மனதிலிருக்கும் விஜே சித்ராவின் உருவத்தை நெஞ்சில் குத்திய ரசிகர்... மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை: மனசுக்குப் பிடித்தவர்கள் மறைந்தாலும் தன்னுடைய அன்பு மறையாது என்பதை விஜே சித்ராவின் ரசிகர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
பலரும் வியந்து போகும் அளவில் அவர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மறைத்தாலும் மறையாத பாசம்
வாழ்ந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்று ஒரு பாடல் உண்டு. அந்த பாடலுக்கு தகுதியானவர்களின் விஜே சித்ராவும் ஒருவர். அவர் இந்த மண்ணுலகை விட்டு சென்று விட்டாலும் அவருடைய ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார் என்பதை பல நேரங்களில் அவருடைய ரசிகர்கள் நிரூபித்து வருகின்றனர். அவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் ஒரு விஜேவாகவும் பலருக்கும் பரிச்சயமானவர். தன்னுடைய பேச்சால் எப்போதும அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் குணத்துக்கு சொந்தக்காரர் தான் விஜே சித்ரா.

முல்லையாக வாசனை
தான் ஒரு மனநல மருத்துவராக இருப்பதால் அடுத்தவர்களின் முகத்தை பார்த்து அவர்களுக்கு தேவையான ஆறுதல் கூறி விடும் ஒரு கேரக்டராக இருந்ததால் தான் இவருக்கு நடிப்பை தாண்டி ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்துள்ளனர். சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முல்லை கேரக்டரில் பல ரசிகர்களின் மனதில் தனக்கென்று பெரிய இடத்தை பிடித்துவிட்டார். முல்லை என்று சொன்னால் இப்ப வரைக்கும் பலருடைய மனதில் நினைவுக்கு வருவது வீட்டில் சித்ராவின் முகம் தானாம்.

ரசிகர்களை கவர்ந்த அந்த கேரக்டர்
தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி ஒரு சில வாரங்களுக்குள் அவருடைய திடீர் மரணம் ரசிகர்களை வெகுவாக பாதித்து விட்டது. அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்று இப்ப வரைக்கும் சரியாக வெளியே தெரியவில்லை என்றாலும் அவருடைய இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய ரசிகர்கள் உறவினர்களை போல துடித்து வருகின்றார்கள். தற்போது விஜே சித்ராவின் ரசிகர் ஒருவர் செய்த செயல் சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெஞ்சில் பூத்த பூ முகம்
விஜே சித்ரா தான் ஒரு பிரபலமாக இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களிடம் அவர் எப்போதும் பாசமாகவும் ஜாலியாகவும் தான் பழகி வந்துள்ளார். ரசிகர்களுடன் நேரடியாக இவர் பழகி வந்ததால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வந்ததால் ரசிகர்களிடம் இவர் அதிகமாக நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத இவருடைய தீவிரமான ரசிகர் ஒருவர் அவருடைய உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்ததும் பல ரசிகர்கள் விஜே சித்ராவை நினைத்து ஃபீல் பண்ணி வருகிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications