர். இதனை பார்த்ததும் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக உள்ளது. அப்படி என்றால் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கிற மாதிரி இவர் அவ்வப்போது பெர்ஃபார்மன்ஸ் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அதை வெளியில் காட்டாமல் தான் இருந்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications